2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...

மிக விரைவில் டட்சன் நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் படங்கள் டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து வெளியாகியுள்ளன. இதன் மூலம் கிடைத்துள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...

ஜிக்வீல்ஸ் செய்தி தளம் மூலம் வெளிவந்துள்ள இந்த படங்களில் காட்டப்பட்டுள்ளது, டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிட் வேரியண்ட் ஆகும். இதில் கார் L-வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஃப்ளெக்ஸ் சக்கரங்களுடன் காட்சியளிக்கிறது.

2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...

காரின் முன்புறத்தில் பெரிய அளவிலான க்ரில், க்ரோம் மற்றும் நேர்த்தியான ஹலோஜன் ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இவற்றிற்கு கீழே பார்த்தோமேயானல், L-வடிவிலான டிஆர்எல்களுடன் க்ரோம் பாகங்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...

புதிய சக்கர கேப்களுடன் உள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் டாப் வேரியண்ட்கள் அலாய் சக்கரங்களை பெற்றிருக்கலாம். காரின் பின்புறத்தில் அப்டேட்டான டெயில்லேம்ப்கள், எல்இடி பாகங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறம், அடிப்படையான டேஸ்போர்ட்டை ப்ரீமியம் தரத்தில் கொண்டுள்ளது.

2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...

கருப்பு நிறத்தில் உள்ள இந்த டேஸ்போர்டில் சில்வர் மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்தில் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 டின் யூனிட்களாக சிங்கிள்-டின் ஆடியோ சிஸ்டமும் மற்ற முக்கியமாக அம்சமாக ரீடிசைனில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

MOST READ: ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...

பிஎஸ்6 தரத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலிற்கு வழங்கப்பட்டுள்ள வழக்கமான 1.0 லிட்டர் மற்றும் 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் அதிகப்பட்சமாக முறையே 54 பிஎச்பி மற்றும் 68 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டவை.

2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...

இந்த இரு பெட்ரோல் என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக பொருத்தப்பட, 1.0 லிட்டர் என்ஜினிற்கு மட்டும் கூடுதல் தேர்வாக 5-ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்பட உள்ளது.

MOST READ: பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்..

2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...

இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.3 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டட்சன் ரெடி-கோவிற்கு முக்கிய போட்டி மாடல்களாக ரெனால்ட் க்விட் மற்றும் மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸா உள்ளிட்டவை உள்ளன.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
Your First Look At The 2020 Datsun redi-GO Facelift
Story first published: Wednesday, May 27, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X