Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
குடியரசு தின சம்பவம்... பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் நோக்கி நடத்தவிருந்த விவசாயிகள் பேரணி ஒத்திவைப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சரவெடி! தொடர்ச்சியாக 5 புதிய கார்களை களமிறக்க பிரபல நிறுவனங்கள் திட்டம்... எந்த நிறுவனம், எப்போது..?
இரு பிரபல கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஐந்து புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எந்த நிறுவனம் எந்தெந்த கார்களைக் களமிறக்க இருக்கின்றது என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவிற்காக 2.0 திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய இரு நிறுவனங்களும் தொடங்கியிருக்கின்றன. இதன்படி வருகின்ற 2021ம் ஆண்டில் ஐந்து புத்தம் புதிய கார்களை அவை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றன. இதில், புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் விற்பனைக்கு வரவிருக்கும் மாடல்களும் அடங்கும். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஸ்கோடா ஆக்டோவியா ஃபேஸ்லிஃப்ட்:
ஸ்கோடா நிறுவனத்தின்கீழ் இந்தியாவில் விரைவில் புதுப்பிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவிருக்கும் கார்களில் ஸ்கோடா ஆக்டோவியாவும் ஒன்று. இது ஓர் பிரீமியம் செடான் ரக காராகும். இதனைப் புதுப்பித்தலின் மூலம் கூடுதல் பிரீமியம் வசதிகள் கொண்ட காராக ஸ்கோடா மாற்றி வருகின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல் கடந்த செப்டம்பர் மாதமே இந்தியாவில் அறிமுகமாகிவிடும் என கூறப்பட்டது.

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக இதன் அறிமுகம் தள்ளி போனது. தற்போது அடுத்த வருடம் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் புதுப்பித்தல் பணிகளின் அடிப்படையில் தோற்றம் மற்றும் அணிகலன்கள் உள்ளிட்ட சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி அடிப்படையிலான விஷன் ஐஎன் கான்செப்ட்:
ஸ்கோடா தற்போது விற்பனைச் செய்து வரும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களின் அடிப்படையில் புதிய மாடல் ஒன்றையும் விரைவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதனையே விஷன் ஐஎன் என்ற கோட் பெயரில் அது கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாக இது அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த காரையே விரைவில் ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகமும் 2021 ஆண்டிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. நவீன காலத்திற்கு ஏற்ப டிசைன் தாத்பரியங்களைப் பெற்றிருக்கும் இக்கார், தொழில்நுட்ப வசதிகளிலும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கின்றது. ஆமாங்க இந்த காரில் எக்கச்சக்க தொழில்நுட்ப வசதிகளை ஸ்கோடா வழங்க இருக்கின்றது.

ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் கொண்ட தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஒயர்லெஸ் சார்ஜர், சாஃப்ட் டச் டேஷ்போர்டு மற்றும் சன் ரூஃப் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

ஸ்கோடா கோடியாக் பெட்ரோல்
தற்போது விற்பனையில் இருக்கும் கோடியாக் காரில் பெட்ரோல் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியிலும் ஸ்கோடா ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், 2.0 லிட்டர் வசதிக் கொண்ட டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜினையே இது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 187பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இது, 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூவல் க்ளட்ச் வேகக்கட்டுப்பாட்டு கருவியுடன் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இத்துடன், சிறப்பு வசதிகளும் இக்காரில் இடம்பெற இருக்கின்றன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் புதுப்பிக்கப்பட்ட மாடலைப் போன்று இது இந்தியாவில் களமிறங்க இருப்பதால் பெரியளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதுப்பிக்கப்பட்ட தோற்றம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் இடத்தை நிவர்த்தி செய்ய இருக்கும் புதிய கார்:
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் வென்டோ மாடலை ரீபிளேஸ் செய்யும் வகையில்புதிய கார் ஒன்றை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்கார் ஓர் மிட்-சைஸ் செடான் ரக காராகும். இந்த கார் பற்றிய முக்கிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், ஃபோக்ஸ்வேன் நிறுவனத்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இந்த கார் அமைந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்:
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் டிகுவான் காரின் புதுப்பிக்கப்பட்ட மாடலை மிக சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த காரையே விரைவில் இந்தியாவிலும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. டிகுவான் ஆல்ஸ்பேஸ் பெயரில் இக்கார் அறிமுகமாக இருக்கின்றது. 5 இருக்கை வசதியுடன் இக்கார் அறிமுகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலே பார்த்த இந்த 5 கார்களே விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. அதாவது, 2021ம் ஆண்டிற்குள் இந்தியர்கள் கை வசம் சேரவிருக்கின்றன.