ஸ்கூட்டர் (அ) ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்!

2 இன் 1 வசதி கொண்ட மின்சார வாகனத்தை பிரபல ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது. இதனை தேவைக்கேற்ப ஸ்கூட்டராக அல்லது ஆட்டோவாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹீரோ நிறுவனம், எதிர்கால தேவையை உணர்ந்து மின்சார வாகன உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றது.

அந்தவகையில், உலகிலேயே ட்யூவல் (இரு) வசதி கொண்ட முதல் மின்சார வாகனத்தை காட்சிப்படுத்தியுள்ளது. கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மின்சார வாகனம் தேவைப்பட்டால் ஸ்கூட்டராக அல்லது ஆட்டோவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

இதுவே, இந்த வாகனத்தின் மிகச்சிறப்பானந ஓர் அம்சமாக உள்ளது. இந்த பிரத்யேக வாகனத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஓர் நிகழ்வில் ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகம் செய்திருக்கின்றது. அங்குதான் இந்நிறுவனத்திற்கான ஆர்&டி மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

ஹீரோ நிறுவனம், இந்த இரு பயன்கொண்ட மின்சார வாகனத்திற்கு குவார்க் 1 என்று பெயரை வைத்துள்ளது. 2 இன் 1 வசதிகொண்ட இது மிக விரைவில் விற்பனைக்கான உற்பத்தியைப் பெறலாம்ம என எதிர்பார்க்கப்படுகின்றது. வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரிவாக கீழே காணலாம்....

தற்போது நிலவும் அதிக வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஹீரோ நிறுவனம் இந்த குவார்க் 1 எலெக்ட்ரிக் வாகனத்தை வடிவமைத்திருக்கின்றது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

இந்தியா போன்ற வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் காணப்படும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக அதீத வாகன எண்ணிக்கை இருக்கின்றது. இது மக்கள் தொகைக்கு இணையாக நாளுக்கு நாள் புதிய வளர்ச்சியை அடைந்து வருகின்றது.

ஆகையால், வாகனத்தில் 2 இன் 1 வசதி அறிமுகப்படுத்தினால் கணிசமாக வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

அதனடிப்படையிலேயே இந்த இலகு ரக வாடகை ரீதியாக பயன்படுத்தக்கூடிய வாகனத்தை ஹீரோ தயாரித்துள்ளது. இதில், எல்5 என்பதை மூன்று சக்கர வாகனமாகவும், இருசக்கர வாகனத்தை எல்2 என்றும் ஹீரோ குறிப்பிடுகின்றது. இவையிரண்டும் ஒன்றினையும்போதே அது குவார்க் 1 ஒன்றாக மாறுகின்றது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

மேலும், இதனை இந்திய மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டே ஹீரோ உற்பத்தி செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், விரைவில் உற்பத்திக்கான அங்கீகாரம் பெற்று சந்தையை கலக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோவின் இந்த வாகனம் தனி பயனர் மட்டுமின்றி வாடகை வாகன ஓட்டுநர்கள் என இரு தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக இதுபோன்று இரு பயனுடைய வாகனம் இதற்கு முன்னதாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

இதன்காரணமாகவே, ஜெய்ப்பூரில் நடைபெற்ற அறிமுகத்தின்போது அநேகரின் கவனத்தை குவார்க் 1 கவர்ந்தது. இந்த வாகன அறிமுகத்துடன் கூடுதலாக நான்கு வழக்கமான வாகனங்களையும் அறிமுகம் செய்தது ஹீரோ.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

ஆனால், அறிமுகம் செய்யப்பட்ட இந்த நான்கு வாகனத்தில் குவார்க்1 அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்ற வகையிலான தயாரிப்பாக உள்ளது. இந்த வாகனம் எப்போது சந்தைக்கும் வரும் இதில் என்ன மாதிரியான தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் தோன்றியுள்ளது.

அதேசமயம், இது எப்படி ஸ்கூட்டரில் இருந்து ஆட்டோவாக உருமாறுகின்றது என்ற கேள்வியும் எழும்பிய வண்ணம் உள்ளது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

உருமாற்றத்திற்காக ஆட்டோவின் முகப்பு பகுதியில் ஓர் நுழைவு பகுதி நிறுவப்பட்டுள்ளது. இது, ஸ்கூட்டரின் பின் பகுதி உள்ளே செலுத்துவற்காக கொடுக்கப்பட்ட வழியாகும். ஆட்டோவிற்கு தேவையான எஞ்ஜின் தனிப்பட்ட முறையில் நிறவப்படவில்லை.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த ஸ்கூட்டர் தேவைப்படும்போது தனி நபருக்கான இருசக்கர வாகனமாகவும், அடுத்த ரூபமாக ஆட்டோவுக்கான எஞ்ஜினாகவும் பயன்படுகின்றது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

இப்போது, உங்களுக்கு மற்றுமொரு சந்தேகமும் எழலாம். இந்த வாகனம் நான்கு சக்கரத்தில் இயங்குகின்றதா என்று. ஆனால், இதுகுறித்து மிக தெளிவான தகவல் கிடைக்கவில்லை. ஆட்டோவுடன் இணைக்கும் ஸ்கூட்டரின் பின்பக்க வீலுக்கும், தரைக்கும் தொடர்பு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோவின் வித்தியாசமான இரு பயன் கொண்ட வாகனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எம்360 மற்றும் ஏஎம்எஸ்இபி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

இத்துடன், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களாக பேட்டரி மானிட்டரிங், ஜிபிஎஸ், ஓடிஏ மற்றும் நேரடி இணைப்பு வசதி உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ நிறுவனம் குதிரை வண்டிகளை நினைவில் கொண்டு இந்த வாகனத்தை தயாரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

பண்டைய கால மனிதர்களின் முக்கியமான போக்குவரத்து வாகனங்களில் ஒன்றாக குதிரைகள் இணைக்கப்பட்ட சாரட்டு வண்டிகள் இருந்தன. இந்த வண்டிக்கு தேவையான இழுவை திறனை குதிரைகளே வழங்கும். வெறும்கூடாக, ஆட்களை ஏற்றிச் செல்ல மட்டுமே சாரட்டு பயன்படும்.

ஸ்கூட்டர் (அ) ஆட்டோ - அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்...

அந்தவகையிலேயே, குதிரையின் இடத்தில் ஸ்கூட்டரையும், சாரட்டாக ஆட்டோ கூடும் இந்த குவார்க்1 காட்சியளிக்கின்றது. இது, பயன்பாட்டிற்கு வரும்போது இந்திய சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் விலை மற்றும் ரேஞ்ச் பற்றிய தகவல் வெளியாகவில்லை. விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதனை வெளியிட இருக்கின்றது.

3, 4 மற்றும் 5 ஆகிய புகைப்படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...

Most Read Articles
English summary
2 in 1 use Hero Quark1 Electric Concept Revealed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X