2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

2020 எலைட் ஐ20 ஹேட்ச்பேக் மாடலின் அறிமுகத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மாதிரி கார் ஒன்றை சோதனை ஓட்டத்தில் உட்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அதன் சூப்பர்மினி காரான ஐ20-ன் புதிய தலைமுறை வெர்சனை மக்களின் பார்வைக்கு வெளிப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து 2021மை ஹூண்டாய் ஐ20 மாடல் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஜெனிவா மோட்டார் கண்காட்சியின் மூலம் அறிமுகமாக இருந்தது.

2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

ஆனால் அந்த கண்காட்சியே கொரோனாவின் தாக்கத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் புதிய தலைமுறை ஐ20 மாடல் கடந்த சில வாரங்களுக்காக சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வருவதை பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது ஹைதராபாத்திற்கு அருகே சோதனையில் இந்த கார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

ஏனெனில் ஹைதராபாத், கொண்டாபுரில் தான் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆர்&டி (ஆராய்ச்சி & டிசைன்) மையம் உள்ளது. தற்போதைய சோதனை மாதிரி முந்தைய சோதனை ஓட்டங்களை போல் இல்லாமல் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் தடிமனான மறைப்புகளாலும் சில பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன.

2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

இதனால் புதிய தலைமுறை ஐ20 மாடல் விற்பனைக்கு எவ்வாறான தோற்றத்தில் என்பது இன்னமும் ரகசியமாகவே உள்ளன. முக்கிய சிறப்பம்சங்களாக மேற்கூரை தவிர்த்து ஒற்றை போலார் வெள்ளை ஷேட், சுறாவின் துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, 15 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை இந்த காருக்கு வழங்கப்படலாம்.

2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

அதுவே இதன் டாப் வேரியண்ட்களில் கூடுதலாக மேற்கூரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், போஸ் ஆடியோ சிஸ்டம், ப்ளூலிங்க் இணைப்பு, 8.0 இன்ச்சில் தொடுத்திரை (ஐரோப்பிய வெர்சன் 12.5 இன்ச்சில் கொண்டுள்ளது), சுற்றிலும் விளக்குகள் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.

2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய தலைமுறை ஐ20 மாடலின் இந்திய வெர்சன் வென்யூவை போன்று 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற மூன்று என்ஜின் தேர்வுகளை பெறவுள்ளது. இதில் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

மற்ற இரு என்ஜின்களுக்கு 6-ஸ்பீடு மேனுவல் நிலையாகவும், டீசல் என்ஜினிற்கு கூடுதலாக 6-ஸ்பீடு டிசி-யும், டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும் வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த புதிய தலைமுறை ஹூண்டாய் காரில் ஐஎம்டி (இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) தொழிற்நுட்பமும் பொருத்தப்படலாம்.

2020 ஹுண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் ஹைதராபாத்தில் சோதனை ஓட்டம்...

ஏனெனில் இந்த தொழிற்நுட்பம் ஹூண்டாயின் வென்யூவிற்கும் வழங்கப்படுகிறது. ரூ.6.50 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் விற்பனைக்கு வரவுள்ள 2020 எலைட் ஐ20-க்கு வழக்கம்போல் டாடா அல்ட்ராஸ், மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
English summary
2020 Hyundai i20 spied in Hyderabad with reduced camouflage
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X