உலகின் மிகச்சிறிய கார் இதுதான்... இந்திய இளைஞரின் விடாமுயற்சிக்கு கிடைக்கப்போகும் பரிசு 'தடை'

உலகின் மிகச்சிறிய மாருதி சுஸுகி ஜிப்ஸி காரை இந்திய இளைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கு (Maruti Suzuki Gypsy) பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டாலும், இன்றளவும் ஆஃப் ரோடு ஆர்வலர்களின் முதல் சாய்ஸ் ஜிப்ஸிதான்.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

மாருதி சுஸுகி ஜிப்ஸியை, இந்திய ராணுவத்தின் செல்லப்பிள்ளை என்றும் சொல்லலாம். கடந்த 1991ம் ஆண்டில் இருந்து மாருதி சுஸுகி ஜிப்ஸியை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. தற்போது கூட இந்திய ராணுவத்திடம் ஆயிரக்கணக்கான ஜிப்ஸிக்கள் உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

இந்த சூழலில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சேர்ந்த ஜாகிர் கான் என்பவர், மினி ஜிப்ஸி ஒன்றை உருவாக்கியுள்ளார். அனேகமாக இதுதான் உலகின் மிகச்சிறிய மாருதி சுஸுகி ஜிப்ஸியாக இருக்க கூடும். இது ''ஹோம் மேட்'' என்பதுதான் இதன் முக்கியமான சிறப்பம்சம்.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

வழக்கமான கார்களை மாடிபிகேஷன் (Modification) செய்வதில், ஜாகிர் கானுக்கு ஆர்வம் அதிகம். இந்த ஆர்வம் காரணமாகவே, கார் மாடிபிகேஷனில் அவரால் நிபுணத்துவம் பெற முடிந்துள்ளது. தற்போது அவர் உருவாக்கியுள்ள மினி ஜிப்ஸியின் சிறப்பம்சங்களும் அசத்தலாகதான் உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

ஜாகிர் கான் வடிவமைத்துள்ள மினி ஜிப்ஸியில், ஷிபானி டால்பின் ஹேட்ச்பேக் வகை காரினுடைய இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது என்ன ஷிபானி டால்பின் என்ற சந்தேகம் உங்களில் பலருக்கும் எழலாம். ஷிபானி டால்பின் என்ற கார் கடந்த 1982ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை. என்றாலும் இந்த மினி ஜிப்ஸியை உந்தி தள்ள தற்போது அதன் இன்ஜின் பயன்பட்டுள்ளது. இது 848 சிசி, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இதில், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

இந்த சூழலில் ஷிபானி டால்பின் காரின் இன்ஜின் அப்படியே மினி ஜிப்ஸியில் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவான ஆக்ஸலரேஷனுக்காக இந்த இன்ஜினில் சில மாற்றங்களை ஜாகிர் கான் செய்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

ஜாகிர் கான் உருவாக்கியுள்ள மினி ஜிப்ஸியின் உயரம் 3 அடி மட்டுமே. இதனால் சாலைகளில் அனைவரின் கவனத்தையும் இது ஈர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் இந்த மினி ஜிப்ஸியை ஜாகிர் கான் உருவாக்கியுள்ளார். காரை பார்த்தவுடன் அது நமக்கு புரிந்து விடுகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

இந்த மினி ஜிப்ஸியில் மொத்தம் 4 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 2 இருக்கைகள் கேபினுக்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 இருக்கைகள், பின் பகுதியில் திறந்தவெளியில் உள்ளன. இதில், பின் பகுதி இருக்கைகளை தேவைக்கு ஏற்ப நீக்கவும், அட்டாச் செய்து கொள்ளவும் முடியும்.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

இந்த மினி ஜிப்ஸியின் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாப் ஸ்பீடை எட்ட மிக நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது என்பது இதன் குறைபாடாக கருதப்படுகிறது. அதேபோல் 4 வீல் டிரைவ் (4WD) சிஸ்டம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

ஷிபானி டால்பின் இன்ஜினை கொண்டு, உலகின் மிகச்சிறிய ஜிப்ஸியை வடிவமைத்ததற்காக, கின்னஸ் உலக சாதனைக்கு ஜாகிர் கான் விண்ணப்பிக்க உள்ளார். தற்போது யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி இந்த மினி ஜிப்ஸியை ஜாகிர் கான் பொது சாலைகளில் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

பிரகாசமான நியான் பச்சை நிறத்தில் இந்த மினி ஜிப்ஸி பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறமும் கூட அனைவரையும் திரும்பி பார்க்க செய்யும் வகையில்தான் உள்ளது. இதன் முன்பகுதி க்ரில்லில் சுஸுகி லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

கார்டாக் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இதன் இன்டீரியர்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இதுவும் பார்ப்பதற்கு அருமையாகதான் உள்ளது. இந்த மினி ஜிப்ஸியின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இப்படி பல்வேறு வழிகளில் ஆல்டர் செய்வதில் ஆர்வமும், திறமையும் மிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பாதிக்கப்பட போகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் தடைக்கு மத்தியில் உலக சாதனை படைக்க போகும் இளைஞர்... என்ன செய்தார் என தெரியுமா?

ஆம், வாகனங்களை ஆல்டர் செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இளைஞர்களின் ஆர்வத்திற்கு இடையேயும், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை மறுத்து விட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வெளியான விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
World’s Smallest Maruti Gypsy Made By Bangalore Youngster: Waiting For Guinness World Record. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X