எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

அனைவரும் ஆவலுடன் காத்திருந்த புதிய ஹூண்டாய் கிரெட்டா காரின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய கிரெட்டா காரை ஹூண்டாய் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்கள், புதிய கிரெட்டா காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்கியுள்ளனர்.

எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

இந்த சூழலில் கர்நாடகாவில், வெள்ளை நிற ஹூண்டாய் கிரெட்டா எஸ்எக்ஸ் (ஓ) காரை, வாடிக்கையாளர் ஒருவர் டெலிவரி எடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிஎம்சி எச்டி வீடியோஸ் என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. காரை டெலிவரி எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் ஷோரூமை வந்தடைவதை இந்த வீடியோ காட்டுகிறது.

எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

அத்துடன் அவர்கள் பார்ம்களை நிரப்பி, அனைத்து பார்மாலிட்டிகளையும் அவர்கள் நிறைவு செய்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. சிறிது நேரத்திற்கு பின்பு ஷோரூமிற்கு வெளியில் கவர் போர்த்தப்பட்டு, கார் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. புதிய உரிமையாளர் அந்த கவரை நீக்கி காரை காரை காட்டுகிறார்.

எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

இதன்பின்பு டீலர்ஷிப் ஊழியர்கள் புதிய உரிமையாளருடன் போட்டோ எடுத்து கொள்கின்றனர். இந்தியாவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹூண்டாய் இருப்பதாகவும், விரிவான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை ஹூண்டாய் கொண்டிருப்பதாகவும், அந்த உரிமையாளர் கூறுவதை நம்மால் கேட்க முடிகிறது.

எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

இதன் காரணமாகதான் வேறு எந்த காரையும் விட அவர் ஹூண்டாய் கிரெட்டாவை தேர்வு செய்துள்ளார். கியா செல்டோஸ் காரை வாங்கலாமா? எனவும் அவர் யோசித்துள்ளார். ஆனால் சேல்ஸ் நெட்வொர்க் காரணமாக, கியா செல்டோஸை வாங்கும் முடிவை தவிர்த்து விட்டு, ஹூண்டாய் கிரெட்டாவை வாங்கியுள்ளார்.

எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

இந்த வாடிக்கையாளர் வாங்கியிருப்பது டாப் எண்ட் எஸ்எக்ஸ் (ஓ) வேரியண்ட் ஆகும். இதுதான் இந்த காரின் விலை உயர்ந்த வெர்ஷன். பனரோமிக் சன் ரூஃப் உள்பட அனைத்து வசதிகளுடனும் இந்த மாடல் வருகிறது. அத்துடன் இன்பில்ட் ஏர் ப்யூரிஃபையர் சிஸ்டம், டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லேம்ப் உள்பட இன்னும் பல்வேறு வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

மேலும் ஹூண்டாய் கிரெட்டா காரின் டாப் வேரியண்ட்டில், போஸ் 8 ஸ்பீக்கர் சிஸ்டம், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய இருக்கைகள், ட்யூயல்-டோன் இன்டீரியர், லெதர் பேக்கேஜ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்பட இன்னும் ஏராளமான வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படி வசதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எல்லாரும் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியாச்சு... இவ்ளோ வசதி இருந்தா யாருக்குதான் பிடிக்காது

1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினுடன் இந்த வேரியண்ட் வருகிறது. இந்த இன்ஜின் 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7-ஸ்பீடு டிசிடி ஆப்ஷன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இதுதவிர இன்னும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் புதிய கிரெட்டா காரில் வழங்கப்படுகிறது.

அவை 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் புது ஹூண்டாய் கிரெட்டா காருக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் காராக புதிய ஹூண்டாய் கிரெட்டா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: BMC HD Videos/YouTube

Most Read Articles
English summary
All-new Hyundai Creta SUV Delivery Begins In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X