நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

கார்களில் வழங்கப்படும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புகளில் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிக சிறப்பான மற்றும் தரமான ஒன்றாக விளங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவரும் இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸினால் கார்களில் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தியில் விரிவாக காண்போம்.

நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக விளங்கும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸை இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது 7 தயாரிப்பு மாடல்களில் வழங்கி வருகிறது. ஏனெனில் இந்த ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலமாக சிறந்த எரிபொருள் திறனையும், எளிய ட்ரைவிங்கையும் பெற முடியும். மேலும் மலிவானதாகவும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் உள்ளது.

நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

இந்திய நகரங்களில் போக்குவரத்து நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருகிறது. இதனால் காரும் காரில் பயணிக்கும் பயணிகளின் உடல் நிலையும் சீரழிகிறது. இத்தகைய போக்குவரத்து சூழலை மேம்படுத்துவது நமது கையில் இல்லை. ஆனால் நகர்புற பயன்பாட்டிற்கென சரியான வாகனத்தை நம்மால் தேர்வு செய்ய இயலும்.

நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

இதனை புரிந்துகொண்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பெரும்பான்மையான கார்களில் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை வழங்கி வருகின்றன. மாருதி சுசுகி நிறுவனம் இந்த ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை முதன்முதலாக 2014ல் செலிரியோ ஹேட்ச்பேக்கின் மூலம் அறிமுகப்படுத்தியது.

நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

மேனுவல் கியர்பாக்ஸ், க்ளட்ச் மூலமாக செயல்படும்போது கூடுதலான அழுத்தத்தை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. மேலும் இதனால் காரின் எரிபொருள் திறன் பாதிப்பது மட்டுமில்லாமல் க்ளட்ச் பெடல் ப்ளேட்களின் ஆயுட்காலமும் குறைகிறது. அதுவே ஏஜிஎஸ் உடன் உள்ள ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் முதன்முறையாக காரை ஓட்டுபவராக இருப்பினும், மிக விரைவாகவும் எளிதாகவும் ஓட்டுனரின் ஸ்டைலுக்கு ஏற்ப தகவமைத்து கொள்கிறது.

நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

க்ளட்ச் பெடல்களும் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் கார்களில் க்ளட்ச் இல்லாத பெடல் வழங்கப்படுகிறது. இவற்றுடன் ஏஜிஎஸ் ட்ரான்ஸ்மிஷனின் க்ரீப் செயல்பாட்டின் மூலமாக காரை எந்தவொரு முடுக்கமுமின்றி 5 kmph என்ற வேகத்தில் இயக்க முடியும். இந்த வசதி நிச்சயம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகர்புற போக்குவரத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

MOST READ:கொரோனா பரவலை தடுக்க ரூ.1 கோடி நிதியை ஒதுக்கிய மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம்..!

நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

ஏனெனில் ஓட்டுனர் அந்த சூழ்நிலையில் ப்ரேக்குகளை மட்டும் கண்ட்ரோல் செய்தாலே போதுமானது. இதனுடன் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனால் பெறப்படும் கிக் ஸ்டார்ட் செயல்பாடு சாய்வான சாலைகளில் கூடுதல் கண்ட்ரோலில் காரை இயக்க உதவும். மேலும் ஓட்டுனர் தேவையென்றால் குறைவான கியரில் அதிக ஆற்றலை பெற முடியும்.

MOST READ:"அவசரம் இது எம்எல்ஏ கார்" - இளைஞர்கள் அட்ராசிட்டி.. அசராமல் ஆப்பு வைத்த டெல்லி போலீஸ்..

நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

செலிரியோ மாடலில் அறிமுகப்படுத்திய பிறகு மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ள ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசைர் மற்றும் இக்னிஸ் மாடல்களிலும் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டு வந்துள்ளது. இதனால் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் காரை ரூ.4.5 லட்சத்தில் இருந்து வாங்கலாம்.

MOST READ:கொரோனாவுக்கு செக்! எந்த ஐடியாவும் வேலைக்கு ஆகாததால் யாருமே எதிர்பார்க்காத அதிரடி... என்னனு தெரியுமா?

நகர்புற பயன்பாட்டிற்கு காரில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் ஏஜிஎஸ் ஏன் சிறந்தது...?

மாருதி நிறுவனத்தின் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் மாடல்களில் உள்ள கவனித்தக்க விஷயமென்றால், இவற்றின் எரிபொருள் திறன் அளவுகள் கிட்டதட்ட மேனுவல் கார்களுடன் ஒத்து காணப்படுகின்றன. ஏஜிஎஸ் ட்ரான்ஸ்மிஷனின் இத்தகைய சிறப்பம்சங்களே வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இத்தகைய ஆட்டோமேட்டிக் கார்களை பராமரிப்பதற்கும் செலவு பெரிய அளவில் ஆகுவது இல்லை என்பதால் இந்த கியர்பாக்ஸ் சந்தையில் நீண்ட நாட்களுக்கு விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why AGS Is The Perfect Automatic Transmission For City Driving
Story first published: Friday, April 3, 2020, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X