பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

கியா நிறுவனத்தின் புதுமுக காரான சொனெட் கார் ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

தென் கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவிற்கான மூன்றாம் மாடல் காராக சொனெட் எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான இக்காருக்கு நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

அதாவது, கியாவின் செல்டோஸ் எஸ்யூவி காருக்கு கிடைத்ததைப் போலவே சொனெட்டிற்கும் சிறப்பான வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கின்றது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

கியா நிறுவனம், சொனெட் காரை செப்டம்பர் 18ம் தேதி அன்றுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அந்த மாதத்தின் இறுதிக்குள்ளாகவே 9 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன்பதிவை அது பெற்றது. அதாவது, அறிமுகம் செய்யப்பட்ட வெறும் 12 நாட்களிலேயே ஒட்டுமொத்தமாக 9,266 யூனிட்டுகளுக்கான புக்கிங்கை சொனெட் பெற்றது. இது ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

இந்த வரவேற்பை அக்கார் தொடர்ச்சியாக பெற்று வருவதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவில், ஷோரூம் வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட கியா சொனெட் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

அவையனைத்தும் கியா சொனெட் எஸ்யூவி காரைப் புக் செய்வதர்களுக்கு டெலிவரி வழங்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட காராகும். ஒட்டுமொத்தமாக அந்த ஒரே ஒரு நாளில் 25 யூனிட்டுகள் வரை டெலிவரிக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்காகவே அக்கார்கள் வரிசைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

இந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது எந்த பகுதி என்பது துள்ளியமாக தெரியவில்லை. சொனெட் ஓர் சப் 4 மீட்டர் ரக எஸ்யூவி ஆகும். இக்கார் யாரும் எதிர்பார்த்திராத குறைந்த விலையில் களமிறங்கியதே தற்போதைய அமோமகமான வரவேற்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

எண்ணற்ற சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இக்கார் பெற்றிருக்கின்றது. இதுவும், தற்போதைய வரவேற்பிற்கான காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளது. இதனால், புதிய வாகனம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலேயே சென்னையில் இந்த தனித்துவமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்து ரஷ்லேன் வெளியிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்.

இதுபோன்ற சம்பவம் சென்னையில் அரங்கேறுவது முதல் முறையல்ல, இருப்பினும், அறிமுகமான வெகு சில நாட்களிலேயே 25 யூனிட்டுகள் ஒரே நேரத்தில் டெலிவரி செய்யப்படுவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

கியா சொனெட், டெக்லைன் மற்றும் ஜிடி லைன் இரு வேரியண்டுகளாக விற்பனையாகக் கிடைக்கின்றது. இதில் டெக்லைனில் எச்டிஇ, எச்டிகே, எச்டிகே+, எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ்+ ஆகிய தேர்வுகளும், ஜிடிலைனில் ஜிடிஎக்ஸ்+ என்ற ஒரே ஒரு தேர்வும் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, இரட்டை மற்றும் ஒற்றை நிற தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

கியா சொனெட் காரில் காற்றோட்டத்தை உறுதிச் செய்யக்கூடிய இருக்கைகள், போஸ் சவுண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் யுவிஓ இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

மேலும், யுவிஓ இணைப்பு வசதியும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சத்தின் மூலம் சொனெட்டில் இருக்கும் 57 கருவிகளை செல்போன் வாயிலாகவே கட்டுப்படுத்த முடியும். காரை ஆன்/ஆஃப் செய்வது, க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஏசி சிஸ்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்களை செய்ய முடியும்.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் கியா சொனெட் எஸ்யூவி கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும்.. இதில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின்: இந்த எஞ்ஜின் இருவிதமான ட்யூன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, 100பிஎஸ்/240என்எம் டார்க் மற்றும் 115பிஎஸ்/250என்எம் ஆகிய திறன் வித்தியாசங்களில் டீசல் எஞ்ஜின் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வையும் இந்த எஞ்ஜின் வழங்குகின்றது.

பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்!

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின்; இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இதுபோன்ற எஞ்ஜின் தேர்வையை ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ காரும் வழங்கி வருகின்றது.

Most Read Articles

மேலும்... #கியா #kia motors
English summary
25 Kia Sonet SUV Cars Delivered In A Single Day. Read In Tamil.
Story first published: Thursday, October 8, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X