இருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...

இந்தியாவில் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கு சட்டப்படி 18 வயதாகி இருக்க வேண்டும். இருப்பினும் இந்த வயதிற்குள்ளாக ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது சாலையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கிக்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றவாறு தான் உள்ளது. இந்த வகையில் 10 வயது சிறுவன் ஒருவன் டாடா நெக்ஸான் மாடலை பொது சாலையில் ஓட்டி சென்றுள்ளான். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...

ஓட்டுனர் உரிமத்தை பெற 18 வயதாகி இருக்க வேண்டும் என்ற கட்டாயம், வாகனங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இயக்கும் விதத்தில் தான் வடிவமைக்கப்படுகிறது என்ற காரணத்தினால் மட்டுமில்லாமல் 18 வயது தாண்டிய பிறகு தான் போக்குவரத்து விதிமுறைகளை தெரிந்தும், அறிவில் சற்று முதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள் என்ற காரணங்களாலும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...

இதனால் தான் 18 வயதிற்குள் உள்ள சிறுவர்கள் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் இந்த சட்டத்தினை மீறுவதின் தொடர்ச்சியாக 10 வயது சிறுவன் பொது சாலையில் டாடா நெக்ஸான் மாடலை ஓட்டியுள்ளான். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

இருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...

கருனேஷ் கௌஷல் என்பவரால் யூடியுப்-ல் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள சிறுவனுக்கு 10-11 வயது இருக்கும். அவன் ஓட்டி சென்றுள்ள காரில் அவன் உடன் பக்கத்தில் அவனது உறவினரும் அமர்ந்துள்ளார். பின்புறத்தில் மற்றொரு சிறுவனும் உள்ளான்.

இந்த இருவர்களை வைத்து கொண்டு தான் அந்த சிறுவன் ஆபத்தை உணராமல் காரை ஓட்டி செல்கிறான். அவனுக்கு உயரம் பத்தவில்லை. இதனால் ஸ்டேரிங் சக்கரம், ஆக்ஸலேரட்டர், ப்ரேக் மற்றும் க்ளட்ச் பெடல்கள் என அனைத்தையும் கண்ட்ரோல் செய்ய சீட் பெல்ட்டை அணியாமல் ஓட்டுனர் இருக்கையின் முனையில் அமர்ந்துள்ளான்.

இருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...

இருப்பினும் அவனால் டேஸ்போர்ட்டை தாண்டி முன்னே செல்லும் வாகனங்களை நிச்சயம் முழுமையாக பார்த்திருக்க முடியாது. இதுதான் மிக பெரிய விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான விஷயமாகும். ஆனால் நல்லவேளையாக அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் சாலையில் குறைவாக இருந்ததால் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

MOST READ: அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

இருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...

இந்த சட்டத்திற்கு புறமான செயலில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள டாடா நெக்ஸான் கார், தோற்றத்தில் பெரியது, இயக்குவதற்கு கடினமானது. பக்கவாட்டு கண்ணாடிகளை சரியாக பார்க்காத இந்த சிறுவன் காரை பல முறை ஓட்டிய அனுபவம் உள்ளது போல் மேனுவலாக ட்ரைவிங் செய்கிறான்.

இருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...

கியர்ஷிஃப்ட்டை சரியான நேரங்களில் பயன்படுத்தி காரின் வேகத்தை சீராக வைத்திருந்தாலும், அவனால் காரை சவுகரியமாக இயக்க முடியவில்லை. இதனால் இது உயிருடன் விளையாடுவது போன்றதே. இதுபோன்ற செயல்களை யவரும் ஊக்கப்படுத்த கூடாது.

MOST READ: இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...

இவ்வாறு சிறுவர்கள் காரை இயக்கி வருவதை போலீசார் கண்டால், மோட்டார் வாகன சட்டத்தின்படி காரின் உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் மூன்று வருடம் வரையிலான சிறைத்தண்டனை உள்ளிட்டவை வழங்கப்படுவது மட்டுமில்லாமல் காரின் பதிவும் ரத்து செய்யப்படும். மேலும் அந்த சிறுவருக்கும் சிறார் நீதி சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Letting a 10 year old kid drive a Tata Nexon on public roads is absolutely STUPID
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X