மீண்டும் விற்பனைக்குவர தயாராகும் டாடா ஹெக்ஸா!! மீண்டும் சாலை சோதனையில்...

2021 டாடா ஹெக்ஸா பிஎஸ்6 கார் மாதிரி ஒன்று புனேவில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் விற்பனைக்குவர தயாராகும் டாடா ஹெக்ஸா!! மீண்டும் சாலை சோதனையில்...

டாடா மோட்டார்ஸின் இந்திய லைன்-அப்பில் ஹெக்ஸா நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. பிஎஸ்6 உமிழ்வு விதிமுறைகளினால் விற்பனையில் இருந்து இந்த 7-இருக்கை எஸ்யூவி கார் இந்த ஆண்டு துவக்கத்தில் நிறுத்தி கொள்ளப்பட்டது.

மீண்டும் விற்பனைக்குவர தயாராகும் டாடா ஹெக்ஸா!! மீண்டும் சாலை சோதனையில்...

ஆனால் மீண்டும் ஹெக்ஸாவை கொண்டுவர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது. இதன் முதல் படியாக வித்தியாசமான தோற்றத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எஸ்யூவி கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்தப்படியாக தற்போது ஹெக்ஸா இந்தியாவில் புனேவில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்பி ஆட்டோ டெக் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை வீடியோவில் சோதனை கார் மாதிரி எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் '4x4' முத்திரை உடன் காட்சியளிக்கிறது. காரின் வெளிப்புற தோற்றத்தில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

மீண்டும் விற்பனைக்குவர தயாராகும் டாடா ஹெக்ஸா!! மீண்டும் சாலை சோதனையில்...

தற்போது சோதிக்கப்பட்டிருப்பது ஹெக்ஸாவின் விலை குறைவான 4X4 வேரியண்ட் ஆகும். ஏனெனில் சோதனை கார் இரும்பு சக்கரங்களுடன் இயங்குகிறது. விலை அதிகமான வேரியண்ட்கள் இரு-நிற பெயிண்ட் அமைப்பில் வழங்கப்படும்.

மீண்டும் விற்பனைக்குவர தயாராகும் டாடா ஹெக்ஸா!! மீண்டும் சாலை சோதனையில்...

டாடாவின் இம்பேக்ட் டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கார்களுள் ஒன்றான ஹெக்ஸாவின் இந்த சோதனை மாதிரி பை-எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. காரில் மிக முக்கிய மாற்றமாக வழக்கமான 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6-க்கு இணக்கமானதாக வழங்கப்படவுள்ளது.

மீண்டும் விற்பனைக்குவர தயாராகும் டாடா ஹெக்ஸா!! மீண்டும் சாலை சோதனையில்...

இதன் பிஎஸ்4 வெர்சன் டாப் வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக 154 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனையும், விலை குறைவான வேரியண்ட்களில் 140 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையிலும் வழங்கப்பட்டது.

மீண்டும் விற்பனைக்குவர தயாராகும் டாடா ஹெக்ஸா!! மீண்டும் சாலை சோதனையில்...

ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற கியர்பாக்ஸ் தேர்வுகள் ஹெக்ஸாவில் வழங்கப்பட்டு வந்தன. இதன் பிஎஸ்6 வெர்சனில் 4X4 ட்ரைவ்ட்ரெயினும் கூடுதல் தேர்வாக வழங்கப்படவுள்ளதை இந்த ஸ்பை வீடியோவின் மூலம் உறுதியாகிறது.

மீண்டும் விற்பனைக்குவர தயாராகும் டாடா ஹெக்ஸா!! மீண்டும் சாலை சோதனையில்...

முன்னதாக பிஎஸ்6 டாடா ஹெக்ஸாவின் அறிமுகம் இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவினால் அறிமுகம் தள்ளிப்போனது. இந்த பிஎஸ்6 டாடா காரின் அறிமுக தேதி குறித்த எந்தவொரு தகவலும் தற்போதைக்கு இல்லை என்பதுதான் வருத்தத்தரக்கூடிய செய்தியே.

Most Read Articles

English summary
2021 Tata Hexa BS6 Spied Testing In Pune – Launch Expected Next Year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X