மெய்சிலிர்க்கும் திறனுடய போர் விமானங்கள்... அமெரிக்காவிடம் மோத எதிரி நாடுகள் தயங்க காரணம் இதுதான்..!

உலக நாடுகள் சிலவற்றிடம் இருக்கும் அதி சக்தி வாய்ந்த விமானங்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியுள்ளோம்.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

நவீன கால போர்களில் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆயுதமாக போர் விமானங்கள் காட்சியளிக்கின்றன. இவையே போரின்போது அந்நாட்டின் முதுகெலும்பாகவும் மாறுகின்றன.

ஓர் நாட்டின் படை வலிமை, அந்நாட்டிடம் இருக்கும் போர் விமானங்களைக் கொண்டே கணிக்கப்படுகின்றது. ஆட்படை, கப்பற்படை என பல படைகள் இருந்தாலும் விமானப் படைகளுக்கென எப்போதுமே தனிக் கெத்து நிலவி வருகின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

அதிலும், அதிக சக்தி வாய்ந்த போர் விமானங்களை வைத்திருக்கும் நாடுகளைக் கண்டால் எதிரி நாடுகள்கூட அவர்கள் பக்கம் திரும்புவதற்கே அஞ்சும் நிலை உருவாகியிருக்கின்றது. ஏனென்றால், ஒரு திறன் வாய்ந்த போர் விமானம் மற்றும் கைதேர்ந்த விமானி இவர்கள் போதும் ஓர் நாட்டின் ஒட்டுமொத்த ஆயுத கிடங்கையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழிப்பதற்கு.

MOST READ: நம்ம சன்னி லியோனுக்கு அப்புறம் இவங்தான் டிரெண்ட்... இவங்க இப்படி செய்வாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

இதன் காரணமாகவே, அதி-திறன் வாய்ந்த போர் விமானங்களைக் கைவசம் வைத்திருக்கும் நாடுகள்மீது எதிரி நாடுகள் எந்தவொரு சீண்டலிலும் ஈடுபடாமல் இருக்கின்றன.

எனவே தான் உலக நாடுகள் பல தங்களை வல்லரசு நாடுகள் என காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக போர் வாங்குவதில் அதிக முனைப்பைக் காட்டி வருகின்றன. இதற்காக பல லட்சம் கோடிகளை அவை செலவழிக்கின்றன.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டைக் காட்டிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே அதிக பொருடல் செலவு செய்யப்படுகின்றது. தங்களை போர்க்களத்தில் ஆதிக்கம் நிறைந்தவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ளும் விதமாக ஒவ்வொரு நாடும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

MOST READ: ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

ஓர் திறமையான போர் விமானம், ஆயுதத்தை தொடுப்பது, எதிரி விமானத்தை இடைமறைப்பது, களத்தில் விடா முயற்சியுடன் போரிடுவது மற்றும் இரவு நேர உளவாளியாக செயல்படுவது என இதுபோன்ற பல ரோல்களைக் கையாளும் விமானமே மிகச் சிறந்த விமானமாக கருதப்படுகின்றது. மேலும், இதனை எந்த விமானம் கணக்கச்சிதமாக மேற்கொள்கின்றதோ அதுவே நடப்பு 21ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த போர் விமானமாக கருதப்படுகின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

சரி வாருங்கள் இத்தகைய திறன் கொண்ட போர் விமானங்களை எந்தெந்த நாடுகள் பயன்படுத்துகின்றன. அவற்றில் எம்மாதிரியான தனி சிறப்பு போர் குணங்கள் இருக்கின்றது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாம் பார்க்கவிருக்கும் போர் விமானம் அனைத்தும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் என்பது இங்கு நாம் குறிப்பிடத்தகுந்தது.

MOST READ: இரு கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக உருமாறும் எம்ஜி சைபர்ஸ்டர் கான்செப்ட்...

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ராப்டார் (Lockheed Martin F-22 Raptor)

அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்படும் இந்த விமானம் உலகின் மிகவும் பழைமையான மற்றும் அதிக சக்தி வாய்ந்த போர் விமானம் ஆகும். இந்த போர் விமானத்தை லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் அமெரிக்க விமானப்படை ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. கடந்த 2005ம் ஆண்டு முதலே அமெரிக்க விமானப் படையில் இணைக்கப்பட்டது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

மேலும், எஃப்-22 ராப்டார் போர் விமானத்தை மற்ற நாடுகளுக்கு அமெரிக்க அரசு விற்பனைச் செய்வதில்லை. ஒருவர் மட்டுமே பயணிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் ட்வின் எஞ்ஜின் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஆகும்.

MOST READ: பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

இது போர்க்களத்தில் ஊடுருவிச் செல்லுதல், அதிக வேகமாக பறந்துச் செல்லுதல், இலக்கை துள்ளியமாக தாக்குதல் என அனைத்தையும் கணக்கச்சிதமாக செய்யும் வல்லமைமிக்கது. ராப்டாரின் முதல் தலைமுறை மாடலை 1997ஆம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கியது அமெரிக்க. அப்போதில் இருந்து இந்த விமானம் பல பரிணாம மாற்றத்தைக் கண்டு பயன்பாட்டில் இருக்கின்றது. குறிப்பாக கண்காணித்தல், உளவுத்துறை, தாக்குதல், மின்னணு போர் மற்றும் சமிக்ஞை நுண்ணறிவு உள்ளிட்ட பலதரப்பட்ட பணிகளில் இது ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 லைட்னிங் II (Lockheed Martin F-35 Lightning II)

லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பாக எஃப்-35 லைட்னிங் II காட்சியளிக்கின்றது. இது மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் என்ற காரணத்தினால் இதற்கு லைட்னிங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே, உலகின் அதி நவீன போர் விமானங்களில் இது ஒன்றாக கருதப்படுகின்றது. மேலும், உலகின் சர்வதேச ஐந்தாம் தலைமுறை பல ரோல் விமானமாகவும் இது இருக்கின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

எஃப்-22 விமானத்தைப் போன்று அல்லாமல் உலகின் மற்ற நாடுகளுக்கும் அமெரிக்கா எஃப்-35 விமானத்தை ஏற்றுமதி செய்து வருகின்றது. எனவே, துருக்கி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விமானப்படையில் இந்த விமானங்களை பார்க்க முடியும். இந்த விமானம் செங்குத்த ஏற மற்றும் இறங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. அதாவது ஹெலிகாப்டரைப் போன்று நின்ற இடத்தில் இருந்தே வானில் பறக்கவும், வானில் இருந்து தரையிறங்கவும் முடியும். ஆகையால், இதற்கு ஓடுதளம் தேவையில்லை.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

இந்த விமானமும் எஃப்-22 ராப்டரைப் போன்று சிங்கிள் இருக்கை மட்டும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் விமானியால் மட்டுமே பறக்க முடியும். இதுதவிர பல தரப்பட்ட ஆயுதங்களைத் தாங்கும் திறன் இந்த விமானத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, மூன்று விதமான வேரியண்டுகளில் இது விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. அதாவது, செங்குத்தாக ஏறுதல் மற்றும் இறங்கும் திறன், குறுகிய இடைவெளியில் பறத்தல் மற்றும் வழக்கமான விமானங்களைப் போன்று ஓடு தளத்தின் மூலம் பறத்தல் ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

சுகோய் எஸ்யூ-57 (Sukhoi Su-57)

என்னடா இது அமெரிக்க நாட்டு போர் விமானங்களை மட்டுமே சொல்லிட்டு இருக்காங்கள வேறு எந்த நாடும் போர் விமானம் தயாரிக்கவில்லைய., பலருக்கு எண்ணம் தோன்றியிருக்கும். நாம் தற்போது பார்க்கவிருக்கும் விமானம் ரஷ்ய நாட்டு தயாரிப்பு ஆகும். இந்த போர் விமானம் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு எந்த விதத்திலும் சலைத்தது அல்ல என்பதை நாம் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

எனவே, எஸ்யூ-57 போர் விமானத்திலும் ஓர் ஒற்றை இருக்கை, இரட்டை எஞ்ஜின், மல்டி-ரோல் திறன் உள்ளிட்டவற்றை நம்மால் காண முடியும். இந்த விமானத்தை ரஷ்ய நாட்டு நிறுவனமான சுகோய் தயாரித்திருக்கின்றது. இந்த நிறுவனம்தான் இந்தியாவிற்கான எஸ்யூ-30 எம்கேஐ விமானத்தை விற்பனைச் செய்திருக்கின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

ஏற்கனவே, பிஏகே மற்றும் டி-50 உள்ளிட்ட விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதால் எஸ்யூ-57 இன்னும் ரஷ்ய விமானப்படையில் சேர்க்கப்படவில்லை. ஆனால், விரைவில் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஜெட் முழுமையான தயார் நிலையில் காத்திருக்கின்றது. எஸ்யூ-27 நான்காம் தலைமுறை போர் விமானத்தை மாற்றும் நோக்கில் இந்த விமானம் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

இந்த விமானம் எதிரியின் அனைத்து வகையான தரை, காற்று மற்றும் மேற்பரப்பு இலக்குகளை துள்ளியமாக தாக்கி அழிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஏவப்பட்ட ஏவுகணைகளை காற்றின் மேற்பரப்பிலேயே வைத்து அழிக்கும் தன்மையை இந்த போர் விமானம் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, 250கிலோ, 500கிலோ மற்றும் 1,500 கிலோ வரையிலான எடையுள்ள ஆயுதங்களைத் தாங்கிச் சென்று, எதிரிகளை அழிக்கும் திறனை இவைக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

Image Courtesy: Alert5/Wiki Commons

செங்குடு ஜே-20 (Chengdu J-20)

சீனா விமானப் படையில் மிக சமீபத்தில் இணைக்கப்பட்ட போர் விமானமாக செங்குடு ஜே-20 இருக்கின்றது. இதுவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஆகும். எனவே, மற்ற போர் விமானங்களில் நாம் கண்டதைப் போலவே இதிலும் சிங்கில்சீட், ட்வின் எஞ்ஜின், மல்டி ரோல் பயன் உள்ளிட்டவை அடக்கியிருக்கின்றது. இந்த போர் விமானத்தை சீனாவின் செங்குடு ஏர்கிராஃப்ட் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

Image Courtesy: Alert5/Wiki Commons

இதனை பிரத்யேகமாக சீன விமானப்படையின் பயன்பாட்டிற்கு அந்நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது கடந்த 2017ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு விமானப் படையில் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த விமானமும் எதிரி நாட்டு விமானம் மற்றும் தரைப்படைகளை தாக்கி அழிக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. மேலும், லேசர் வெடிகுண்டுகள் மற்றும் ஆண்டி ரேடியேஷன் மிஷைல்கள் உள்ளிட்டவற்றை தாங்கிச் செல்லும் திறனை அது பெற்றிருக்கின்றது.

அமெரிக்காவை கண்டு உலக நாடுகள் சில ஏன் பதறுகின்றன... தரையோ, வானோ எங்கிருந்தாலும் தேடி அழிக்கும் போர் விமானங்கள்!

Image Courtesy: emperornie/Wiki Commons

நாம் மேலே பார்த்த இந்த விமானங்கள் மட்டும்தான் ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் ஆகும். இதைத்தவிர, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் நான்காம் தலைமுறை போர் விமானங்களாகவே இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Advanced Fighter Jets In The World. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X