சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

மெர்சிடிஸ் மேபக் பிராண்டில் உயர்வகை எஸ் க்ளாஸ் சொகுசு கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள், இந்திய வருகை விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

உலக அளவில் மிகச் சிறந்த சொகுசு கார் மாடல் என்ற பெருமையை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் பெற்றிருக்கிறது. இதன் அதிக சொகுசு அம்சங்கள் கொண்ட மிகவும் பிரிமீயம் மாடல் மெர்சிடிஸ் மேபக் பிராண்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்களுடன் விசாலமான இடவசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் (S580) கார் உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

இந்த கார் 5.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. மேலும், சாதாரண எஸ் க்ளாஸ் காரைவிட வீல்பேஸ் 180 மிமீ கூடுதலாக இருக்கிறது. இந்த காரில் 21 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. எளிதாக ஏறி இறங்குவதற்கு வசதியாக பின்புற கதவுகள் அகலமாகவும், எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் திறக்கும் வசதியும் இருக்கிறது.

சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

பின்புற இருக்கைகள் 19 டிகிரி முதல் 44 டிகிரி வரை சாய்மான வசதி கொண்டதாக இருக்கிறது. பின்புற இருக்கை கால்கள் வைப்பதற்கு அதிக வசதியுடன், ஆர்ம் ரெஸ்ட், மசாஜ் வசதிகளுடன் மிக சொகுசாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

பின்புற பயணிகளுக்காக 11.6 அங்குல டிவி திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு எக்ஸிக்யூட்டிவ் ரியர் இருக்கை பேக்கேஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முழுமையான சென்டர் கன்சோல், ட்ரே டேபிள், கூலர் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படும்.

சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

இந்த புதிய சொகுசு காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் உள்ளது. அத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 496 பிஎச்பிபவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ரியர் ஆக்சில் ஸ்டீயரிங் சிஸ்டமும் இந்த காரில் இருப்பதால், நெருக்கடியான இடங்களில் எளிதாக திருப்புவதற்கு வசதியை அளிக்கும்.

சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் வி8 மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

சொகுசு கார்களில் வேற லெவல்... புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது உயர்வகை கார்களை மெர்சிடிஸ் மேபக் மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டுகளில் விற்பனை செய்து வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் விற்பனை செய்யப்படும் சாதாரண கார்களில் கூடுதல் மாற்றங்கள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின்களுடன் உயர்வகை மாடல்களாக மேபக் மற்றும் ஏஎம்ஜி பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மிக அதிக சொகுசு வகை கார்கள் மேபக் பிராண்டிலும், அதிசெயல்திறன் கொண்ட மாடல்கள் ஏஎம்ஜி பிராண்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Most Read Articles
English summary
Mercedes-Benz has revealed the new Maybach S580 and It's based on flagship variant of the W223 S-Class.
Story first published: Friday, November 20, 2020, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X