பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஸான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

நிஸான் அறிமுகம் செய்யவுள்ள புதிய கிக்ஸ் காரில் பெட்ரோல் செலவை மட்டுமில்லாமல் மின்சார செலவையும் மிச்சப்படுத்தும் வகையில் புதிய இ-பவர் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஸான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம், உலகின் பல்வேறு பகுதிகளில் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது. விற்பனைச் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், உலகின் சில முக்கிய நாடுகளில் உற்பத்தி தளங்களை நிறுவி, அங்கு வாகன தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஸான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

அந்தவகையில், தாய்லாந்திலும் தனது வர்த்தகம் மற்றும் தயாரிப்பு பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது நிஷான்.

அதுமட்டுமின்றி, இங்கு மிக விரைவில் புதிய இ-பவர் தொழில்நுட்பம் அடங்கிய வாகனங்களை உற்பத்தி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஸான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

தற்போது வரை நிஸான் நிருவனம் இதுமாதிரியான தொழில்நுட்பம் அடங்கிய வாகனங்களின் உற்பத்தியை ஜப்பானை தவிர வேறெங்குமே மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, ஜப்பானுக்கு அடுத்தபடியாக நிஸான் மின் வாகனங்களை உற்பத்தி செய்யும் முதல் நாடாக தாய்லாந்து மாற இருக்கின்றது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஸான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

இங்கு தயாரிக்கப்பட இருக்கும் இ-பவர் தொழில்நுட்ப வாகனங்கள் தனி சிறப்பு பெற்ற வாகனங்களாக சந்தையில் களமிறக்கப்பட இருக்கின்றன. ஆம், இந்த இ-பவர் தொழில்நுட்பமுடைய கார்களானது பெட்ரோல் எஞ்ஜின் மூலம் இயங்குவது மட்டுமின்றி காருக்கு தேவையான மின்சாரை சார்ஜையும் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

எனவே, நிஸானின் இந்த புது முக கார்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்களைத் தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் இருக்காது. மேலும், சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்திற்கு பதிலாக தற்காலிகமாக பெட்ரோலை நிரப்பிக் கொண்டு பயணிக்கலாம்.

இந்த தொழில்நுட்பம் அடங்கிய கார் ஒன்றை நிஷான் கிக்ஸ் மாடலில் அந்நிறுவனம் ஏற்கனவே வடிவமைத்துள்ளது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

க்ராஷோவர் ரகத்திலான புதிய இ-பவர் கொண்ட நிஸான் கிக்ஸ் மிக விரைவில் உலக சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதனை நாளை வெளியீடு செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிஷான் நிறுவனம் இன்று (மே15) வெளியிட்டது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

அதில், புதிய இ-பவர் தொழில்நுட்பம் அடங்கிய கிக்ஸ் காரை முதலில் தாய்லாந்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்தே, ஆசிய கண்டம் மற்றும் வேறு சில உலக நாடுகளில் இக்காரை களமிறக்க இருப்பதாகவும் அது கூறியிருக்கின்றது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

இந்த அறிமுக அறிவிப்பைத் தொடர்ந்து, நிஸான் நிறுவனம் இ-பவர் கிக்ஸ் கார் பற்றிய டீசர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், காரின் கவர்ச்சியான தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவை வெளிப்படும் வகையில் காட்சிகள் அடங்கியிருக்கின்றன.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், கட்டழகு உடல்தேகம் கொண்ட ஓர் பெண், மறைந்து நின்று தன் முகத்தை வெளிக்காட்டுவதைப் போல், வெளியே வந்தவாறும், அதேசமயம் லேசாக மறைந்தவாறும் அதன் கவர்ச்சியான பகுதிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது நிஸான் இ-பவர் கிக்ஸ். இதன்மூலம், காரின் முகப்பு பகுதி, பின்னழகு மற்றும் பக்கவாட்டு பகுதி உள்ளிட்டவற்றின் தரிசனம் கிடைத்துள்ளது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

இதன்மூலம் நிஸான் கிக்ஸ் உடல் பாகங்கள் சில புதுப்பிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, முகப்பு பம்பர், ஏர் இன்டேக்கர், பனி வளிக்கு மற்றும் ஹெட்லேம்ப் உள்ளிட்ட புது தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

இதுபோன்று வேறு சில முக்கிய மாற்றங்களையும் நிஸான் கிக்ஸ் இ-பவர் கிராஷோவர் பெற்றிருக்கின்றது. அவை, புதிய அலாய் வீல், பிளாக் பில்லர்கள், மேம்படுத்தப்பட்ட பான்னெட், உடல் நிறத்திலான ரியர் பம்பர் மற்றும் மெல்லிய வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவை ஆகும்.

இதுகுறித்து விளக்கும் வகையில் சுமார் 15 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த காட்சிகள், நிஸான் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த கார்குறித்த ஆவலையும் அது தூண்டியிருக்கின்றது. இதனை யுடியூபில் "ஒரு புதிய சிலிர்ப்பு வருகிறது" (A new thrill is coming) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

இந்த காரில் பெட்ரோல் திறன் வழங்கப்பட்டிருந்தாலும், எப்போதுமே மின் மோட்டார்களின் திறன் மூலம் மட்டுமே காரின் வீல்கள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிக டிராக்சன் திறனை வழங்கும் வகையில் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரிக்கு ரேஞ்ஜை உயர்த்திக் கொடுக்கும் வகையில் ஹிபிரிட் சிஸ்டம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

இதுவே, காரில் மின்சார திறன் இல்லாதபோது பெட்ரோல் (கம்பியூசன் எஞ்ஜின்) மூலம் சார்ஜை பெற்று இ-பவர் நிஸான் கிக்ஸ் காருக்கு தேவையான திறனை வழங்குகிறது. இதுமாதிரியான தொழில்நுட்பத்தைதான் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் ஹைபிரிட் காரில் வழங்கியிருக்கின்றது டொயோட்டா நிறுவனம்.

பெட்ரோல் மட்டுமில்ல மின்சார செலவும் மிச்சமாகும்... நிஷான் பசுமை வாகனத்தின் புதிய பரிணாம வளர்ச்சி...

இந்த சிறப்பு தொழில்நுட்பம் பெட்ரோல் மட்டுமின்றி மின்சார செலவையும் மிச்சப்படுத்தும் என தெரிகின்றது. எனவே, இந்த புதிய மாடல் உலக நாடுகளில் விற்பனைக்கு வந்த பின்னர் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அதேசமயம், அதி வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனச் சந்தையில் இதைவிட பிரம்மிப்பை ஏற்படுத்துகின்ற தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
2020 Nissan Kicks e-Power Teaser Unveild. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X