சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு சரியான போட்டி விலையுடன் டாடா அல்ட்ராஸ் டர்போ கார் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய அல்ட்ராஸ் மாடலை ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக இந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு விற்பனையில் போட்டியாக மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்கள் உள்ளன.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

இதில் ஹூண்டாய் ஐ20 காரின் அடுத்த தலைமுறை சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இருப்பினும் கடந்த மாதங்களில் டாடா அல்ட்ராஸ் சந்தையில் தனது பெயரை வலுவாக பதித்து வருகிறது.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

ஆல்ஃபா கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அல்ட்ராஸ் 5 இருக்கைகள் கொண்ட காராகும். உலகளாவிய என்சிஏபி சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களையும் பெற்று மிகவும் பாதுகாப்பான காராக உலாவரும் அல்ட்ராஸின் எக்ஸ்ஷோரூம் விலைகள் மிகவும் மலிவாக ரூ.5.44 லட்சத்தில் இருந்து ரூ.8.95 லட்சம் வரையில் உள்ளன.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்எம்+, எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் (O) என்ற வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த டாடா கார், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ற என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் வெளிவருவதற்கு முன்பு வரை டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் ஒரே ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக அல்ட்ராஸ் விளங்கி வந்தது. டாடா டியாகோவிலும் வழங்கப்படும் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அல்ட்ராஸில் 4 பிஎஸ் மற்றும் 87 என்எம் டார்க் திறன் கூடுதலாக வெளிப்படுத்துகிறது.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

இந்த நிலையில் அல்ட்ராஸின் பலத்தை மேலும் கூட்டும் விதமாக இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரோன் என்ஜின் உடன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் வெர்சனை கொண்டுவர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதே யூனிட் தான் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படுகிறது.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

ஆனால் அல்ட்ராஸில் சற்று குறைவாக 110 எச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும். இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படலாம். அல்ட்ராஸ் டர்போவின் எடை வெறும் 980 கிலோவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

டாடா அல்ட்ராஸ் டர்போ காருக்கு ஃபோக்ஸ்வேகன் போலோ 1.0 டிஎஸ்ஐ மற்றும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஐ20 கார்கள் போட்டியாக விளங்கும். ஹூண்டாய் ஐ20-ல் வழங்கப்படும் டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ!!

இதனுடன் 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என்ற கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஐ20 டர்போ காரின் விலைகள் ரூ.8.79 லட்சத்தில் இருந்து ரூ.11.32 லட்சம் வரையில் உள்ளன. விற்பனை போட்டிகாக அல்ட்ராஸ் டர்போ காரின் விலைகளை இதனை விட சற்று குறைவாக டாடா நிர்ணயிக்கும் என தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக அல்ட்ராஸ் டர்போவின் அறிமுகத்திற்கு பிறகு இவை இரண்டிற்கும் இடையே விற்பனையில் அனல் பறக்கும் மோதல் இருக்கும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
Tata Altroz Turbo could be priced competitively against Hyundai i20 Turbo.
Story first published: Monday, November 30, 2020, 1:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X