பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் ப்ராண்ட்டான அல்பினா, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ்யூவி மாடலான எக்ஸ்7-ன் அப்டேட் வெர்சனாக உருவாக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்பி7 மாடலை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடலின் எம்50ஐ வேரியண்ட்டில் வழங்கப்பட்டு வரும் டர்போசார்ஜ்டு 4.4 லிட்டர் பெட்ரோல் வி8 என்ஜின் தான் இதன் அப்டேட் வெர்சனான அல்பினா எக்ஸ்பி7 காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் இந்த அப்டேட் மாடலில் 621 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

என்ஜினின் இந்த ஆற்றல் அளவு எக்ஸ்7 மாடலை காட்டிலும் 91 பிஎச்பி அதிகமாகும். இந்த கூடுதல் ஆற்றலால் எக்ஸ்பி7 மாடல் அல்பினா ப்ராண்ட்டின் ஆற்றல் மிக்க காராக விளங்குவது மட்டுமில்லாமல் 2,655 கிலோ எடையுடன் 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் அடைந்துவிடும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

எலக்ட்ரிக் உதவியுடன் இந்த கார் அதிகப்பட்சமாக 290 kph என்ற வேகம் வரையில் இயங்கும். எக்ஸ்7 எம்50ஐ மாடலுடன் ஒப்பிடும்போது எக்ஸ்பி7 மாடலின் இந்த செயல்திறன்கள் அனைத்தும் சற்று அதிகமாகும். அல்பினா ப்ராண்ட் இந்த காரில் பின்புற-சக்கர ஸ்டேரிங் சிஸ்டத்தை வழங்கியுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

இதனுடன் இரட்டை அச்சு ஏர் சஸ்பென்ஷனை உள்ளடக்கிய பிரத்யேகமான சஸ்பென்ஷன் செட்அப், ஆக்டிவ் ரோலை உறுதிப்படுத்தும் செயல்பாடு மற்றும் மேம்பட்ட ஹேண்ட்லிங்கிற்காக ரீட்யூன்டு டேம்பர் அமைப்புகளையும் புதிய எக்ஸ்பி7 மாடலில் இந்த ப்ராண்ட் வழங்கியுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

இதில் ஏர் சஸ்பென்ஷன் வெவ்வேறு உயரங்களில் பயணத்தையும், வீல் கேம்பர் வித்தியாசமான ட்ரைவிங் ஸ்டைலையும் கொடுக்கும் தன்மை உடையன. ஸ்போர்ட் மோடில் 160 kmph-க்கும் அதிகமான வேகத்தில் செல்லும் இந்த எக்ஸ்பி7 மாடலின் ரைட் உயரம் இந்த மோடில் 20மிமீ தாழ்வாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

அதுவே ஸ்போர்ட்+ மோட் நிலையான அமைப்பில் இருந்து சுமார் 40மிமீ வரை காரை தாழ்வாக கொண்டு செல்லும். பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடலில் இருந்து எக்ஸ்பி7 மாடல் டிசைனில் ஏர் இண்டேக்கை பெரிய பிளவுகளுடன் பெற்றதன் மூலம் வேறுபடுகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

அதேபோல் பின்புறத்தில் 4 எக்ஸாஸ்ட் அவுட்லெட்களுக்கான ஹௌஸ் உடன் புதிய வடிவில் பம்பர் மற்றும் நுட்பமான புதிய டிஃப்பியூசரையும் இந்த கார் கொண்டுள்ளது. அல்பினா ப்ராண்ட்டின் பேட்ஜ், காரின் முன் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

இவற்றுடன் நீல ப்ரெம்போ ப்ரேக் காலிபர்கள் மற்றும் சக்கரங்களுக்கு மத்தியில் பிரத்யேகமான கேப்ஸ் உடன் அல்பினா நிறுவனம் இந்த காரில் கொண்டுவந்துள்ள தொகுப்பு நிறைவடைகிறது. எக்ஸ்பி7 மாடலில் 21-இன்ச் 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

இதுமட்டுமின்றி இந்நிறுவனத்தின் 20-ஸ்போக் பேட்டர்னின் டிசைனில் வடிவமைக்கப்பட்ட 23-இன்ச் போலி அலாய் சக்கரங்களும் கூடுதல் தேர்வாக வழங்கப்பட்டுள்ளன. க்ரே நிறத்தில் உள்ள இந்த போலி அலாய் சக்கரங்கள் காரின் மொத்த எடையை 12.7 கிலோ வரையில் குறைக்கின்றன. இதன் சக்கரங்களில் பைரல்லி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

உட்புறம் எக்ஸ்7 மாடலை போன்று 6 மற்றும் 7 என்ற இரு இருக்கை அமைப்புகளை கொண்டுள்ளது. இதன் உட்புற கேபின் பளபளப்பான ஐட்ரைவ் ரோட்டரி கண்ட்ரோலர், ஸ்போர்ட்ஸ்-ஸ்டைலில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் அல்பினாவின் லோகோக்கள் உடன் உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

பனோராமிக் சன்ரூஃப் மூன்று பாகங்களாகவும், கதவுகள் மென்மையாக மூடக்கூடிய வகையிலும் வழங்கப்பட்டுள்ளன. அல்காண்ட்ரா ஹெட்லைனர் நிலையாக உள்ளது. கூடுதல் அப்கிரேட் தேர்வாக 15,000 விளக்குகளை கொண்ட எல்இடி உட்கூரை திரை வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கே சவால்விடும் வகையில் உருவாகியுள்ள அல்பினா எக்ஸ்பி7...

அல்பினா மாடல் இந்திய சந்தையுடன் எந்த விதத்திலும் தொடர்பை கொண்டில்லாததால், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடலின் இந்த அப்டேட் வெர்சன் கார் இந்தியாவிற்கு வருகை தருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. அதேநேரம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடலின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.92.50 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
BMW X7-based Alpina XB7 revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X