1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

கவனிக்கத்தக்க காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் 1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்து மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. சியாஸ் மாடலின் இந்த புதிய வெர்சன் கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

தாய்லாந்தில் தற்போது அறிமுகமாகியுள்ள சியாஸ் செடான் மாடல், ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் மட்டுமின்றி 1.25 லிட்டர் என்ஜினுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வையும் பெற்றுள்ளது. இந்த என்ஜின் 91 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தும் ஆற்றலை முன்பு கொண்டிருந்தது. ஆனால் தற்போது இ20-க்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

மற்றப்படி இந்த காரின் மொத்த தோற்றத்தை பார்த்தோமேயானால், 2018ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகமான சியாஸின் மிட்-லைஃப் ஃபேஸ்ட்டை ஒத்திருக்கிறது. 2020 சியாஸ் மாடலில் மைல்ட் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுடன் சில டிசைன் மாற்றங்களையும் ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான சுசுகி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய ஒருங்கிணைந்த எல்இடி விளக்குகளுடன் உள்ள இந்த செடான் மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் கூர்மையான முன்புற க்ரில், இருபுறமும் ஃபாக் விளக்குகளுடன் உள்ள ரீடிசைனில் முன்புற பம்பர் மற்றும் மத்தியில் அகலமான ஏர் இன்லெட்ஸ் உள்ளிட்டவை உள்ளன.

1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

பின்புறத்தில் 2020 சியாஸ் காரானது க்ரோம்-ட்ரிம்டு பம்பர் மற்றும் நுட்பமான டிசைன் அப்டேட்களை ஏற்றுள்ளது. இதுவே சியாஸ் மாடலின் டாப் ஆர்எஸ் வேரியண்ட் ஸ்கிட் ப்ளேட்களையும், ப்ரேக் லைட்களுடன் ட்ரங்க் ஸ்பாய்லரையும் கூடுதலாக பெற்றுள்ளது. 16 இன்ச் அலாய் சக்கரம் தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் மாடலில் இருந்து அடையாளமாக தொடர்ந்துள்ளது.

1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

முந்தைய தலைமுறை காரில் இருந்து பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் சியாஸ் மாடலின் இந்த புதிய வெர்சன் அதே 565 லிட்டர்கள் பூட்பேஸ் அளவை தான் பெற்றுள்ளது. ப்ரீமியம் தோற்றத்தில் வெளிப்புறத்தை இந்த 2020 மாடல் கார் கொண்டுள்ளதால் முந்தைய தலைமுறை காரை விட காஸ்ட்லீயான தோற்றத்தை தருவது மட்டுமில்லாமல், அதன் விற்பனை ஆயுட்காலத்தையும் சிறிது உயர்த்தும்.

1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

சியாஸின் மாடலின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கருப்பு நிறத்தில் தீம்-ஐ கொண்டுள்ளது. இந்த நிறம் இந்திய வாடிக்கையாளர்கள் அவ்வளவாக தேர்வு செய்யாத நிறமாக இருந்தாலும், இந்த தாய்லாந்து மாடலில் உட்புறத்தில் கருப்பு நிறம், ஸ்டேரிங் சக்கரம், புதிய லெதர் இருக்கைகள், க்ரோம் கதவு ஹேண்டில்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, பின்புற ஏசி வெண்ட்ஸ், பொல்லென் ஃபில்டர் மற்றும் ஏழு-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பாகங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மூலமாக ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லிங்க், ப்ளூடூத் மற்றும் நாவிகேஷன் தேர்வுகளை பெற முடியும். இந்த காரில் மற்ற முக்கிய அம்சங்களாக 6-ஸ்பீக்கர் ஆடியோ, பல கட்டுப்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், கீலெஸ் எண்ட்ரீ, இரட்டை காற்றுப்பைகள், ஆண்டி-லாக் ப்ரேக்குகள், இபிடி, ப்ரேக் அசிஸ்ட் போன்றவை உள்ளன.

1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

6 விதமான நிறங்களில் தாய்லாந்தில் தற்போது சந்தைப்படுத்தப்பட்டுள்ள சுசுகி சியாஸ் செடானின் எக்ஸ்ஷோரூம் விலை அங்கு 523,000 பாட் (ரூ.12.03 லட்சம்) - 675,000 பாட் (ரூ. 12.03 லட்சம்) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சியாஸ் செடானிற்கு சந்தையில் போட்டியாக ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் உள்ளன.

Most Read Articles
English summary
2020 Suzuki Ciaz Facelift Launched With 1.25 Litre Engine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X