மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

2021ஆம் ஆண்டிற்காக டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் மாடல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்தியா உள்பட மற்ற வெளிநாட்டு சந்தைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சாலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்த வகையில் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தாய்லாந்து நாட்டு சந்தையில் கடந்த ஜூன் மாதத்திலேயே இந்த 2021 மாடல் அறிமுகமாகிவிட்டது.

மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

அந்நாட்டு சந்தையில் ஸ்டாண்டர்ட் & லெஜண்டர் என்ற வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள புதிய ஃபார்ச்சூனர் மாடல் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இருபக்கங்களில் கவனிக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

ஆனால் இந்தியாவில் இந்த 2021 தாய்லாந்து வெர்சனை காட்டிலும் சற்று அகலம் குறைவான தோற்றத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் காடிவாடி செய்தி தளம் மூலம் வெளியாகியுள்ள தற்போதைய சோதனை ஓட்டத்தின் ஸ்பை வீடியோவில் சோதனை கார் சோதனை கிட்டை கொண்டுள்ளது. மேலும் இந்த சோதனை ஃபார்ச்சூனர் அதன் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆகும். எந்த மறைப்பாலும் மறைக்கப்படாததால் காரின் முன்புறம் மாடர்ன் ஸ்டைலிங் பாகங்களுடன் அப்டேட் செய்யப்பட்டிருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இதனால் ஃபார்ச்சூனர் மாடலின் ஆயுட்காலம் நிச்சயம் நீளும். வெளிப்புறத்தில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களை பெற்றுள்ள 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டில் தடிமனான க்ரோம்-ஆல் ஆன ஒருங்கிணைக்கப்பட்ட ரன்னிங் லைட்கள், ரீடிசைனில் முன்புற க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இவை மட்டுமின்றி திருத்தியமைக்கப்பட்ட ஃபாக் விளக்கு ஹௌசிங், கிடைமட்டமான எல்இடி டர்ன் சிக்னல்களுடன் முன்புற பம்பர், புதிய டிசைனில் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், க்ரோம்-ஆல் கார்னிஷிங் செய்யப்பட்ட விண்டோ லைன், க்ரோம் கதவு ஹேண்டில்கள், கருப்பு நிறத்தில் பில்லர்கள் மற்றும் புதிய பக்கவாட்டு படிக்கட்டுகள் போன்றவற்றையும் இந்த சோதனை காரில் பார்க்க முடிகிறது.

மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

அப்படியே பின்புறத்திற்கு வந்தால், ரீ-ஸ்டைலில் எல்இடி டெயில் லேம்ப்கள், பின்புற ஸ்கிட் ப்ளேட், ஃபார்ச்சூனர் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட டெயில்கேட் மற்றும் அப்டேட்டான பம்பர் பொருத்தப்பட்டுள்ளன. உட்புற கேபின் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட நிறைய மாற்றங்களை ஏற்றுள்ளது.

மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட இந்த சிஸ்டத்துடன், 4.2 இன்ச் திரையுடன் புதிய ஆப்டிட்ரோன், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவையும் இதன் கேபினில் உள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2.8 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்ட என்ஜின் தேர்வுகள் இந்த 2021 மாடலுக்கு கொடுக்கப்படவுள்ளன.

மறைப்பு எதுவுமின்றி 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 166 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota Fortuner Facelift Spied On Video Ahead Of India Launch
Story first published: Wednesday, August 12, 2020, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X