டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

மூன்றாம் தலைமுறை என்3 பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட சொரேண்டோ எஸ்யூவி மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த எஸ்யூவி கரை பற்றிய முக்கியமான சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்தச் செய்தியில் காண்போம்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

கியா நிறுவனம் சொரேண்டோ எஸ்யூவி மாடலை இந்த மாத துவக்கத்தில் ஜெனிவாவில் நடைபெற இருந்த சர்வதேச மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெனிவா கண்காட்சி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

சர்வதேச சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கியா சொரேண்டோவின் இந்த நான்காம் தலைமுறை காரை 2021ஆம் வருடத்தில் சந்தைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனமான கியா திட்டமிட்டு வருகிறது. இந்த எஸ்யூவி கார், இந்நிறுவனத்தின் முதல் இந்திய அறிமுக மாடலான செல்டோஸ் எஸ்யூவியுடன் வெளிப்புற டிசைனில் பெருமளவு ஒத்து போகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

இந்த இரு எஸ்யூவி மாடல்களிலும் வெளிப்புறத்தில் புலியின் மூக்கு வடிவிலான க்ரில், முழுவதும் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப், ஸ்போர்ட்டியான டிசைனில் பம்பர்கள், காரை சுற்றிலும் கொடுக்கப்பட்டுள்ள சில்வர் நிற பாகங்கள் மற்றும் கியா நிறுவனத்திற்கே உரியதான கூர்மையான டிசைன் உள்ளிட்டவை கிட்டத்தட்ட ஒரே டிசைனில் தொடர்ந்துள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

ஏற்கனவே கூறியதுபோல் இந்த எஸ்யூவி கார் தயாரிக்கப்பட்டு வருகின்ற மூன்றாம் தலைமுறை என்3 ப்ளாட்ஃபாரத்தில் தான் கார்னிவல் எம்பிவி மாடலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. வித்தியாசமான டிசைன் அமைப்புகளை பெற்றுள்ள கார்னிவல் எம்பிவி காருக்கு சந்தையில் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

2021 கியா சொரேண்டோ மாடலின் உள்ளே 10.25 இன்ச்சில் தொடுத்திரையும் இதன் டாப் ட்ரிம்களில் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலும் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர்த்து இந்த எஸ்யூவி காரில் உட்புறத்தில் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

அவையாவன, சுற்றிலும் 12-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ, கேமிரா மூலமாக ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை காணும் வசதி, மல்டி-கொல்லிஷன் ப்ரேக் சிஸ்டம், சுற்றிலும் பிரகாசமான விளக்குகள் மற்றும் நப்பா லெதரால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள் ஆகும்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் வசதிகளை கொண்டுள்ளதால் இதுவரை உருவாக்கப்பட்ட கியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் சொரேண்டோ எஸ்யூவி மாடல் தான் அதிகளவிலான ஹை-டெக் வசதிகளை கொண்ட காராக விளங்குகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

சில வெளிநாட்டு சந்தைகளில் இந்நிறுவனத்தின் பெரிய தோற்றமுடைய மிட்-சைஸ் டெல்லுரைட் மாடல் கார் விற்பனை செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக அதன் இடத்தை அத்தகைய சந்தைகளில் செரேண்டோ மாடல் தான் பெரிய அளவிலான எஸ்யூவியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

இந்த 2021 எஸ்யூவி மாடலில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 198 பிஎச்பி பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. இதே என்ஜின் தான் மாறுப்பட்ட வெளியிடும் ஆற்றல் அளவுகளுடன் கார்னிவல் எம்பிவியில் பொருத்தப்பட்டு வருகிறது.

டீசல் என்ஜின் தேர்வு மட்டுமின்றி சொரேண்டோ எஸ்யூவி ஹைப்ரீட் தேர்விலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் 1.6 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுடன் 59 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும் 1.5 kWh பேட்டரியும் பொருத்தப்படவுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

இவற்றின் மூலமாக 227 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனில் அதிகப்பட்சமாக காரை இயக்க முடியும். இதன் என்ஜின் அமைப்புடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த என்ஜின் தேர்வுகளுடன் வருங்காலத்தில் 261 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டும் இணைக்கப்படவுள்ளது.

ட்ரான்ஸ்மிஷன் தேர்வு கியாவின் இந்த புதிய எஸ்யூவி மாடலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய தலைமுறை சொரேண்டோ மாடல்களில் வழங்கப்பட்டு வந்த 8-ஸ்பீடு டார்க்-கன்வெர்டருக்கு பதிலாக 8-ஸ்பீடு ஈரமான-தட்டு டிசிடி கியர்பாக்ஸ் என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...

இந்த புதிய ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். 2021 கியா சொரேண்டோ காரானது 4.8மீ நீளமுடைய அதன் முந்தைய தலைமுறை காரை விட 10 மிமீ நீளம் அதிகம் கொண்டதாக உள்ளது. இதேபோல் இந்த காரின் வீல்பேஸும் 35மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த கார் தொடர்ந்து மிட்-சைஸ் 7-இருக்கை எஸ்யூவி மாடலாக சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. கியா சொரேண்டோ மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை மட்டும் சரியாக அமைந்தால், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா கிராவிட்டாஸ் மாடல்களுடன் விற்பனையில் போட்டியிடக்கூடும்.

Most Read Articles
English summary
2021 Kia Sorento will rival to Toyota Fortuner in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X