புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச்ரோவர் சொகுசு எஸ்யூவி கார்களின் இந்திய விலைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களின் விலை வெளியீடு!

இந்தியாவின் சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் மாடல்கள் அதிக வரவேற்பையும், மதிப்பையும் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி மாடல்களின் விபரங்கள் வெளியிடப்பட்டன.

புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களின் விலை வெளியீடு!

இதைத்தொடர்ந்து, தற்போது இந்த புதிய மாடல்களின் விலை விபரங்களை லேண்ட்ரோவர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி ரூ.88.24 லட்சத்திலிருந்து ரூ.1.50 கோடி வரையிலான விலையிலும், ரேஞ்ச்ரோவர் பிரிமீயம் எஸ்யூவி ரூ.1.96 கோடி முதல் ரூ.4.09 கோடி வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களின் விலை வெளியீடு!

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. S, SE, HSE, HSE Dynamic, Autobiography Dynamic, HSE Silver மற்றும் HSE Dynamic Black ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களின் விலை வெளியீடு!

புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியில் புதிய 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி ஸ்டான்டர்டு மற்றும் லாங் வீல் பேஸ் என இரண்டு ரகங்களில் வந்துள்ளது. புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியானது வோக், வெஸ்ட்மின்ஸ்டெர், வெஸ்ட்மின்ஸ்டெர் பிளாக், வோக் எஸ்இ, ஆட்டோபயோகிராஃபி, ரேஞ்ச்ரோவர் ஃபிப்டி மற்றும் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களின் விலை வெளியீடு!

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியில் வழங்கப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 296 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 3.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களின் விலை வெளியீடு!

புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியில் வழங்கப்படும் 3.0 லிட்டர் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் எஞ்சின் அதிகபட்சமாக 394 பிஎச்பி பவரையும், 3.0 லிட்டர் டீசல் மைல்டு ஹைப்ரிட் எஞ்சின் அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கின்றன.

புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களின் விலை வெளியீடு!

இதன் எஸ்விஆர் வேரியண்ட்டில் வழங்கப்படும் அதிசக்திவாய்ந்த 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 567 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் விலை விபரம் வெளியிடப்படவில்லை. பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
The 2021 Range Rover line-up was revealed the 2021 Range Rover and the 2021 Range Rover Sport prices for the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X