இந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...

புதிய டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அனைத்து விதங்களிலும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியிருக்கும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...

2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஹூண்டாயின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிற ஜூலை 14ல் இருந்து விற்பனையை துவங்கவுள்ளது. ஆனால் முதலில் இதன் இந்திய வருகை இந்த வருட துவக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா இதன் வருகையை தாமதப்படுத்திவிட்டது.

இந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...

இந்த காருக்கான முன்பதிவுகளை சமீபத்தில் தான் ஹூண்டாய் நிறுவனம் துவங்கி இருந்த நிலையில் 2020 டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சில டீலர்ஷிப்களை வந்தடைந்துள்ளது. இதுகுறித்து டென்னிஸ் கல்யானா என்ற யூடியுப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய சந்தைக்காக இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள சில அப்டேட்களை காண முடிகிறது.

இந்த வீடியோவின் மூலம் பார்க்கும்போது 2020 டக்ஸன் மாடல் வெளிப்புறத்தில் புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ் & டெயிலேம்ப்ஸ், அப்டேட்டான வடிவில் க்ரில், ரீடிசைனில் முன் மற்றும் பின்புற பம்பர்கள், புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் கருப்பு நிறத்தில் பி-பில்லரை பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

இந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...

உட்புறத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் புதிய டேஸ்போர்ட் உடன் முக்கியமான அப்டேட்களை ஏற்றுள்ளது. இதில் ஹூண்டாயின் ப்ளூலிங்க் இணைப்பு தொழிற்நுட்பத்துடன் 8.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...

இவை மட்டுமல்லாமல், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் மற்றும் முன் பயணிகளுக்கான இருக்கை, ப்ரீமியம் தரத்தில் இருக்கை அமைப்பு, ஆறு காற்றுப்பைகள், பனோராமிக் சன்ரூஃப் போன்றவையும் உள்ளன.

இந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...

ஜிஎல் மற்றும் ஜிஎல்எஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள 2020 டக்ஸன் காருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இந்த வகையில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் 6-ஸ்பீடு மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் கொடுக்கப்படவுள்ளன.

இந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி பவரையும், டீசல் என்ஜின் 180 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படாவிட்டாலும், இதன் டாப் வேரியண்ட் 4வீல் ட்ரைவ் சிஸ்டத்தை பெறவுள்ளது.

இந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...

வருகிற 14ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையை துவங்கவுள்ள ஹூண்டாயின் புதிய டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு ஜீப் காம்பஸ் மற்றும் ஹோண்டா சிஆர்-வி உள்ளிட்ட மாடல்கள் போட்டியாக விளங்கவுள்ளன. இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை அதன் முன்னோடி மாடல்களை காட்டிலும் சற்று ப்ரீமியமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
2020 Hyundai Tucson Facelift arrives at dealer – Walkaround video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X