புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியாகி இருக்கிறது. இந்த காரை வாங்க இருப்போருக்கு இந்த மைலேஜ் விபரங்களை தெரிந்து கொண்டு செல்வது பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் வெர்னா கார் டாப்-3 மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. மாருதி சியாஸ், விரைவில் வரும் ஹோண்டா சிட்டி கார்களால் கடும் நெருக்கடி நிலவும் நிலையில், அண்மையில் இந்த காரின் பிஎஸ்6 மாடல் மூன்று எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் நீக்கப்பட்டுவிட்டன. தற்போது கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று, ஹூண்டாய் வெனியூ காரில் இடம்பெற்றிருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

இந்த எஞ்சின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வுகளில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த எஞ்சின்கள் சோதனை நிலைகளின் அடிப்படையில், எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற விபரம் ஆட்டோகார் இந்தியா தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

அதில், 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜை வழங்கும் என்றும், சிவிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.45 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 19.2 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 21.3 கிமீ மைலேஜையும் வழங்கும் என்றும் அராய் சான்றளித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் வெர்னா காரின் எஞ்சின்கள் முற்றிலும் புதிதாக மாறி இருப்பது போலவே, டிசைன் அம்சங்களிலும் புதுப்பொலிவுடன் வந்துள்ளது. இந்த கார் எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வை வைத்து 11 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கனெக்டெட் கார் செயலி ஆகியவை உள்ளன.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

புதிய ஹூண்டாய் வெர்னா கார் ரூ.9.31 லட்சம் முதல் ரூ.15.31 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
The new Hyundai Verna ARAI certified mileage details have been revealed and it will attaract mid size sedan buyers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X