Just In
- 3 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 3 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 6 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சூப்பர்... இந்தியாவில் மைலேஜை வாரி வழங்க கூடிய கார்கள் இவைதான்... விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கிடைக்கும் 10 சிறந்த மைலேஜ் கார்கள் என்னென்ன? அவற்றின் விலை எவ்வளவு? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய வாடிக்கையாளர்கள் கார் வாங்கும்போது மைலேஜ் என்ற விஷயத்திற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனெனில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மிக அதிக விலையில் விற்பனையாகி வருகிறது. எனவே நல்ல மைலேஜை வழங்கும் கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டால், அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம்தான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்கிறது என்றால் மிகையல்ல. ஆம், மாருதி சுஸுகி நிறுவன கார்கள்தான், மைலேஜில் தலை சிறந்து விளங்குகின்றன. எனவேதான் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகியால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
ஆனால் மாருதி சுஸுகி மட்டுமல்லாது, வேறு சில நிறுவனங்களும், நல்ல மைலேஜை வழங்க கூடிய கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த வகையில், இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் நல்ல மைலேஜை வழங்க கூடிய கார்களின் பட்டியலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு உதவும்.
மாருதி சுஸுகி டிசையர் (பெட்ரோல், டீசல்)
மாருதி சுஸுகி டிசையர் கார் ஒரு லிட்டருக்கு 22 கிலோ மீட்டர்கள் முதல் 28 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்க கூடியது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடனும் இந்த கார் கிடைக்கிறது. செடான் ரக காரான மாருதி சுஸுகி டிசையர், 5.83 லட்ச ரூபாய் முதல் 9.53 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாருதி சுஸுகி ஸ்விப்ட் (பெட்ரோல், டீசல்)
மாருதி சுஸுகி டிசையரை போலவே, ஸ்விப்ட்டும் நல்ல மைலேஜை வழங்க கூடிய கார்தான். இந்த கார் ஒரு லிட்டருக்கு, 22 கிலோ மீட்டர்கள் முதல் 28 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜை வழங்க கூடியது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என 2 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடனும் மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் கிடைக்கிறது. இதன் விலை 5.14 லட்ச ரூபாய் முதல் 8.84 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்).
மாருதி சுஸுகி சியாஸ் (பெட்ரோல்)
மாருதி சுஸுகி சியாஸ் காரில், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 28.09 கிலோ மீட்டரை மைலேஜ் வரை வழங்க கூடியது. இந்த கார் 8.31 லட்ச ரூபாய் முதல் 11.09 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
மாருதி சுஸுகி பலேனோ (பெட்ரோல், டீசல்)
மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உடனும் மாருதி சுஸுகி பலேனோ கிடைக்கிறது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 27.39 கிலோ மீட்டர்கள் வரையிலான மைலேஜை வழங்க கூடியது. இந்த கார் 5.63 லட்ச ரூபாய் முதல் 8.96 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
மாருதி சுஸுகி இக்னிஸ் (பெட்ரோல்)
மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேனுவல், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 20.89 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. மாருதி சுஸுகி இக்னிஸ் கார் 4.83 லட்ச ரூபாய் முதல் 7.14 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
மாருதி சுஸுகி எர்டிகா (பெட்ரோல், டீசல்)
இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் மாருதி சுஸுகி எர்டிகா காரில் கிடைக்கின்றன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 25.47 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்க கூடியது. 7.59 லட்ச ரூபாய் முதல் 11.2 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எர்டிகா விற்பனையாகிறது.
ஹோண்டா அமேஸ் (பெட்ரோல், டீசல்)
ஹோண்டா அமேஸ் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. மேலும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. ஹோண்டா அமேஸ் கார், ஒரு லிட்டருக்கு 27.4 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்க கூடியது. 6.09 லட்ச ரூபாய் முதல் 9.95 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் அமேஸ் கிடைக்கிறது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (பெட்ரோல், டீசல்)
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. அதேபோல் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 26.2 கிலோ மீட்டர் மைலேஜ் வரை வழங்க கூடியது. 5.04 லட்ச ரூபாய் முதல் 8.04 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரும் விலைகளில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.
டாடா டியாகோ (பெட்ரோல்)
டாடா டியாகோ கார் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும் கிடைக்கிறது. ஆனால் மேனுவல், ஆட்டோமெட்டிக் என 2 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 23.84 கிலோ மீட்டர்கள் மைலேஜை வழங்க கூடியது. 4.6 லட்ச ரூபாய் முதல் 6.6 லட்ச ரூபாய் வரையிலான டாடா டியாகோ கார் விற்பனை செய்யப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டாடா டிகோர் (பெட்ரோல்)
டாடா டியாகோவை போல், டாடா டிகோர் காரிலும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இதிலும் மேனுவல், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ஒரு லிட்டருக்கு 20.3 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. 5.75 லட்ச ரூபாய் முதல் 7.49 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் டாடா டிகோர் விற்பனை செய்யப்படுகிறது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..