இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெறிக்க விடலாம்...

இந்தியா இராணுவத்தின் பயன்பாட்டிற்காக ஒட்டுமொத்தமாக 700 கார்கள் புதிதாக களமிறக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா-சீனா இரு நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் லடாக், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். இதனால் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதில், இரு நாட்டு தரப்பிலும் வீரர்கள் இழப்பு ஏற்பட்டது. ஆனால், இதனை அதிகாரப்பூர்வமாக சீனா அறிவிக்கவில்லை.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

இருப்பினும், ஏஎன்ஐ செய்தி தளம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் பலி எண்ணிக்கை ஏற்பட்டது உறுதியானது.

சீனாவின் இந்த அத்துமீறலைத் தொடர்ந்து நாட்டைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இராணுவ வீரர்களின் பயணத்தை நவீனமானதாக மாற்றும் நோக்கில் அதி திறன் கொண்ட கார்கள் புதிதாக வாங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

இதற்காக மாருதி நிறுவனத்தின் ஜிப்ஸி வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், சுமார் 700 ஜிப்ஸி கார்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தநிலையில், அவையனைத்தும் கடந்த ஜீன் மாதத்திற்கு உள்ளாகவே டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக கூடுதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

இந்த வாகனங்கள் எந்த மாதிரியான கரடு முரடான சாலைகளையும் மிக சுலபமாக கடக்கும் திறனைக் கொண்டவை ஆகும். அதுமட்டுமின்றி, இது வழக்கமான சாலைகளில்கூட சீறிப் பாய்ந்து செல்லும். ஆக மொத்தத்தில் இது ஓர் ஆல் ரவுண்டர் வாகனமாகும். எனவேதான் சுசுகி ஜிப்ஸி தனிச் சிறப்புக் கொண்ட வாகனமாகப் பார்க்கப்படுகின்றது.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

இதுபோன்ற காரணங்களினாலயே இந்திய இராணுவமும் இக்காரைத் தேர்வு செய்து, தற்போது வீரர்களின் பயன்பாட்டிற்கு களமிறக்கியிருக்கின்றது.

இந்திய இராணுவத்தில் இதுபோன்று ஜிப்ஸி வாகனங்கள் பயன்பாட்டிற்கு களமிறக்குவது முதல் முறையல்ல. இக்கார் பல தசாப்தங்களாக இராணுவத்தின் பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட்டு வருகின்றன.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

சுசுகி ஜிப்ஸியைப் பராமரிப்பது மிக சுலபம். மேலும், இதன் பயனும் பல மடங்கு அதிகம். பாதுகாப்புத்துறையில்தான் இக்கார் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜிப்ஸிகளுக்கான வர்த்தகம் இந்தியாவில் நிறுத்தப்பட்டிருந்தாலும் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக ஸ்பெஷலாக தயார் செய்து வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

இக்காரின் விற்பனை முடிவுக்கு வந்து சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இந்தியர்கள் மத்தியில் சுசுகி ஜிப்ஸி மீதான காதல் ஓய்ந்தபாடில்லை. ஆகையால், ஜிப்ஸியின் புதிய வரவை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

சுசுகி ஜிப்ஸி ஓர் ஐகானிக் மாடல் ஆகும். இந்த காரில் 80 பிஎச்பி மற்றும் 103 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், இது அனைத்து வீல் இயக்கம் கொண்ட காராகும். எனவே, எஞ்ஜினின் அதிவேக திறன் ஜிப்ஸியின் அனைத்து வீல்களுக்கும் கடத்தப்படுகின்றது. இந்த திறனே மிக சவாலான சாலைகளைக்கூட சுலபமாக கடக்க உதவும்.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

சுசுகி ஜிப்ஸிக்கு இந்தியாவைக் காட்டிலும் மேற்கத்திய நாடுகளிலேயே அதிக வரவேற்பு கிடைத்து வருகின்றது. எனவேதான் அங்கு பயணிகள் வாகனத்துறையில் இது விற்கப்பட்டு வருகின்றது. ஆனால், இந்தியாவில் இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

மாருதி ஜிப்ஸியின் ரசிகர்கள் அக்காரின் விற்பனை இந்தியாவில் இருந்து நிறுத்தப்பட்ட பின்னர் மிகுந்த ஏமாற்றமடைந்தனர் என்றே கூறலாம். அவர்களில் சிலர் இந்த கார் மீண்டும் உற்பத்திக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் மாருதி சுசுகி ஜிப்ஸியைக் களமிறக்க எந்தவொரு திட்டத்தையும் வைத்திருக்கவில்லை.

இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...

ஜிப்ஸிக்கு பதிலாக புதிய தலைமுறை ஜிம்னியை அறிமுகம் செய்ய அது திட்டமிட்டுள்ளது. ஜிம்னி நடப்பாண்டு 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இத்துடன், நாட்டில் பல முறை சோதனையோட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது. எனவே, வெகு விரைவில் இக்கார் ஆஃப்-ரோட் பயண ஆர்வலர்களை குதூகலிக்கும் வகையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
700 Units Maruti Gypsy Delivered To The Indian Army. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X