உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே உலகளாவிய அளவில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இதன் பிரத்யேகமான புகைப்படங்களின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தினால் புதிய காம்பஸ் மாடல் வெளிப்புறத்தில் சில ஸ்டைலான அப்டேட்கள் மற்றும் புத்துணர்ச்சியான டிசைன்களுடன் புதிய என்ஜின் தேர்வையும் பெற்றுள்ளது. சர்வதேச சந்தையில் புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்போர்ட், லாங்கிட்யூட், நைட் ஈகுள், லிமிடேட் மற்றும் எஸ் என்ற ஐந்து விதமான க்ரேட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

அதேபோல் இவொரி ட்ரை-கோட், கொலராடோ சிவப்பு, ப்ளூ இத்தாலியா, ப்ளூ ஷேட் மற்றும் டெக்னோ க்ரீன் மெட்டாலிக் ஷேட் என்ற ஐந்து நிறத்தேர்வுகளிலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை பெறலாம். முன்புறத்தில் இந்த மாடல் சற்று மறுவேலை செய்யப்பட்ட ஹெட்லேம்ப்களுடன் திருத்தியமைக்கப்பட்ட க்ரில் அமைப்பை தேன்கூடு வடிவிலான செருகல்களுடன் பெற்றுள்ளது.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

அதேநேரம் ஜீப் ப்ராண்ட்டிற்கே உண்டான ஏழு-ஸ்லாட் டிசைனும் காரின் முன்பகுதியில் தொடர்ந்துள்ளது. சிறிது மாற்றியமைக்கப்பட்ட முன்புற பம்பரை பெற்றுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் அலாய் சக்கரங்கள் 16-19 இன்ச் ரேஞ்சில் வழங்கப்பட்டுள்ளன.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

மற்றப்படி உட்புற அம்சங்கள் மிகவும் குறைவான அளவிலான மாற்றங்களையே ஏற்றுள்ளன. டேஸ்போர்டு புதிய லேஅவுட்டில் தற்போது பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான ஹௌசிங்கை கொண்டுள்ளது.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

இவற்றுடன் ஃபியாட் குழுமத்தின் யுகனெக்ட் 5 தொழிழ்ற்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 2021 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான கூடுதல் வசதியாக புதிய 1.3 லிட்டர், 4-சிலிண்டர் நேரடி இன்ஜெக்‌ஷன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உள்ளது.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

இந்த டர்போசார்ஜ்டு என்ஜினானது, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 128 பிஎச்பி பவரையும், 6-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் 148 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இதனுடன் 1.6 லிட்டர் மல்டிஜெட் II டீசல் என்ஜின் தேர்வும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வழங்கப்படவுள்ளது.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

எஸ்சிஆர் (தேர்ந்தெடுக்கப்பட்ட கேட்டலிடிக் ரெடக்‌ஷன்)-ஐ கொண்டுள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. மேற்கூறப்பட்ட நவீன அப்டேட்கள் உடன் சஸ்பென்ஷனின் அதிர்வெண்ணை பொறுத்து டேம்பிங் விசையை அளிக்கும் தொழிற்நுட்பத்தையும் புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

காரில் நிலையான பாதுகாப்பு வசதிகளாக அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், முன்புறமாக கார் மோதுவதை தடுக்கும் எச்சரிக்கை சிஸ்டம், பாதை புறப்பாடு வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ப்ளைண்ட் ஸ்பாட் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

உலகளவில் வெளியானது புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்... 2021ல் இந்தியாவிற்கு வருகிறது...

இந்தியாவில் 2017ல் அறிமுகமான தற்போதைய காம்பஸ் மாடலுக்கு மாற்றாக வெளிவரவுள்ள 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நம் நாட்டு சந்தையில் அடுத்த ஆண்டில் அறிமுகமாகவுள்ளது. தற்சமயம் ரூ.16.49 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு காம்பஸ் மாடலின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் எக்ஸ்ஷோரூமில் சற்று கூடுதலான விலையினை பெறலாம்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
2021 Jeep Compass Facelift Unveiled Globally: India Launch Expected Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X