கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆடி நிறுவனம், அதன் போட்டி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் மிக குறைவான விற்பனையைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனைச் செய்து வரும் உலகப்புகழ்பெற்ற நிறுவனமான ஆடி, அதன் போட்டி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக் குறைவான விற்பனை விகிதத்தைப் பெற்றிருக்கின்றது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

இந்த சரிவினை கடந்த 2019ம் ஆண்டில் மட்டுமே ஆடி பெற்றிருக்கின்றாதா என்றால், இல்லை. தொடர்ச்சியாக கடந்த மூன்றாண்டுகளுக்கும் அதிகமாக விற்பனை சரிவில் சிக்கி ஆடி நிறுவனம் தவித்து வருகின்றது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

அதேசமயம், இதன் போட்டி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கணிசமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதை வைத்து பார்க்கையில் இந்தியர்கள் மத்தியில் ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு குறைந்து வருவது உறுதியாகியுள்ளது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

இந்த விற்பனை வீழ்ச்சியைப் பார்த்தால் அந்நிறுவனம் விரைவில் இந்தியாவை விட்டே ஓடிவிடலாம் என்ற கருத்துகள் ஒரு பக்கம் பரவிய வண்ணம் இருக்கின்றது. ஆனால், இது ஓர் வதந்தி (யூகம்)தான்... ஏனென்றால், இதற்கு முன்னதாக விற்பனை வீழ்ச்சியின் காரணமாக பல நிறுவனங்கல் சந்தையை விட்டு வெளியேறியிருக்கின்றன. இல்லையெனில் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து கூட்டணி வைத்து, சந்தையில் தொடர்ந்துள்ளன.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

ஆனால், ஆடி இத்தகைய முடிவை எடுக்காத என்று கருதப்படுகின்றது. ஏனெனில், ஆடி நிறுவனம் தற்போது சந்தித்துள்ள விற்பனை வீழ்ச்சியானது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத ஓர் வீழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. அப்படியானால், இதற்கு முன்பாகவும் ஆடி இதேபோன்று விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றது. எனவே, தொடர்ந்து இந்தியாவில் முன்னதாக நிலவி வந்த விற்பனையை எட்டுவதற்கான முயற்சியில் ஆடி போரடலாம் என்ற கருத்துகளும் பரவியவாறு இருக்கின்றது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, கடந்த 2019ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4,594 யூனிட்டுகளுக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றுள்ளது. இதையே கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 1,869 யூனிட்டுகள் வித்தியாசமாக இருக்கின்றது. அதாவது, 2018ல் ஒட்டு மொத்தமாக 6,463 யூனிட்டுகளை அது விற்பனைச் செய்தது. இந்த விற்பனை வீழ்ச்சியை கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே ஆடி சந்தித்து வருகின்றது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

லக்சூரி கார் விற்பனையில் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னிலையிலேயே இருக்கின்றது. 13,786 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இந்த இடத்தை அது பிடித்திருக்கின்றது. இதேபோன்று, பிஎம்டபிள்யூ நிறுவனமும் 9,000 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இவையிரண்டும்கூட முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் கணிசமான விற்பனைச் சரிவைப் பெற்றாலும், ஆடியளவிற்கு அது பெரும் தாக்கத்தைப் பெறவில்லை.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

கடந்த ஆண்டு இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் பெரியளவில் முனைப்புடன் செயல்படவில்லை. விற்பனை வீழ்ச்சியே இதற்கு காரமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆகையால், பெரியளவில் புதிய வாகனங்களை அது களமிறக்கவில்லை.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

ஆனால், புதுப்பிக்கப்பட்ட ஏ4 மற்றும் புத்தம் புதிய ஏ6 கார்களை மட்டுமே அறிமுகம் செய்தது. தொடர்ந்து, புதிய தலைமுறை சி8 மற்றும் ஏ6 மாடல்களின் உலகளாவிய அறிமுகத்திற்கு பின்னர் இந்தியக் கரைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் விலை ரூ. 54.20 லட்சம் ஆகும். இது, எக்ஸ்ஷோரூம் விலையாகும். இதுபோன்று குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே அது இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

இதைவைத்து பார்க்கையில் ஆடி நிறுவனம் பெரியளவில் ஈடுபாட்டுடன் செயல்படவில்லையோ என்று கருத்துக்கள் எழும்பச் செய்கின்றது. இருப்பினும், பெரியளவில் வரவேற்பு கிடைக்காத காரணத்தினாலயே இத்தைகய செயல்பாட்டில் இருக்கலாம் என கருத தோன்றுகின்றது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

அதேசமயம், விட்ட இடத்தைப் பிடிப்பதற்கான தீவிர முயற்சியிலும் அது களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, புதிய ரக மின் மற்றும் எரிபொருள் வாகனங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு, தக்க நேரத்திற்காக காத்திருப்பதாக கூறப்படுகின்றது.

கடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...?

ஒட்டுமொத்த விற்பனை தரவு பட்டியல்:

வருடம் ஆடி பென்ஸ் பிஎம்டபிள்யூ
2019 4,594 13,786 9,000
2018 6,463 15,538 10,405
2017 7,876 15,330 9,800
2016 7,720 13,231 7,500
2015 11,192 13,502 6,550
2014 10,851 10,201 6,200
2013 10,003 9,003 7,327
2012 9,003 6,840 9,375
2011 5,511 7,500 9,371
2010 3,003 5,819 6,246
Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
2019 Audi India Sales Decline. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X