செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை டாடா நிறுவனம் இன்னும் மெருகேற்றி அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

மும்பையில் இன்று (ஜனவரி 22ம் தேதி) நடைபெற்ற நிகழ்ச்சியில், நெக்ஸான் காரின் அப்டேட் செய்யப்பட்ட 2020 மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 2020 நெக்ஸான் காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் விலை 6.95 லட்ச ரூபாயில் இருந்தும், டீசல் வேரியண்ட்களின் விலை 8.45 லட்ச ரூபாயில் இருந்தும் தொடங்குகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது விலை உயர்ந்திருந்தாலும் கூட, அதற்கு நியாயமாக பல்வேறு அப்டேட்களை டாடா மோட்டார்ஸ் செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்-6 இன்ஜின்களை கொண்டு வந்துள்ளது. இந்த எஸ்யூவியின் தோற்றத்தை மாற்றியமைத்துள்ளது. அத்துடன் வழங்கப்படும் வசதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

மெல்லிய க்ரில், ஷார்ப் ஆன தோற்றத்தில் ஹெட்லேம்ப்ஸ், புதிய எல்இடி டிஆர்எல்கள், அப்டேட் செய்யப்பட்ட பனி விளக்குகள் அறை மற்றும் புதிய முன்பகுதி பம்பர் ஆகியவற்றுடன் டாடா நெக்ஸானின் வெளிப்புறம் தற்போது ஸ்மார்ட் ஆக காட்சியளிக்கிறது. சந்தையை விட்டு வெளியேறவு மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய டாடா நெக்ஸான் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

இதற்கு டாடா மோட்டார்ஸ் மேற்கொண்ட காஸ்மெட்டிக் அப்டேட்களே காரணம். இதுதவிர புதிய ட்யூயல் டோன் அலாய் வீல்களையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது டாடா நெக்ஸான் எஸ்யூவியின் தோற்றத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. 2020 நெக்ஸான் காரின் ஒட்டுமொத்த டிசைன், கிட்டத்தட்ட அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை போன்றே உள்ளது.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

ஆனால் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான ஒரு சில டிசைன் மாற்றங்கள் தவிர மற்றபடி அப்படியேதான் உள்ளது. டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் ஜனவரி 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையே முன்பு வழங்கப்பட்ட அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களைதான் 2020 நெக்ஸான் பெற்றுள்ளது.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

ஆனால் தற்போது இரண்டு இன்ஜின்களும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

அதே சமயம் வாடிக்கையாளர்கள் முன்பு போலவே இரண்டு இன்ஜின்களுடனும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதுதவிர டாப் எண்ட் ட்ரிம்களில், சன் ரூஃப் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பங்களை சேர்த்திருப்பது 2020 நெக்ஸானின் ஹைலைட்டாக உள்ளது.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஒவ்வொரு மாதமும் உறுதியான விற்பனையை டாடா நெக்ஸான் பதிவு செய்து வருகிறது. உண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் இந்திய கார் நெக்ஸான்தான். இதனால் இந்தியாவில் நெக்ஸான் காருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

டாடா நெக்ஸானை தொடர்ந்து, டாடா அல்ட்ராஸ் காரும் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றது. இதன் மூலம் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களையும் முழுமையாக வசப்படுத்திய 2வது இந்திய கார் என்ற பெருமையை அல்ட்ராஸ் பெற்றது. அந்த அல்ட்ராஸ் காரையும் டாடா இன்றுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செம மாஸ்! இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா! என்னனு தெரியுமா?

2020 டாடா நெக்ஸான் காரானது முன்பு போலவே, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடும். மேற்கண்ட அப்டேட்கள் மூலமாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் டாடா நெக்ஸானின் பலம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
2020 Tata Nexon Compact SUV Launched In India - Price, Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X