இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

அமேசான் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களை களமிறக்கியுள்ளது. எதற்காக இந்த நடவடிக்கையில் அமேசான் களமிறங்கியுள்ளது என்பதற்கான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

நாளுக்கு நாள் காற்றின் மாசு அதிகரித்து வருகின்றது. இது இந்தியா போன்ற பெரும் நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகை சுற்றுப்புறச்சூழலுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

இதற்கு தீர்வு காணும் விதமாக நாடு முழுவதும் மின்வாகனங்களைக் களமிறக்கி எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது இந்தியா மட்டுமின்றி பெருவாரியான உலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக உள்ளது. ஆகையால், உள் மற்றும் வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

இதனை வெளிப்படுத்தும் வகையில், சமீபத்திய மற்றும் முந்தைய வாகன கண்காட்சிகளில் அதிகளவு மின்சார வாகனங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து, உலகின் அனைத்து சாலைகளையும் மின்வாகனங்களே ஆளுகைச் செய்கின்ற வகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

இதனடிப்படையில், மின்வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் சார்ஜிங் நிலையங்களை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளில் அரசு மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், தனியார் போக்குவரத்து மற்றும் பொதுசேவையில் இயங்கும் வாகனங்களையும் மின்சார தரத்திற்கு உயர்த்தும்படி அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

இந்நிலையில், ஆன்லைன் வர்த்தக உலகில் கொடிகட்டி பறந்து வரும் அமேசான், இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர ஆட்டோக்களை களமிறக்கியுள்ளது. இந்த ஆட்டோக்களை அந்நிறுவனம் அதன் டெலிவரி சேவைக்காகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

'பூஜ்ஜியம் மாசு' என்ற திட்டத்தின்கீழ் இந்தியாவை மாசற்ற நாடாக மாற்றும் நோக்கில் அமேசான் இந்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையை இந்தியா மட்டுமின்றி மற்ற உலகநாடுகளிலும் அமேசான் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

அமேசானின் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்சாக்கள்குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தவீடியோவில், அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெசோஸ் எலெக்ட்ரிக் ஆட்டோவை இயக்குவதைப் போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவருடன், சில டெலிவரி பாய்களும் அந்த ஆட்டோவை இயக்குகின்றனர்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

முன்னதாக, மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாக அமேசான் அறிவித்திருந்தது. இதனடிப்படையிலேயே இந்த மின்சார டெலிவரி வாகனங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அமேசான் நிறுவனம் தற்போது இந்தியாவில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

அமேசான் மற்றும் வால்மார்ட் கட்டுபடுத்துதலின் கீழ் இயங்கி வரும் ஃபிளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களின் வருகை இந்தியாவின் சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பெரும் பின்னடைவை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

இவ்விரு நிறுவனங்களும் அதிக சலுகையை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுப்பதால் பெரும் நஷ்டத்தை அடைவதாக சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அந்நிறுவனங்களுக்கு எதிராக போராட்டத்தையும் தொடர்ந்து வருகின்றனர்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

எனவே, சாலையோர கடைகளும் லாபம் அடையும் விதமாக அமேசான், அவற்றை அதன் டெலிவரி பாயிண்டாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றது. இதனால், வாடிக்கையாளர்கள் எளிதில் தங்களின் பொருட்களைப் பெறுவதுடன், சிறிய கடைக்காரர்களும் கூடுதலாக வருமானம் ஈட்டமுடியும்.

இதற்காக ஏற்கனவே மும்பையில் பல்வேறு சாலையோர கடைகள் பயன்படுத்தப்பப்பட்டிருப்பதாக பெசோஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் அமேசான்... எதற்காக தெரியுமா..?

பில்லியன் டாலர் முதலீட்டில் செய்யப்பட்டு வரும் அமேசானின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு பெரியளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஒரு வேலை இந்த முதலீட்டில் அமேசான் இழப்பீடு சந்திக்க நேரிடுமானால், அதனை இந்தியா ஈடு செய்ய வேண்டும் என்ற காரணத்தால் மத்திய அமைச்சகம் இதற்கு வரவேற்பு அளிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த தகவலை ஆங்கில செய்தி தளம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Amazon Launches Electric Auto For Delivery Uses. Read In Tamil.
Story first published: Monday, January 20, 2020, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X