ஆச்சரியம்... திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு..! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்..!

திருவிழாவை மிஞ்சும் வகையில் புத்தம் புதிய கியா சொனட் கார் வழங்கும் நிகழ்வு நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இந்தியாவிற்கான மூன்றாம் மாடலாக கியா நிறுவனம், சொனெட் எனும் எஸ்யூவி ரக கரை இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது. மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இக்காருக்கு அதன் சகோதரரான செல்டோஸ் எஸ்யூவி காருக்கு கிடைத்ததைப் போலவே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இந்த கார் விற்பனைக்கு அறிமுகமான அன்றைய தினமே சுமார் 25 ஆயிரம் புக்கிங்குகளைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இக்கார் கடந்த 18ம் தேதி அன்றுதான் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, தற்போதும் இக்காருக்கான புக்கிங் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்துள்ளது.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் கியா நிறுவனத்தின் டீலர் ஒருவர் ஒரே நேரத்தில் 15 பேருக்கு சொனெட் எஸ்யூவி காரை டெலிவரி வழங்கியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. இந்த கார் வழங்கும் நிகழ்வானது ஓர் திருவிழாவைப் போன்று அரங்கேறியிருக்கின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

கியா நிறுவனத்திற்கு கிடைத்து வரும் இந்த உச்சபட்ச வரவேற்பு இந்தியாவின் பிற வாகன நிறுவனங்களிடையே பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கொரோனா வைரஸ் வருவதற்கு முன்னரில் இருந்தே, அதாவது நடப்பு 2020ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே மிகப்பெரிய வாகன விற்பனை வீழ்ச்சியை இந்தியா சந்தித்து வருகின்றது.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், ஒரு யூனிட்டைக் கூட விற்பனைச் செய்ய முடியாமல் வாகன விற்பனையாளர்கள் திணறி வந்தனர். இந்த நிலையில் இருந்து லேசான தளர்வுகளின் மூலம் வாகன நிறுவனங்கள் தற்போதே மீள தொடங்கியிருக்கின்றன.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இருப்பினும், முந்தைய காலங்களில் கிடைத்த வரவேற்பு தற்போதும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. எனவே வாகன விற்பனையை ஊக்குவிக்க சுலப தவணை, சிறப்பு சலுகைகள் உள்ளிட்டவற்றை டாடா முதல் மாருதி வரையிலான புகழ்வாய்ந்த நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இம்மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவில் கால் தடம் பதித்த மிக குறுகிய காலத்தில் இந்தியர்களின் நற்மதிப்பைப் பெற்று கியாவின் தயாரிப்புகள் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. எனவேதான், தற்போது ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறையுமே கியா நிறுவனத்தைப் பார்த்து பொறாமைப்பட தொடங்கியிருக்கின்றன.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இதுபோன்று ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கார்களை டெலிவரிக்கு வழங்குவது கியா கார் விற்பனையாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. முன்னதாக, செல்டோஸ் எஸ்யூவி மற்றும் கார்னிவல் லக்சூரி எம்பிவி ஆகிய கார்களையும்கூட இதேபோன்று அதிக எண்ணிக்கையில் அவர்கள் டெலிவரி செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதன் வரிசையிலேயே தற்போது கியா சொனெட் எஸ்யூவி காரும் இணைந்திருக்கின்றது. கியா சொனெட்டின் எச்டிகே, எச்டிகே ப்ளஸ், எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ் ப்ளஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆகிய அனைத்து வேரியண்டுகளும் கலவையாக தற்போது டெலிவரி வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த ஆட்டோ வால்க் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

டெலிவரி வழங்கிய வீடியோவைத் தொடர்ந்து, அண்மையில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு இக்கார முதல் டெஸ்ட் டிரைவ் செய்திருந்தது. அதுகுறித்த தகவலையும் வீடியோவாக கீழே காணலாம். கியா சொனெட் காரில் எண்ணற்ற சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதே அந்த கார் இமாலய அளவில் விற்பனையைப் பெறுவதற்கு காரணமாக இருக்கின்றது.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இந்த கார் சிறப்பம்சங்களை மட்டுமின்றி கவர்ச்சியான தோற்றத்திலும் காட்சியளிக்கின்றது. இவையனைத்தும்தான் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த காரில் காற்றோட்டத்தை உறுதிச் செய்யக்கூடிய இருக்கைகள், போஸ் சவுண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் யுவிஓ இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

இதுமட்டுமின்றி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இக்காரில் வழங்கப்பட்டிருக்கும் யுவிஓ இணைப்பு அம்சத்தின் மூலம் சொனெட்டில் இருக்கும் 57 கருவிகளை செல்போன் வாயிலாகவே கட்டுப்படுத்த முடியும் என்பது கவனித்தக்கது. இதில், காரை ஆன்/ஆஃப் செய்வது, க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஏசி சிஸ்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்களை நம்மால் செய்ய முடியும்.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

கியா சொனெட் எஸ்யூவி கார் தற்போது மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய தேர்வுகளில் அது கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின்: இந்த எஞ்ஜின் இருவிதமான ட்யூன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, 100பிஎஸ்/240என்எம் டார்க் மற்றும் 115பிஎஸ்/250என்எம் ஆகிய திறன் வித்தியாசங்களில் டீசல் எஞ்ஜின் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வையும் இந்த எஞ்ஜின் வழங்குகின்றது.

திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு! வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்... ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகளா!

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின்; இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இதுபோன்ற எஞ்ஜின் தேர்வையை ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ காரும் வழங்கி வருகின்றது.

Most Read Articles
மேலும்... #கியா #kia motors
English summary
15 Kia Sonet Delivered Together In A Day. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X