2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மாடலான 2020 விட்டாரா பிரெஸ்ஸாவின் எஸ்எச்விஎஸ் பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டப்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

இந்த புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இதற்கு முன்பும் பலமுறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டபோது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைப்ரீட் வைக்கல் ஃப்ரம் சுசுகி (எஸ்எச்விஎஸ்) என்கிற பேட்ஜ் புதியதாக சோதனை காரின் பின்புற கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளது.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

மாருதி நிறுவனம் தற்சமயம் இந்த எஸ்எச்விஎஸ் தொழிற்நுட்பத்தை தனது 1.5 லிட்டர் கே15 பெட்ரோல் வேரியண்ட்களில் மட்டும் தான் வழங்கி வருகிறது. இதன்மூலம் 2020 விட்டாரா பிரெஸ்ஸாவும் பிஎஸ்6 தரத்தில் பெட்ரோல் வேரியண்ட்டை பெறவுள்ளது தெரிய வருகிறது.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

இதே பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின்களை மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகமான சியாஸ் பிஎஸ்6 மற்றும் எர்டிகா பிஎஸ்6 மாடல்களும், விரைவில் அறிமுகமாகவுள்ள எக்ஸ்எல்6 பிஎஸ்6 மாடலும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த என்ஜினுடன் ஏஎம்டி/ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகின்றன.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த பிஎஸ்6 பெட்ரோல் மாடலில் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 மாடல் ஆரஞ்ச் நிற பெயிண்ட் அமைப்பை கொண்டுள்ளது.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

இந்த நிறத்தில் விட்டாரா பிரெஸ்ஸாவின் பிஎஸ்4 மாடலும் டீலர்ஷிப்களில் கிடைக்கிறது. ஆனால் பிஎஸ்6 அப்டேட்டாக பின்புறத்தில் மாற்றியமைக்கப்பட்ட டிசைனில் டெயில்லைட்ஸை இந்த கார் பெற்றிருப்பது இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது. மேலும் இந்த டெயில்லைட் எல்இடி தரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

தற்போதைய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் உள்ள சில்வர் நிற பின்புற பம்பருக்கு பதிலாக கருப்பு ஃபாஸ் ஸ்கிட் தட்டு, பின் பம்பராக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்பப்டி இந்த காரின் முன்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் அறிய முடியவில்லை.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

ஆனால் இந்த காரின் இதற்கு முந்தைய சோதனை ஓட்டங்களின் மூலம் 2020 விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிய க்ரோம் க்ரில், எல்இடி ப்ரோஜெக்டர் மற்றும் எல்இடி டிஆர்எல்களுடன் உள்ள திருத்தியமைக்கப்பட்ட ஹெட்லைட்கள் உள்ளிட்டவற்றை முன்புறத்தில் பெற்றிருப்பது தெரிய வந்திருந்தது.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

முன்புற பம்பரும் ரீ-டிசைனில் ஃபாக் விளக்குகளை பொருத்துவதற்காக பெரிய அளவில் குழிகளை கொண்டுள்ளது. மேலும் புதிய புல்-பார் டிசைனில் பாகங்களையும் இந்த கார் முன்புறத்தில் பெற்றுள்ளது. காரின் பக்கவாட்டு மற்றும் சக்கரங்களின் ஆர்ச் நிறத்தில் எந்த மாற்றமும் இல்லை.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

ஆனால் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் பலேனோ மாடலில் உள்ள 16 இன்ச் அலாய் சக்கரம் புதிய அப்டேட்டாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டிலும் கூட மிக சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

மேலும் தற்போதைய சோதனை ஓட்ட புகைப்படங்களில் இந்த காரில் இரும்பிலான சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. உட்புறத்தில் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் சில கூடுதலான தொழிற்நுட்பங்களை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்

இந்த புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலை விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Rushlane

Most Read Articles

English summary
2020 Maruti Brezza petrol SHVS confirmed by new spy shots
Story first published: Tuesday, January 28, 2020, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X