மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மாடலின் தொடுத்திரையை கொண்ட டேஸ்போர்டு, சோதனையின் போது நமது பார்வைக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்திலும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புற ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன. அவற்றில் கார் எளிமையான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் மைய கன்சோலை கொண்டிருந்தது.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

இது நமக்கு சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது ஆரம்ப நிலை வேரியண்ட், இதுதான் டாப் வேரியண்ட்டின் உட்புற கேபின் என்பதை கூறும் விதமாக மெர்சிடிஸ் ஸ்டைலிலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்ட புதிய எக்ஸ்யூவி500-ன் உட்புற ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

இந்த படங்களை ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் முழு மறைப்புடன் 2021 எக்ஸ்யூவி500 காரின் இந்த சோதனை ஓட்டம் தமிழ்நாடு காரவள்ளி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சோதனை காரின் டேஸ்போர்டு இதுவரை காணப்படாத ஒற்றை-துண்டு பரந்த திரையை கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

இந்த திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் என்ற இரண்டிற்கும் சேர்த்து செயல்படக்கூடியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய லேஅவுட்களுக்கு மெர்சிடிஸ் நிறுவனம் தான் முன்னோடியாகும். இத்தகைய டேஸ்போர்டு டிசைன் எதிர்காலத்தில் இந்தியாவில் மற்ற கார்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

ஆனால் இத்தகைய டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தான் வழங்கப்படவுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் பகுதி வழக்கமான இணைப்பு வசதிகளுடன் மாடர்ன் இணைப்பு வசதிகளையும் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

இவ்வாறான அசரடிக்கும் அம்சங்களை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உடன் வலுவாக போட்டியிடுவதற்காக புதிய எக்ஸ்யூவி500-ல் மஹிந்திரா நிறுவனம் கொண்டுவந்துள்ளது என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. இந்த புதிய டேஸ்போர்டு தவிர்த்து இந்த ஸ்பை படங்களில் வேறெந்த புதிய அம்சத்தையும் இந்த 2021 எக்ஸ்யூவி500 சோதனை காரில் பார்க்க முடியவில்லை.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

இதனால் முந்தைய சோதனை ஓட்டங்களில் கொண்டிருந்த அம்சங்களையே இந்த சோதனை எக்ஸ்யூவி500 காரும் கொண்டுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500-ல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

அதேநேரம் 2020 மஹிந்திரா தாரில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினையும் புதிய எக்ஸ்யூவி500-ல் எதிர்பார்க்கலாம். இவை இரண்டுடனும் ட்ரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட, டாப் வேரியண்ட்கள் மட்டுமே அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தை பெறலாம்.

மெர்சிடிஸ் ஸ்டைல் டேஸ்போர்டு 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரிலா...? நம்பவே முடியலங்க...

அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடுத்த 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த 2021 மாடலின் மூலமாக அடுத்த ஆண்டில் எஸ்யூவி பிரிவில் மஹிந்திரா நிறுவனம் கணிசமாக இலாபத்தை பெறும் என்று பேச்சுகள் எழுகின்றன. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மட்டுமின்றி விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள டாடா கிராவிட்டாஸும் இந்த மஹிந்திரா தயாரிப்பிற்கு போட்டியாக விளங்கவுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2021 Mahindra XUV500 Touchscreen Dashboard Spied – Mercedes Inspired
Story first published: Sunday, October 11, 2020, 3:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X