ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

கடந்த மார்ச் மாதத்தில் பிஎஸ்6 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் டீலர்ஷிப்களுக்கு சென்றடைய துவங்கியுள்ளது. இதுகுறித்த தகவலினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

டீலர்ஷிப்களை அடைய துவங்கி இருப்பதால் பிஎஸ்6 டபிள்ஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய அறிமுகம் மிக விரைவில் வரும் வாரங்களில் இருக்கலாம் என கூறப்படுகிறது. டீலர்ஷிப்பிற்கு சென்றுள்ள இந்த காரின் படங்களை இந்தியன் ஆட்டோ இன்ஃபார்மேஷன் என்ற செய்தி தளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்து இணையத்தில் கசிந்துள்ள மற்றொரு படத்தில் இதன் என்ஜினின் சிறப்பம்சங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி பார்க்கும்போது தற்போதைய டபிள்யூஆர்-வி மாடலின் என்ஜின் தேர்வுகளை தான் இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனும் பெற்றுள்ளது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடல் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஐ-டிடிஇசி டீசல் என்ஜினை பெற்றுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 88 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 98 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

மேலும் பெட்ரோல் என்ஜின் 16.5 kmpl மைலேஜ்ஜையும், டீசல் என்ஜின் 23.7 kmpl மைலேஜ்ஜையும் வழங்கும் எனவும் இந்த லீக் படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த என்ஜின்களுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மற்றப்படி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு குறித்த எந்த தகவலும் இல்லை.

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

வெளிப்புற டிசைன்களை பொறுத்தவரையில், பிஎஸ்6 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிய முன்புற க்ரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஃபாக் விளக்குகள் மற்றும் C-வடிவில் எல்இடி டெயில் விளக்குகள் உள்ளிட்டவற்றை கொண்டிருப்பதை டீலர்ஷிப்பிற்கு சென்றுள்ள இந்த காரின் புகைப்படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

இவை எல்லாம் தற்போதைய மாடலிலும் இருந்தாலும், சில பாகங்கள் அப்டேட்டாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹோண்டா லோகோவுடன் அகலமான க்ரோம் ஸ்ட்ரிப், ரூஃப் ரெயில்கள், இரு புறங்களிலும் ஸ்கிட் ப்ளேட்கள், கன்மெட்டல் ஃபினிஷ் அலாய் சக்கரங்கள், எலக்ட்ரிக் மூலமாக செயல்படக்கூடிய சன்ரூஃப் மற்றும் சங்கி பாடி க்ளாடிங் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

உட்புறத்தில் இந்த கார், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் உள்பட தற்போதைய மாடலின் கிட்களை தான் அப்படியே பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மொத்த உள்ளமைப்பு திருத்தியமைக்கப்பட்டிருக்கலாம்.

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

வெளிப்புறத்தை போல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ட்யூல் காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், பின்புற பார்க்கிங் கேமிரா மற்றும் ப்ரேக் ஓவர்ரைட் சிஸ்டம் என மேம்படுத்தப்பட்டவைகளாக தான் உள்ளன.

ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்... அறிமுக பணிகள் தீவிரம்...

அறிமுகத்திற்கு பிறகு ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடல் ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களுடன் போட்டியிடவுள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் தற்போதைய மாடலின் விலையில் எவ்வளவு அதிகரிப்பை பெறவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
BS6 Honda WR-V facelift arrives at dealerships; specifications leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X