Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 9 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 10 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 11 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும்?.. பக்க விளைவுகள் என்ன?.. முழு விவரம்!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு!! 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...
சர்வதேச சந்தைகளுக்கான 2021 டிகுவான் ஆர் காரை பற்றிய விபரங்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவார் ஆர் காரில் மிக முக்கிய அம்சமாக அதிகப்பட்சமாக 315 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உதவியுடன் காரின் வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் 0-வில் இருந்து 100 kmph-க்கு கொண்டு செல்ல முடியும்.

புதிய அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ள இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் மாடலின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும். விரைவில் உலகளவில் விற்பனைக்கு வரவுள்ள டிகுவான் ஆர், ஸ்போர்ட்ஸ் காரின் செயல்திறன் உடன் எஸ்யூவியின் தோற்றத்தை பெற்றுள்ளது.

ஜெர்மனியில் ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய தயாரிப்பின் விலை 56,703.53 யூரோகளாக (கிட்டத்தட்ட ரூ.50.05 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி காரில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இஏ888 எவோ4, 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 2,100- 5,350 ஆர்பிஎம்-ல் 315 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் ஆற்றல் 4மோஷன் & ஆர்-செயல்திறன் டார்க் வெக்டரிங் உடன் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கப்படும்.

வோக்ஸ்வாகன் முதல் முறையாக இரண்டு மல்டிபிளேட் க்ளட்ச்களுடன் பின்புற இறுதி இயக்ககத்தை இந்த காரில் செயல்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு முன் மற்றும் பின்புற அச்சுகளுக்கு இடையில் இயக்கி சக்தியை விநியோகிப்பது மட்டுமல்லாமல், இடது மற்றும் வலது பின்புற சக்கரங்களுக்கு இடையில் மாறுபடும்.

புதிய டிகுவான் ஆரில் வளைவுகளின்போது தேவைப்படும் ஹேண்ட்லிங்கை மேம்படுத்தியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. ஸ்டைலிங்கை பொறுத்தவரையில், புதிய ஆர் டிசைன் பம்பர்கள் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி பளபளப்பான கருப்பு நிறத்தில் காற்றியக்கவியலுக்கான பாகங்கள், மேட்-க்ரோம்டு பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், அதி-பளபளப்பான கருப்பு நிறத்தில் பின்பக்க டிஃப்யூஸர், கருப்பு நிறத்தில் சக்கரங்களுக்கு மேற்புறத்தில் வளைவுகள் மற்றும் 20-இன்ச் மிஸானோ அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றையும் இந்த எஸ்யூவி கார் ஏற்றுள்ளது.

உட்புறத்தில் இணைக்கப்பட்ட தலையணைகளுடன் ப்ரீமியம் தரத்திலான ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் கார்பன் க்ரே நிறத்தில் ஃபோக்ஸ்வேகன் ஆர் கார்களுக்கே உண்டான அலங்கார ட்ரிம் உடன் லேப் டைமரை கொண்ட கஸ்டமைஸ்ட் டிஜிட்டல் காக்பிட் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

அலங்கார ட்ரிம் பாகங்கள் பின்புற விளக்குகளினால் ஒளியூட்டப்பட்டுள்ளன. பெடல்கள் வளையாத இரும்பினால் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் 18 இன்ச்சில் ப்ரேக் சிஸ்டம் போன்ற நீட்டிக்கப்பட்ட தொழிற்நுட்ப ஆர் பாகமும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் ப்ரேக் அமைப்பில் நீல ப்ரேக் காலிபர்கள், அடாப்டிவ் ஷாக் அப்சார்பர்ஸ் டிசிசி சேசிஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. புதிய பல-செயல்பாட்டு ஸ்போர்ட் ஸ்டேரிங் சக்கரத்தில் உள்ள நீல ஆர் பொத்தான் மூலமாக ஸ்போர்டி மோட்-ஐ ஆக்டிவேட் செய்யலாம்.

7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷனை மேனுவலாக கண்ட்ரோல் செய்வதற்கு பெடல் ஷிஃப்டர்களும் இந்த காரில் உள்ளன. இவை மட்டுமின்றி 4-கிளை ஸ்போர்ட்ஸ் எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் செயலிழக்கக்கூடிய இசிஎஸ்-உம் இந்த எஸ்யூவி காரில் நிலையாக வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் தேர்வாக அக்ராபோவிக்கின் டைட்டானியம் எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் 21 இன்ச்சில் எஸ்டோரில் அலாய் சக்கரங்களை இந்த காரில் பெறலாம். அதேபோல் ஸ்டைலான கருப்பு நிற தொகுப்புகளுடன் டிகுவான் ஆர் காரின் வெளிப்புறத்தை விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி கொள்ளவும் முடியும்.