2021 சுசுகி விட்டாரா எஸ்யூவி அக்டோபரில் உலகளாவிய அறிமுகம்... அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வருகிறது

சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை விட்டாரா எஸ்யூவி மாடல் இந்த வருட அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 சுசுகி விட்டாரா எஸ்யூவி அக்டோபரில் உலகளாவிய அறிமுகம்... அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வருகிறது

இந்த தகவலுக்கு முன்னதாக வெளியாகி இருந்த தகவலில் சுசுகி விட்டாரா மாடலின் புதிய தலைமுறை இந்திய சந்தையில் விற்பனையில் பெரிய அளவில் சாதிக்காத மாருதி எஸ்-க்ராஸ் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

2021 சுசுகி விட்டாரா எஸ்யூவி அக்டோபரில் உலகளாவிய அறிமுகம்... அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வருகிறது

இருப்பினும் எஸ்-க்ராஸ் மாடலில் புதியதாக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சுசுகி விட்டாரா மாடல் சர்வதேச சந்தையில் வரும் அக்டோபர் மாதத்தில் அறிமுகமானாலும், இந்தியாவில் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் தான் விற்பனைக்கு வரும்.

2021 சுசுகி விட்டாரா எஸ்யூவி அக்டோபரில் உலகளாவிய அறிமுகம்... அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வருகிறது

அதற்குள் எஸ்-க்ராஸ் மாடல் அதன் பிரிவிற்கு சரியாக இருக்குமா என்பதை பற்றிய புரிதல் ஏற்பட மாருதி நிறுவனத்திற்கு சரியாக இருக்கும். புதிய தலைமுறை சுசுகி விட்டாரா மாடல் அதன் தற்போதைய தலைமுறை காரை காட்டிலும் சற்று பெரியதாக 4,200மிமீ-ல் நீளத்தையும், 1620மிமீ-ல் உயரத்தையும், 1,780மிமீ-ல் அகலத்தையும் கொண்டுள்ளது.

2021 சுசுகி விட்டாரா எஸ்யூவி அக்டோபரில் உலகளாவிய அறிமுகம்... அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வருகிறது

இதன் காரணமாக கேபினின் அளவும் அதிகரித்து உள்ளது. இருப்பினும் வீல்ஸ்பேஸ் வழக்கம்போல் 2,500மிமீ-ல் தான் இருக்கும். பரிணாம அளவுகளை போல் காரின் டிசைனும் முந்தைய தலைமுறையில் இருந்து சற்று வேறுப்பட்டிருக்கும். இதன்படி கூர்மையான தோற்றத்தில் வெளிப்புறத்தை பெறவுள்ள இந்த காரின் உட்புற கேபின் ப்ரீமியம் தரத்தில் வழங்கப்படவுள்ளது.

2021 சுசுகி விட்டாரா எஸ்யூவி அக்டோபரில் உலகளாவிய அறிமுகம்... அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வருகிறது

இவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல் இந்த காரின் உலகளாவிய அறிமுகத்தின்போது தான் தெரிய வரும். சுசுகி விட்டாரா அடுத்த தலைமுறை காரின் சர்வதேச மாடலில் 1.4 லிட்டர், இன்லைன்-4, டர்போசார்ஜ்டு ‘பூஸ்டர்ஜெட்' பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 சுசுகி விட்டாரா எஸ்யூவி அக்டோபரில் உலகளாவிய அறிமுகம்... அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வருகிறது

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 129 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதனுடன் காரின் செயல்திறன் மற்றும் எரிபொருள் திறனை மேம்படுத்தும் முயற்சியாக 48 வோல்ட் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தையும் இந்த எஸ்யூவி காரில் சுசுகி நிறுவனம் வழங்கவுள்ளது.

2021 சுசுகி விட்டாரா எஸ்யூவி அக்டோபரில் உலகளாவிய அறிமுகம்... அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வருகிறது

இந்தியாவில் இந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் 1.5 லிட்டர் கே-சீரிஸ் என்ஜின் தற்சமயம் சோதனைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த காருக்கு நேரடி போட்டியினை ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் கேப்சர் உள்ளிட்ட மாடல்கள் வழங்கவுள்ளன.

Most Read Articles
மேலும்... #சுசுகி #suzuki
English summary
2021 Suzuki Vitara Global Debut Slated For October 202
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X