நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்! இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!

உல்லாச கப்பலுக்கே டஃப் கொடுக்கும் சொகுசு காரை நடிகர் நாகர்ஜுனா வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

டொயோட்டா நிறுவனத்தின் புதுமுக லக்சூரி காரான வெல்ஃபயர் எம்பிவி காருக்கு அண்மைக் காலங்களாக தென்னிந்திய நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. முன்னதாக, மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இக்காரை வாங்கியிருந்தார். இவரைத் தொடர்ந்து, அதே மோலிவுட் திரையுலகைச் சேர்ந்த சுரேஷ் கோபி, வெல்ஃபயரைப் பயன்பாட்டிற்காக களமிறக்கியிருந்தார்.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இந்நிலையில், தெலுங்கு திரையுலகிலும் இக்காரை ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாதான் அவர் தகவல் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதுகுறித்த புகைப்படம் மற்றும் தகவலை டீம்-பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

தென்னிந்தியாவில் மலையாள நடிகர்களை மட்டுமே கவர்ந்து வந்த டொயோட்டா வெல்ஃபயர் தற்போது டோலிவுட்டிலும் தனது கால் தடத்தைப் பதித்துள்ளது.

அதாவது, தெலுங்கு திரையுலகில் டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரை வாங்கிய முதல் பிரபலமாக நாகார்ஜுனா இருக்கிறார். எனவேதான் இதுகுறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிய வண்ணம் இருக்கின்றது.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

நாகார்ஜுனா குடும்பத்தினர் அனைவருமே மிகப்பெரிய வாகன விரும்பிகளாக இருக்கின்றனர். எனவேதான், அவர்களின் வாகன நிறுத்துமிடத்தில் (கராஜ்) பல விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளின் அணிவகுப்பைக் காண முடிகின்றது. முக்கியமாக நகார்ஜுனாவின் மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினெனி ஆகியோரிடம் பல ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இவற்றுடன் புதிதாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரும் இணைந்துள்ளது. இந்த கார் சாலையில் மிதக்கும் உல்லாச கப்பல் மற்றும் சொர்க்கம் என்றெல்லாம் போற்றப்படுகின்றது. இதற்கு, அக்காரில் இடம்பெற்றிருக்கும் லக்சூரி அம்சங்களே மிக முக்கியமான காரணம் ஆகும். இக்காரின் கேபின் பகுதி புகைப்படத்தைப் பார்த்தாலே அது உங்களுக்கு புரிந்துவிடும்.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

பல-நட்சத்திர சொகுதி விடுதிகளில் காணக் கிடைக்காத ஒரு சில அம்சங்களைக் கூட இக்காரில் காண முடிகிறது. எனவேதான் இக்காரை சொகுசு வாகன பிரியர்கள் பல விதங்களில் புகழ்ந்து தள்ளுகின்றனர். இதற்கேற்ப காரின் உட்பகுதி இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பிரம்மிப்பில் ஆழ்த்துமளவிற்கு அதன் இருக்கை அமைப்பு உள்ளது. அது மெத்தையைப் போன்று நன்கு சாய்ந்து படுக்கை போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதில், ஃபூட் ரெஸ்ட் மற்றும் ஹேண்ட் ரெஸ்ட் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இத்துடன், தலையை சொகுசாக சாய்த்துக் கொள்ளும் வகையில் ஹெட்ரெஸ்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காருக்குள் அமர்ந்தபடியே வான் வெளியை ரசிக்கின்ற வகையில் சன் ரூஃப், தொலைக் காட்சிப் பெட்டி மற்றும் பார்களில் காணப்படுவதைப் போன்ற வண்ண மயமான ஆம்பிசியண்ட் மின் விளக்குகள், மூன்று விதமான கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இந்த அம்சங்கள் அனைத்தும் நெடுந்தூர பயணத்தைகூட அதிக பொழுதுபோக்கு நிறைந்ததாகவும், அழகானதாகவும் மாற்ற உதவும். எனவே, இக்காரில் பயணிக்கும் போது கப்பலில் மிதப்பதைப் போன்ற ஏற்படுத்தலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு அம்சமும் மிக மிக அதிக சொகுசு வசதிகளை வாரி வழங்கும் வகையில் இருக்கின்றது. எனவேதான் பிரபலங்களின் பார்வை தற்போது இக்காரின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இது தற்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரைக் காட்டிலும் பிரம்மாண்ட உருவத்தைக் கொண்டிருப்பதால், இடவசதி குறைச்சல் என்ற பேச்சிற்கே வெல்ஃபயர் இடமளிக்கவில்லை. இதன் உயரம், நீளம், அகலம் என அனைத்தும், வெல்ஃபயருக்கு இந்தியாவின் மிகப் பெரிய உருவம் கொண்ட எம்பிவி கார் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

எனவேதான், இக்காரை ஒரு சிலர் சொகுசு அம்சங்கள் கொண்ட மினி வேன் என குறிப்பிடுகின்றனர். இம்மாதிரியான ஓர் காரைதான் நாகர்ஜுனா தற்போது வாங்கியிருக்கின்றார். இது மட்டுமின்றி அவர்களிடத்தில் ஃபெர்ராரி 488 ஜிடிபி போன்ற அதிக திறன் கொண்ட ஆடம்பர கார்களும் இருக்கின்றன. ஃபெர்ராரி 488 ஜிடிபி காரை அவர் கடந்த வருடம்தான் பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தனர்.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இதைத்தொடர்ந்தே, நடப்பாண்டிற்கான புது வரவாக டொயோட்டா வெல்ஃபயரை களமிறக்கியிருக்கின்றனர். முழுவதுமாக கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அக்கார் ஒற்றை பார்வையிலேயே மற்றவர்களைக் கவரும் வகையில் இருக்கின்றது.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இக்காரின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பெட்ரோல் மற்றும் மின் மோட்டார் மூலம் இயங்கும் அமைப்பைக் கொண்டிருக்கின்றது.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இதன் பெட்ரோல் எஞ்ஜின் 2.5 லிட்டர் ரகமாகும். இது அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 198 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று, மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், 67 பிஎச்பி பவரையும் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவையிரண்டும் இணைந்து காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறனை வழங்குகின்றது. மேலும், லிட்டர் ஒன்றுக்கு 16.35 கிமீ வரை மைலேஜை தருகின்றது.

நடிகர் நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்... இது கார் இல்லைங்க சாலையில் மிதக்கும் சொர்க்கம்!!!

இந்தியாவில் இக்கார் ரூ. 79.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். இந்த விலையுயர்ந்த காரில்தான் நாகார்ஜுனா குடும்பத்தினர் வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Nagarjuna Toyota Vellfire MPV. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X