இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று 2020ஆம் ஆண்டிற்கு ஏற்ற விதத்தில் மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

2002ல் முதன்முதலாக அறிமுகமாகி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவந்த மஹிந்திராவின் அடையாளமான ஸ்கார்பியோ அதன் முரட்டுத்தனமான தோற்றத்தால் சந்தையிலும், மக்களின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

தற்சமயம் விற்பனையில் இருப்பது ஸ்கார்பியோவின் நான்காம் தலைமுறை ஆகும். 2017ல் அறிமுகமான இந்த தலைமுறைக்கு பிறகு புதிய அப்டேட் வெர்சனை களமிறக்க மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நீண்ட வருடங்களாக சந்தையில் இருக்கும் இந்த மாடலின் பழைய தலைமுறை காரை தற்சமயம் வைத்திருப்பவர்கள் என்று பார்த்தால் வெகு சிலர் தான்.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

அத்தகையவர்களில் ஒருவர் தான் தனது ஸ்கோர்பியோ காரை தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையான தோற்றத்திற்கு மாடிஃபைடு செய்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பழைய தோற்றத்தில் இருந்து புதிய தோற்றத்திற்கு கார் எவ்வாறு மாற்றப்படுகிறது என்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

மேலும் இந்த வீடியோவில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பார்க்கும்போது இந்த மாடிஃபைடு பணியில் முற்றிலும் ஒரிஜினல் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான மாற்றத்தை ஏற்றிருப்பது 2011ல் விற்பனையான இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ காராகும்.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

இது மாடிஃபைடு மாற்றத்தால் புதிய க்ரில், புதிய பம்பர், புதிய ஹெட்லேம்ப்கள், புதிய ஃபாக் விளக்குகள், புதிய ஃபெண்டர் மற்றும் புதிய பொனெட் மூடி என முன்புற பாகங்கள் மொத்தத்தையும் புதியதாக பெற்றுள்ளது. அதேபோல் பழைய பெயிண்ட்டை காட்டிலும் சிறப்பான டுபோண்ட் அதிபளபளப்பு கொண்ட கருப்பு நிற பெயிண்ட்டை ஏற்றுள்ளது.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

பக்கவாட்டு படிக்கட்டிற்கும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பெயிண்ட் அமைப்பு மற்றும் 22 இன்ச்சில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களினால் நிச்சயம் இந்த ஸ்கார்பியோ கார் சாலையில் செல்வோரை கவர்ந்திழுக்கும். பின்புறத்தில் டெயில்கேட்டில் இருந்து டெயில்லேம்ப் உள்பட சில பாகங்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

பின்பக்க பம்பர் நான்காம் தலைமுறை ஸ்கார்பியோவில் இருந்து பெறப்பட்டுள்ளது. மற்றப்படி உட்புற கேபினின் வசதிகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை. முன் இருக்கைகள் ஹோண்டா சிஆர்வி மாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

டேஸ்போர்டு அதே டிசைனில் வழங்கப்பட்டிருந்தாலும், மொத்த கேபினும் நப்பா லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைமண்ட் பேட்டர்னில் உள்ள லெதர் அமைப்பு கேபினிற்கு கூடுதலான ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. நல்ல நிலையில் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ கார் ரூ.5 லட்சம் அளவில் விற்பனை செய்யப்பட்டது.

இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...

சுமார் 1 மாதமாக நடைபெற்ற இந்த மாடிஃபைடு பணிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் செலவானதாக இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் புதியதாக வழங்கப்பட்டுள்ள அனைத்து பாகங்களும் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திரா நிறுவனம் 2014ல் ஸ்கார்பியோ மாடலில் மிக முக்கிய சேசிஸ் மாற்றத்தை கொண்டுவந்திருந்தது. இந்த மாடிஃபைடு மாற்றங்கள் அனைத்தும் காரின் வெளிப்புற தோற்றத்தை மாற்றவே கொண்டுவரப்பட்டுள்ளதால் என்ஜின் உள்பட மற்ற இயந்திர பாகங்களில் எந்த அப்கிரேடும் செய்யப்படவில்லை.

Image Courtesy: Hybrid Customs

Most Read Articles

English summary
Ten-year old Mahindra Scorpio SUV converted to 2020 model [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X