2021 மாருதி ஸ்விஃப்ட் மாடலின் என்ஜின் அமைப்பில் மாற்றம்... எரிபொருள் & செயல்திறன் மேம்படுகிறது...

மாருதி சுசுகி நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் வகையில் சில அப்டேட்களுடன் 2021ஆம் ஆண்டிற்காக தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த 2021 மாடலில் தற்போதைய ஸ்விஃப்ட் மாடலை காட்டிலும் ஆற்றலும் எரிபொருள் திறனும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பயணிகள் வாகனமாக விளங்குகிறது. இருப்பினும் இதற்கான உரிமையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தயாரிப்பு நிறுவனம் இதன் அப்டேட் வெர்சனை இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு கொண்டு வருகிறது.

ஆனால் 2021 ஸ்விஃப்ட் மாடல் தோற்ற அளவில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டிருக்காது என்றே தெரிகிறது. அதிகப்பட்சமாக அப்டேட்டான டிசைனில் பம்பர், ஃபாக் விளக்குகள், அலாய் சக்கரங்கள், சற்று பெரியதான க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

இதேபோல் உட்புறத்தில் சில நுட்பமான அப்டேட்கள் இருக்கலாம். இந்த 2021 மாடலின் மிக முக்கியமான மாற்றமாக என்ஜின் தேர்வில் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின் கொண்டுவரப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தற்போதைய 1.2 லிட்டர் என்ஜினில் ஒவ்வொரு சிலிண்டரிலும் இரட்டை எரிபொருள் இன்ஜெக்டர்கள் வழங்கப்படவுள்ளன.

இதனால் என்ஜினின் எரிபொருள் திறன் மற்றும் செயல்திறன் நிச்சயம் மேம்படும். தற்சமயம் வழங்கப்படுகின்ற மாடலுடன் ஒப்பிடும்போது ட்யூல்ஜெட் யூனிட் ஆனது 7 பிஎச்பி பவரை அதிகமாக வெளிப்படுத்தும். ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் உடன் உள்ள மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் எரிபொருள் திறனை அதிகரிக்க வழி செய்யும்.

நேரடி இன்ஜெக்‌ஷன் டர்போ-பெட்ரோல் என்ஜின்களுக்கு மாற்றாக மாருதி நிறுவனம் இந்த புது விதமான பெட்ரோல் என்ஜின் அமைப்பை கொண்டு வருகிறது. ஏனெனில் அதன் பெரும்பான்மையான போட்டி நிறுவனங்கள் நேரடி இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் என்ஜின்களை தங்களது தயாரிப்புகளுக்கு பொருத்துவதை வாடிக்கையாக்கிவிட்டன.

மற்றப்படி ஸ்விஃப்ட் போன்ற அளவில் சிறியதான கார்களுக்கு டீசல் என்ஜின் தேர்வை வழங்கும் திட்டத்தில் மாருதி நிறுவனம் தற்போதைக்கு இல்லை. அதற்கு பதிலாக பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின் உடன் அத்தகைய கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

மாருதி ஸ்விஃப்ட் மாடலுக்கு சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் போன்ற ஹேட்ச்பேக் காரில் இருந்து இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 போன்ற மைக்ரோ க்ராஸ்ஓவர் வரையிலும் நீண்ட போட்டி மாடல்கள் உள்ளன. இதற்கிடையிலும் அறிமுகத்தில் இருந்து 15 வருடங்களில் 22 லட்ச யூனிட் விற்பனை என்ற மைல்கல்லை சமீபத்தில் இந்த மாருதி கார் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2021-maruti swift will come in form of dualjet petrol engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X