2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

ஆடி நிறுவனத்தின் பிரபல எண்ட்ரீ-லெவல் காம்பெக்ட் செடான் மாடலான ஏ3-ன் 2021 மை அவதார் கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அவதார் மாடலை பற்றிய முழு தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

முன்னோடி மாடல்களுடன் ஒப்பிடும்போது புதிய ஆடி ஏ3 செடான் மாடல் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சில அப்டேட்களை பெற்றுள்ளது. ஸ்போர்ட்பேக் தோற்றத்தில் சந்தைக்கு வரும் இந்த 2021 மாடல் காரின் இந்திய வருகைக்கு முன்னதாக, ஏ3 எல் மாடல் விரைவில் சீன சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

இந்தியாவில் ஆடி நிறுவனம் தற்சமயம் 3 தயாரிப்பு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த புதிய செடான் மாடலின் அறிமுகம் இந்தியாவில் 2021ல் மத்தியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் வெளிப்புறத்தில் டிசைன்கள் தற்போதைய மாடர்ன் நாட்களுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

கூர்மையான லைன்கள் மற்றும் பொருத்தமான வெட்டுக்களை இந்த ஸ்போர்ட்பேக் கார் கொண்டுள்ளது. பேனல்களின் ஓரங்கள், நீட்டிக்கப்பட்ட ஃபெண்டர்கள் மற்றும் புத்துணர்ச்சியான பம்பர் பாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போதைய ஏ3 மாடலுடன் இந்த புதிய காம்பெக்ட் கூபே கார் ஒத்து காணப்படுகிறது.

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

பின்புற கதவுகளில் சிறிய அளவிலான ஆடி லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2021 ஸ்போர்ட்பேக் மாடல் தற்போதைய மாடலை விட சற்று அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. உயரமான பின்பகுதி மற்றும் நீளமான டிஃப்யுசர் உள்ளிட்டவைகளால் காரின் இழுவை குணகம் 0.25 ஆக உள்ளது.

MOST READ: பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

சஸ்பென்ஷன், கம்ஃபர்ட் மற்றும் டைனாமிக்ஸிற்கு இடையில் சிறப்பான சமநிலையை வழங்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் பொத்தான் மூலமாக செயல்படுத்தும் விதத்திலான வசதிகள் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன. டேஸ்போர்டின் மையத்தில் உள்ள 10.1 இன்ச் தொடுத்திரை சுற்றிலும் ப்ரீமியம் தரத்திலான மெட்டிரீயல்களுடன் உள்ளது.

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

மைய கன்சோலிற்கு ஏற்ற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொடுத்திரைக்கு அருகாமையில் அப்டேட்டான 10.25 இன்ச் விர்டியுவல் காக்பிட் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஆடி எம்எம்ஐ சிஸ்டத்தின் லேட்டஸ்ட் வெர்சன் 10 மடங்கு கூடுதலான செயல்படுதிறனை பெற்றுள்ளது.

MOST READ: ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதா..? வாகன நெரிசலில் நிலை தடுமாறிய தலைநகர்...

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

2021 ஆடி ஏ3 காரில் புதிய 1.5 லிட்டர் '35' டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் மில்ட்-ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் இந்த பெட்ரோல் என்ஜின் கூடுதலாக 50 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கவல்லது.

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

சர்வதேச சந்தையில் இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு எஸ்-ட்ரோனிக் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மில்ட் ஹைப்ரீட் என்ஜின் உடன் 2.0 லிட்டர் டிடிஐ என்ஜின் தேர்வும் புதிய ஆடி ஏ3 மாடலுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் 148 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

MOST READ: சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...!

இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு எஸ்-ட்ரோனிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக கொடுக்கப்படவுள்ளது. ஆடி நிறுவனம் இந்த புதிய செடான் மாடலின் விலை குறைவான வேரியண்ட்களில் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தை பெட்ரோல் என்ஜின் உடன் வழங்க போவதில்லை. ஆடி ஏ3 மாடலுக்கு முக்கியமான போட்டி மாடல்களாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமௌசைன் மற்றும் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே உள்ளிட்டவை உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
2021 Audi A3 sedan India debuts. Launch is expected next year mid.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X