2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணைத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

மிக பெரிய தாமதத்திற்கு பிறகு 2020 ஹோண்டா சிட்டி மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக தயாராக உள்ளது. இந்த நிலையில் இதன் வி, விஎக்ஸ், இசட்எக்ஸ் வேரியண்ட்கள் குறித்த விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

அறிமுகமாகவுள்ள இந்த ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் மாடல் அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் அனைத்து பரிணாம அளவுகளையும் அதிகமாக பெற்றுள்ளது. ஆசியன் க்ராஷ் சோதனை டெஸ்ட்டில் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களை பெற்றிருந்த 2020 சிட்டி காரின் உடல் அமைப்பு ஆனது அதி-உயர் இழுவிசை வலிமை எஃகை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

டீம்பிஎச்பி செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் வேரியண்ட்கள் குறித்த விபரங்களில் எண்ட்ரீ-லெவல் வி வேரியண்ட், ப்ரீமியம் தரத்தில் கருப்பு மற்றும் பழுப்பு என்ற ட்யூல்-டோன் நிறத்தில் உட்புற கேபினை பெற்றுள்ளது. இதில் இருக்கைகள், முன் & பின் கதவுகள் மற்றும் ஆர்ம் ரெஸ்ட்களில் உள்ள சாஃப்ட் பேட்கள் ஃபாப்ரிக்கால் மூடப்பட்டுள்ளன.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 5 ஸ்பீக்கர்களை கொண்ட இதன் உட்புற கேபினில் சுற்றிலும் பல இடங்களில் க்ரோம் காட்சியளிக்கின்றன. இவற்றுடன் பின்புற பயணிகளுக்கும் ஏசி வெண்ட்ஸ், சாய்க்கும் வசதி கொண்டதாக ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றையும் சிட்டி மாடலின் வி வேரியண்ட் பெற்றுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் உடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை பொதுவாக இதன் டாப் வேரியண்ட்களில் காட்சியளிக்கக்கூடியவை. ஆனால் தற்போது இவை இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

பாதுகாப்பிற்கு வி வேரியண்ட்டில் 4 காற்றுப்பைகள், பின்புற பார்க்கிங் சென்சார்ஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வாகன நிலைப்பாட்டு அசிஸ்ட் மற்றும் பின்புறம் பார்க்கும் கேமிரா உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. 2020 ஹோண்டா சிட்டி மாடலின் விஎக்ஸ், வி வேரியண்ட்டின் பெரும்பான்மையான வசதிகளை தான் அப்படியே பெற்றுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

இருப்பினும் வேறுபடுவதற்காக 16 இன்ச் ட்யூல் டோன், டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படவுள்ளன. இதேபோல் வெளிப்புறத்தில் அப்டேட்டாக லைட் சென்சாருடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் பின்புற பார்க்கிங் விளக்குகள் உள்ளிட்டவை கொடுக்கப்படவுள்ளன.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

உட்புறம் ஆட்டோ பின்ச் செயல்பாட்டுடன் ஒரு தொடுதல் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டேரிங் சக்கரம் & கியர் லிவருக்கு லெதர் உள்ளமைவு உள்ளிட்டவற்றுடன் 7 இன்ச் எச்டி டிஜிட்டல் கலர் டிஎஃப்டி பல தகவல்களை வழங்கக்கூடிய திரை, 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆறு காற்றுப்பைகள், தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய பக்கவாட்டு பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள், ஸ்டேரிங் ஸ்க்ரோல் செலக்டர் மற்றும் ஆட்டோ லாக்கிங் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

டாப் வேரியண்ட்டான இசட்எக்ஸ் பாதுகாப்பு மற்றும் பயண சவுகரியங்களில் வி, விஎக்ஸ் வேரியண்ட்களை தான் ஒத்திருந்தாலும், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி கைட் டர்ன் சிக்னல்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகளுடன் 9 எல்இடி வரிசையில் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஆட்டோ ஃபோல்டு செயல்பாட்டுடன் ஜன்னல் கண்ணாடிகளை பெற்றுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

கூடுதல் ப்ரீமியம் தோற்றத்திற்காக மரப்பலலையினால் உருவாக்கப்பட்ட டேஸ்போர்ட்டை கொண்டிருக்கும் இதன் கேபினில் முன் மற்றும் பின்புறத்தில் உள்ள பவர் கண்ணாடிகளை ஒரு தொடுதலின் மூலமாக ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியும்.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

இவை மட்டுமின்றி சன்ரூஃப், மைய கன்சோல் பாக்கெட் மற்றும் சுற்றிலும் வழங்கப்படும் விளக்குகளுக்கு ரிமோட் கண்ட்ரோலை பெறும் இந்த டாப் வேரியண்ட் முன்புறத்தில் மேப் லைட்டையும், ஃபுட்வெல்லையும் பெற்றுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு மேற்கூறப்பட்ட இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ளதை அப்படியே பெறும் இசட்எக்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக லேன் வாட்ச் கேமிரா வழங்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காரின் வேரியண்ட்கள் விபரம் இணையத்தில் கசிவு... எதை வாங்குவது சிறந்தது...?

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் இந்த ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் தற்போதைய தலைமுறையுடன் விற்பனையை தொடரவுள்ளது. ரூ.11-17 லட்சத்தில் விலையினை பெறவுள்ள இந்த புதிய செடான் காருக்கு மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ உள்ளிட்டவை போட்டியாக தொடர்ந்து விளங்கவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
2020 Honda City V, VX, ZX variant brochure leaks – Features detailed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X