Just In
- 4 min ago
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- 8 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 10 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
Don't Miss!
- News
செங்கோட்டை வன்முறை.. பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்து மீது எப்.ஐ.ஆர்.. டெல்லி போலீஸ் நடவடிக்கை
- Movies
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதுசு வாங்க வேண்டாம்... 1948 ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றிய டெல்லி ஐஐடி...
1948 ஃபோக்ஸ்வேகன் பீட்லி கார் ஒன்று எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1948 ஃபோக்ஸ்வேகன் பீட்லி (Volkswagen Beetle) கார் ஒன்றை, டெல்லி ஐஐடி தற்போது எலெக்ட்ரிக் காராக மாற்றி அசத்தியுள்ளது. மிகவும் பழைய விண்டேஜ் கார் ஒன்று, நிகழ் காலத்திற்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக மாற்றம் செய்யப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிஇஆர்சிஏ (CERCA - Center For Excellence for Research on Clean Air) இந்த திட்டத்தை செயல்படுத்தியது.

இது டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் சிந்தனை குழுவாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி, வணிக ரீதியாக அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தால், தற்போது பெட்ரோல், டீசல் கார்களை வைத்திருப்பவர்கள், எலெக்ட்ரிக் காருக்கு தனியாக முதலீடு செய்ய வேண்டியதில்லை.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தற்போதைய நிலையில், பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் கார்களின் விலை சற்று அதிகமாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் கார்களை வாங்க பலர் தயங்குகின்றனர். அவர்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் கார்களையே பயன்படுத்தும் சூழல் காணப்படுகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பம் மூலம், பெட்ரோல், டீசல் கார்களை, எலெக்ட்ரிக் காராக மாற்றி கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

குறைந்த அளவிலான மாற்றங்களுடன், 1948 ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரை, எலெக்ட்ரிக் காராக மாற்றம் செய்திருப்பது இந்த திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயினுக்கு வழி ஏற்படுத்துவதற்காக, இன்ஜின் மற்றும் ஒரு சில பாகங்கள் மட்டுமே இந்த காரில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

தேவை ஏற்பட்டால், காரை அதன் பெட்ரோல் வடிவத்திற்கு மீண்டும் எளிதாக மாற்ற முடியும் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றிய பின் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது? என ஒரு சிலருக்கு சந்தேகங்களும், கவலைகளும் இருந்து வருகின்றன. அவர்களுக்கு இந்த பதில் போதுமானதாக இருக்கும்.

ஆம், தேவை ஏற்படும்பட்சத்தில், எலெக்ட்ரிக் வடிவத்தில் இருந்து மீண்டும் எரிபொருள் வடிவத்திற்கு எளிதாக மாற்றி கொள்ளலாம். மேலும் பெட்ரோல், டீசல் கார்களை, எலெக்ட்ரிக் கார்கள் மாற்றும் தொழில்நுட்பமானது, கிளாசிக் விண்டேஜ் கார்களை வைத்திருப்பவர்களுக்கும், அவற்றை சேகரிப்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும்.

ஏனெனில் விண்டேஜ் கார்களுக்கான பாகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். அத்துடன் அவற்றின் இன்ஜினில் பிரச்னைகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும் அவை செயல்படுவதையும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் இந்த தொழில்நுட்பம் மூலம், எலெக்ட்ரிக் காராக மாற்றி கொள்ள முடியும் என்பதால், மேற்கண்ட பிரச்னைகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்படும்.

எலெக்ட்ரிக் பவர்டிரெயினுக்கு மட்டும் மாற்றி விட்டு, காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை அதன் உண்மையான தோற்றத்திலேயே தக்க வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் விண்டேஜ் கார்களின் அசல் தோற்றத்தை இழக்க வேண்டிய சூழல் உருவாகாது. அதிர்வுகளை குறைந்த அளவில் மட்டுமே உருவாக்கும் என்பது எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன்களின் மற்றொரு நன்மை ஆகும்.