வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 ரியோ ஹேட்ச்பேக் மாடலின் படங்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகவுள்ள இந்த ஹேட்ச்பேக் காரை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக கொண்டுவரப்படும் இந்த காரில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கவனிக்கத்தக்க வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த டிசைன் மாற்றங்களை விட மிக பெரிய அப்டேட்டாக இந்த காரில் புதிய 1.0 லிட்டர் டி-ஜிடிஐ ‘ஸ்மார்ட்ஸ்ட்ரீம்' பெட்ரோல் மில்டு ஹைப்ரீட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

முன்னதாக கியா நிறுவனம் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ கப்பா என்ஜினை பொருத்தி வந்தது. 3-சிலிண்டர் அமைப்பை ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர்-ஜெனரெட்டர் உடன் கொண்டுள்ள இந்த என்ஜின் மாசு உமிழ்வை 8 சதவீதம் வரையில் குறைக்கும்.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

அதேபோல் இதன் புதிய மில்டு ஹைப்ரீட் என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 120 பிஎச்பி என இரு விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஸ்ட்ரீம் மில்ட் ஹைப்ரீட் என்ஜினானது க்ளட்ச்சின் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் உடன் புதியதாக மேம்படுத்தப்பட்ட மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

இந்த என்ஜின் அமைப்புடன் 2020 கியா ரியோ ஃபேஸ்லிஃப்ட் 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகளிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் 1.2 லிட்டர் என்ஜின் தேர்வு இந்த காரின் பேஸ் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படவுள்ளன. இந்த ஹேட்ச்பேக் கார் பெற்றுள்ள ட்ரைவ் மோட் செலக்ட் சிஸ்டத்தின் மூலமாக ஈக்கோ, ஸ்போர்ட், நார்மல் என்ற மூன்று மோட்களை பெற முடியும்.

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

உட்புற கேபினில் முக்கியமான அப்டேட்டாக புதிய மற்றும் பெரிய 20.3 செ.மீ தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. மல்டி-டிவைஸ் ப்ளூடூத் இணைப்பை கொண்டுள்ள இந்த சிஸ்டத்தின் மூலமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்டவற்றை இணைக்க முடியும்.

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

இதனுடன் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க 10 செ.மீ-ல் உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஜிட்டல் திரை மற்றும் யுவிஒ இணைப்பு டெலிமாடிக்ஸ் சிஸ்டம் உள்ளிட்டவையும் உட்புறத்தில் உள்ளது. இதில் டெலிமாடிக்ஸ் சிஸ்டத்தின் மூலமாக அட்வான்ஸ்டு வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம், லோக்கலில் எரிபொருளின் விலை மற்றும் நேரலையான போக்குவரத்து தகவல்களை அறிய முடியும்.

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

உயரத்தை மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கை நிலையாகவும், உயரத்தை மாற்றக்கூடிய பயணிகளின் இருக்கை கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படவுள்ளது. நீல நிறத்தில் ஜொலிக்கின்ற இதன் உட்புறத்தில் இருந்து அப்படியே வெளிப்புறத்திற்கு வந்தால், முன்புறத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் குறுகிய க்ரில், ரன்னிங் விளக்குகளுடன் தயாரிக்கப்பட்ட முழு எல்இடி ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...?

இவை மட்டுமில்லாமல் அகலமான பம்பர், புதிய ஃபாக் விளக்குகள் மற்றும் புதிய டிசைனில் அலாய் சக்கரங்களை இந்த 2020 மாடல் பெற்றுள்ளது. ஸ்போர்டி ப்ளூ மற்றும் அடர் க்ரே நிறங்களில் ஷேட்களை கொண்டுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு 9 நிற தேர்வுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
2020 Kia Rio Hatchback Unveiled – Top Changes Explained
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X