டீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...?

இந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 2020 ஹோண்டா சிட்டி கார் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதன் ஸ்பை படங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

டீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...?

ஆட்டோ கார் இந்தியா செய்தி தளம் வெளியிட்டுள்ள இந்த ஸ்பை படங்களில் புதிய ஹோண்டா சிட்டி கார் டீலர்ஷிப் ஒன்றின் முன்பாக நிற்க வைத்திருந்த போது எடுக்கப்பட்டுள்ளது. இது சிட்டி மாடலின் ஐந்தாம் தலைமுறை காராகும்.

டீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...?
டீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...?

2020 ஹோண்டா சிட்டி காரில் மிக முக்கியமான மாற்றமாக இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது.

டீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...?

பிஎஸ்6 டீசல் என்ஜின் மூலமாக 98 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும். இந்த இரு என்ஜின்களுடனும் நிலையாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைப்படவுள்ளது. பெட்ரோல் என்ஜின் மட்டும் கூடுதலாக சிவிடி யூனிட்டை பெற்றுள்ளது.

டீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...?

2020 சிட்டி மாடலின் பெட்ரோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் முறையே 17.8 kmpl மற்றும் 18.4 kmpl மைலேஜ்ஜை பெற முடியும். ஆனால் அதேநேரம் இதன் டீசல் வேரியண்ட் 24.1 kmpl மைலேஜ்ஜை வழங்கவல்லதாக ஏஆர்ஏஐ அமைப்பு சான்றழித்துள்ளது.

டீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...?

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற சிறப்பம்சங்களாக முழு-எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், 7-இன்ச்சில் வண்ண நிறங்களில் டிஎஃப்டி மீட்டர், லேன் வாட்ச் கேமிரா, ஆறு காற்றுப்பைகள் மற்றும் சுறுசுறுப்பான ஹேண்ட்லிங் உதவியுடன் வாகன ஸ்டேபிளிட்டி அசிஸ்ட் உள்ளிட்டவை உள்ளன.

டீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...?

ரூ.11.5 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையினை பெறலாம் என கூறப்படும் சிட்டி செடான் மாடலின் புதிய ஐந்தாம் தலைமுறை காரும் ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியினை தொடரவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda All New City begins arriving at dealerships ahead of launch
Story first published: Wednesday, July 1, 2020, 1:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X