2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள ட்யூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்ப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சந்தைக்கு வரவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்த சோதனை புகைப்படங்களின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா டியூவி300 மாடலின் ஒன்பது இருக்கை வெர்சன் காரான டியூவி300 ப்ளஸ் மாடல் முதன்முறையாக கடந்த 2018ல் இந்தியாவில் அறிமுகமானது. பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக சந்தைக்கு வந்தது.

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

சிறு நகரங்களை குறி வைத்து விற்பனைக்கு வரவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் கார், ப்ளாட்ஃபாரம் மட்டுமின்றி பெரும்பான்மையான பாகங்களை அதன் முன்னோடி மாடலான மஹிந்திரா டியூவி300 மாடலில் இருந்து தான் பெற்றுள்ளது.

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

மஹிந்திராவின் இந்த புதிய 2020 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பற்றி கூறு வேண்டுமென்றால், இதன் முன்பதிவு தற்போதைய மாடலில் இருந்து முழுவதும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை காரில், இதன் விற்பனை மாடலின் ஹெட்லேம்ப் வழங்கப்படவில்லை.

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இதனால் பிஎஸ்4 டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்து வேறுப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பை இந்த 2020 கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள இதன் ஸ்பை புகைப்படங்களின் மூலம் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலில் வழங்கப்பட்டுள்ள ஸ்போர்ட்டியான டிசைனிலான முன்புற ரேடியேட்டர் க்ரில்லை தான் இந்த கார் அப்டேட்டாக கொண்டிருப்பது தெரிய வருகிறது.

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இயக்க ஆற்றலுக்கு 2020 டியூவி300 ப்ளஸ் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.2 லிட்டர் எம்ஹாவ்க் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 4,000 ஆர்பிஎம்-ல் 120 பிஎச்பி பவரையும், 1,800- 2,800 ஆர்பிஎம்-ல் 280 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கவுள்ளது.

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்புறத்தில் இரு காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், விபத்து நேரங்களில் தன்னிச்சையாக மடக்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை உள்ளன.

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இவை மட்டுமில்லாமல் காரின் பக்கவாட்டு பகுதி விபத்தில் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருக்க தானாக செயல்படக்கூடிய பீம்கள், டிஜிட்டல் இம்மொபைலிசர், ஓட்டுனர் சீட் பெல்ட்டை அணியாததை நினைவூட்டும் வசதி, ட்ரைவிங் செய்யும்போது தன்னிச்சையாக லாக் ஆகும் கதவுகள், கார் திருடுபோவதை தடுக்கும் வகையில் ஸ்டேரிங் லாக் மற்றும் விபத்தை தடுக்க கொடுக்கப்படும் ப்ரேக்குகளின் போது தானாக எரியும் விளக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டுள்ளது.

2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இதனால் தற்போதைய மாடலை விடவும் மிகவும் பாதுகாப்பான வாகனமாக விளங்கவுள்ள பிஎஸ்6 டியூவி300 ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பிஎஸ்4 மாடல் தற்சமயம் எக்ஸ்ஷோரூமில் ரூ.9,92,748 லிருந்து ரூ.11,42,157 வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை விட சற்று கூடுதலான விலையை பெறவுள்ள இந்த புதிய காரின் அறிமுகத்தை அடுத்த மாதத்தில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra TUV300 Plus facelift spotted on test yet again
Story first published: Saturday, April 4, 2020, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X