நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

கார் ரிப்பேர் ஆனால், உங்கள் பணத்தை கணிசமாக மிச்சம் பிடிக்க இந்த செய்தி உங்களுக்கு உதவும்.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

கார் வைத்திருப்பவர்களை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குதான் அதன் கஷ்டம் தெரியும். கார் மூலம் பல நன்மைகள் இருந்தாலும் கூட, ரிப்பேர் என்று வந்து விட்டால், அதன் உரிமையாளர்களுக்கு நிறைய செலவு வைத்து விடும். ரிப்பேரை சரி செய்ய அதிக செலவு ஆவதால், கார் உரிமையாளர்கள் பலர் கையை பிசைந்து கொண்டு நிற்கும் சூழல் இருக்கிறது.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

ஆனால் ஒரு சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால், கார் ரிப்பேருக்காக நீங்கள் செலவிடும் தொகையில், கணிசமான பகுதியை உங்களால் கண்டிப்பாக மிச்சம் பிடிக்க முடியும். அந்த டிப்ஸ்களை எல்லாம் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு நிச்சயமாக பயன் அளிக்கும் என நம்புகிறோம்.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

எதற்கெடுத்தாலும் மெக்கானிக்கிடம் ஓடாதீங்க!

காரில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும், உடனே மெக்கானிக்கிடம் ஓடுவதையே வழக்கமாக வைத்துள்ளீர்களா? அப்படியானால் ஒரு முறை இதைப்பற்றி சிந்தியுங்கள். அனைத்து கார் ரிப்பேர்களையும் மெக்கானிக்தான் சரி செய்ய வேண்டும் என்பது கிடையாது. சில சமயங்களில் சிறிய பழுதுகளுக்கு கூட உங்கள் மெக்கானிக் அதிக தொகையை வசூல் செய்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

எனவே காரின் பிரச்னைகளை நீங்களே சரி செய்ய பழகுங்கள். குறைந்தபட்சமாக ஒரு சில அடிப்படையான விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்து கொண்டால் கூட நல்லது. உங்கள் காரின் அனைத்து பழுதுகளையும் உங்களாலேயே சரி செய்ய முடியாததுதான். ஆனால் ஒரு சில பழுதுகளை நீங்கள் மிகவும் எளிதாக செய்ய முடியும்.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

காரின் பேட்டரியை மாற்றுவது, பிரேக் லைட்களை மாற்றுவது, வைப்பர் பிளேடுகளை மாற்றுவது, ஆயில் மற்றும் ஃபில்டர் மாற்றுவது ஆகியவற்றை உங்களாலேயே எளிதாக செய்ய முடியும். முதலில் கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால் பயிற்சி ஆக ஆக அனைத்தும் எளிதாக மாறிவிடும். சந்தேகம் இருந்தால், யூ-டியூப் வீடியோக்களை பார்த்து கற்று கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பணம் மிச்சமாகும்.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

யூஸ்டு பார்ட்ஸ்களை தேடுங்க!

காரில் ஒரு சில பாகங்கள் பழுதாகி விட்டால், புதிதுதான் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சில பாகங்களுக்கு யூஸ்ட்டு பார்ட்ஸ்களை பயன்படுத்தலாம். கார் ரிப்பேரின்போது, இதன் மூலம் கணிசமான தொகையை சேமிக்க முடியும் என்பது கார் உரிமையாளர்கள் பலருக்கும் தெரிவதில்லை. அத்தகைய பாகங்களின் தரம், நம்பகத்தன்மை தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

ஆனால் யூஸ்டு பார்ட்ஸ்களை வாங்கும்போது நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் ஏமாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு இந்த விஷயத்தில் போதிய அனுபவம் இல்லை எனும் நிலையில், நம்பகமான மற்றும் நெருக்கமான மெக்கானிக்குகளின் உதவியை நாடலாம். யூஸ்டு பார்ட்ஸ்களின் விலை குறைவு என்பதால், நீங்கள் கணிசமான தொகையை சேமிக்கலாம்.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

என்ன பிரச்னை என்பதை கண்டறியுங்கள்!

கார் ரிப்பேர் ஆகி விட்டால், நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். பெரிய ரிப்பேர் என்றால், சரியான மெக்கானிக்குகளால் மட்டும்தான் அதனை சரி செய்ய முடியும். ஆனால் உங்கள் பிரச்னையை பயன்படுத்தி கொண்டு, உங்களிடம் பணம் கறக்க ஒரு சில மெக்கானிக்குகள் முயற்சி செய்வார்கள். ஆரம்பத்தில் கொடுக்கும் எஸ்டிமேட்டில் அவர்கள் தேவையில்லாத சார்ஜ்களை குறிப்பிடலாம்.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

அதேபோல் இது ரிப்பேர் ஆகி விட்டது, அது ரிப்பேர் ஆகி விட்டது என உங்களை ஏமாற்றவும் அவர்கள் முயற்சி செய்யலாம். எனவே உங்கள் காரில் உண்மையிலேயே என்ன பிரச்னை? என்பதை நீங்களே கண்டறிய முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் ஏமாறுவதை தடுக்க முடியும். அதேபோன்று மேலும் ஓரிரு மெக்கானிக்குகளிடம் விசாரிப்பதும் நல்லது.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

மெக்கானிக் எல்லாரும் மோசம் கிடையாது பாஸ்!

ஒரு சில மெக்கானிக்குகள் தேவையில்லாமல் சார்ஜ் செய்தாலும், அனைவரையும் அப்படி கூறி விட முடியாது. பெரும்பாலான மெக்கானிக்குகள் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள கூடியவர்கள்தான். அத்தகைய நல்ல மெக்கானிக்குகளை கண்டறிய முடியாமல் போகும் போதுதான், மோசடி பேர்வழிகளிடம் நீங்கள் சிக்கி கொள்ள நேரிடுகிறது.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

ஆனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்கு தெரிந்த மெக்கானிக்குகளிடம் கார்களை விடும்போது இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். எனவே நல்ல மெக்கானிக்கை கண்டறியுங்கள். அத்துடன் அவர்களுடன் சுமூகமான முறையில் நல்ல உறவை வளர்த்து கொள்ளுங்கள். அவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்தால், அவர்களிடமே நீங்கள் தொடர்ந்து பழுது பார்க்கலாம்.

நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

வருமுன் காப்பதே சிறந்தது!

நோயை குணப்படுத்துவதை விட அதை வராமல் தடுப்பதே சிறந்தது. காருக்கும் அது பொருந்தும். எனவே நீங்கள் காரை முறையாக பராமரித்தால், அடிக்கடி ரிப்பேர் ஆவதற்கான அவசியமே இல்லாமல் போகும். இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் மனதில் வைத்து செயல்பட்டால், உங்கள் பர்சுக்கு எவ்விதமான பிரச்னையும் வராமல் தடுக்கலாம்.

Most Read Articles

English summary
5 Simple Ways To Save Money On Car Repairs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X