2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

வருகிற 4ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள நிலையில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் வகையிலான டீசர் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஹெட்லைட்மேக் என்ற செய்தியில் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறத்தில் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் காரை தற்போதைய ஃபார்ச்சூனர் மாடலை காட்டிலும் கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு மாற்றியுள்ளன.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

இதன் வெளிப்புறத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியமான அப்டேட்டாக, புதிய ப்ரோஜெக்டர் லென்ஸ் உடன் பை-பீம் எல்இடி ஹெட்லேம்ப்கள், ரீடிசைனில் முன்புற க்ரில் டிசைன், திருத்தியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், ரீஸ்டைலில் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் 18 மற்றும் 20 இன்ச்களில் புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை உள்ளன.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

இவற்றுடன் பக்கவாட்டில் படிக்கட்டு போன்ற தோற்றம் நிச்சயம் டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவும். உட்புறத்திலும் இவ்வாறு, பாதை திரை மற்றும் ஸ்டீரியோவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், டேஸ்போர்ட் லேஅவுட்டில் பெரிய வித்தியாசம் இருக்காது.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

ஆனால் உட்புற கேபினில் தற்போதைய வசதிகளுடன் டொயோட்டா நிறுவனம் புதிய ஆக்ஸஸரீகளையும், அவற்றில் சிலவற்றை கூடுதல் தேர்வாகவும் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் புதிய ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் கூடுதல் பாதுகாப்பானதாகவும், சவுகரியமானதாகவும் விளங்கும்.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் உட்புற கேபின், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 9-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமிரா, பவர்டு டெயில்கேட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் விரிவான டொயோட்டா பாதுகாப்பு உணர் தொகுப்பு போன்றவற்றை கொண்டுள்ளது.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

இதில் விரிவான பாதுகாப்பு உணர் தொகுப்பில் ஆட்டோமேட்டிக் ப்ரீ-கொலிஷன் ப்ரேக்குகள், லேன் புறப்பாடு வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், வேறுப்பட்ட ஆட்டோமேட்டிக் ஸ்பீடு கண்ட்ரோல், டைனாமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

டிசைன் மாற்றங்கள் மட்டுமின்றி என்ஜின் அமைப்புகளிலும் புதிய ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அப்கிரேட்டை பெற்றுள்ளது. இதன்படி காரில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பொருத்தப்படவுள்ள 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு ஐஜிடி டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

2,755சிசி-ல் உள்ள இந்த டீசல் என்ஜின் தற்போதைய ஃபார்ச்சூனர் மாடலில் அதிகப்பட்சமாக 3,400 ஆர்பிஎம்-ல் 177 பிஎச்பி பவரையும், 1,400-2,600 ஆர்பிஎம்-ல் 420-450 என்எம் டார்க் திறனை தான் வெளிப்படுத்தி வருகிறது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு இணைக்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ் ஆற்றலை 2-வீல் ட்ரைவ் அல்லது 4-வீல் ட்ரைவ் சிஸ்டத்திற்கு வழங்குகிறது.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

இந்த என்ஜின் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதால் 27 பிஎச்பி மற்றும் 50 என்எம் வரையில் ஆற்றலை கூடுதலாக இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வழங்கும். கடந்த 2015ல் இருந்து டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துவரும் ஃபார்ச்சூனர் மாடலின் இரண்டாம் தலைமுறை கார் தற்போது இந்தியா உள்பட பெரும்பான்மையான நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

2020 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜின் விபரங்கள் இணையத்தில் கசிந்தன..!

இந்த இரண்டாம் தலைமுறை ஃபார்ச்சூனர் மாடலில் முதலாவது முக்கியமான அப்கிரேட்டாக இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கொண்டுவரப்படுகிறது. இன்னும் சில நாட்களில் சர்வதேச அளவில் அறிமுகமாக இருந்தாலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய ஷோரூம்களை இந்த ஆண்டு இறுதியில் தான் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2020 Toyota Fortuner To Deliver 205 PS & 500 Nm Torque, Details Leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X