அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் அம்பானியிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருப்பது தெரியும். ஆனால் எத்தனை ரோல்ஸ் கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன. அவற்றின் மதிப்பு என்ன என்பது பற்றிய தகவல் ரகசியமாகவே இருந்து வருகின்றது. வாருங்கள் இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மட்டுமில்லைங்க உலக பணக்காரர்களின் பட்டியலிலும் நம் நாட்டைச் சேர்ந்த அம்பானி முக்கிய இடத்தில் இருக்கின்றார். ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர்போன இவரிடம் ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன.

குறிப்பாக, இவரது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக சில கார்கள் பிரத்யேகமாக வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவையாகும்.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

அவ்வாறு, அம்பானி குடும்பத்தாரிடம் பென்ட்லீ பென்டேகா, லம்போர்கினி உருஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி-வேகன், டெஸ்லா மாடல் எஸ் (பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட மின்சார கார்) உள்ளிட்ட ஏராளாமான சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதேபோன்று, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சில அதிக விலையுடைய கார்களும் அவர்களிடத்தில் காணப்படுகின்றன.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

அந்தவகையில், அம்பானி குடும்பத்தார் என்ன மாதிரியான ரோல்ஸ் ராய்ஸ் கார்களைப் பயன்படுத்துகின்றனர். அவை இந்தியாவில் என்ன விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றன. மேலும், அந்த கார்கள் எம்மாதிரியான சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கின்றன என்பதுகுறித்த தகவலைத் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் செரீஸ் VIII (EWB)

அம்பானியிடம் இருக்கும் மிக மிக விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களிலேயே பேந்தம் செரீஸ் VIII மாடல்தான் முதல் இடத்தில் இருக்கின்றது. ஏன், அவரது கராஜில் காணப்படும் கார்களிலும் இதுவே மிக அதிக விலையுடைய காராக இருக்கின்றது. இந்த காரை கடந்த ஆண்டின் இறுதியில்தான் அம்பானி குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக வாங்கினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் அலுமினியம் ஸ்பெக் ஃபிரேம் பிளாட்பாரத்தில் தயாரான காராகும்.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

இந்த பிளாட்பாரம் அழகின் மறு உருவம் என பெயரைப் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி முந்தைய தலைமுறையைக் காட்டிலும் இந்த பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்ட பேந்தம் செரீஸ் VIII, 30 சதவீதம் எடை குறைந்த மாடலாக காணப்படுகின்றது. இது அதிக எஞ்ஜின் திறனுக்கு வழி வகுக்கும். தொடர்ந்து காரின் உருவத்தையும் பெரியதாக்கியுள்ளது இந்த பிளாட்பாரம். எனவே, இடவசதி ஏகபோகம். இந்த நடவடிக்கையால், ரோல்ஸ் ராய்ஸ்-இன் மிகப்பெரிய உருவம் உருவம் கொண்ட காராக இது மாறியது.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

இந்த கார் இந்தியாவில் ரூ. 13.5 கோடி என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, எந்தவொரு மாடிஃபிகேஷன் செய்யாத நிலையில் கிடைக்கும் விலையாகும். இதில் ஏதாவது சிறப்பு வசதிகள் செய்யப்படுமானால் கூடுதலாக ஓரிரு கோடிகள் சேர்ந்துவிடும். அந்தவகையில், பார்த்தோமேயானால், நிச்சயம் அம்பானியன் பேந்தம் செரீஸ் VIII கார் ரூ. 13.5 கோடியை விட அதிகமானதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

ஏனென்றால், அம்பானி அதிக சொகுசான பயணத்தை விரும்புபவர் ஆவார். ஆகையால், பேந்தம் செரீஸ் VIII காரில் கூடுதல் சொகுசு வசதிகளை சேர்த்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், இந்த காரின் விலை பல மடங்கு அதிகரித்திருக்க வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன்

அம்பானியிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் செரீஸ் VIII காருக்கு அடுத்தப்படியான விலையில் குல்லினன் எஸ்யூவி காரே இருக்கின்றது. இது இந்தியாவில் ரூ. 6.95 கோடியில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், அம்பானியின் குல்லினன் கார் ரூ. 8 கோடிக்கும் அதிகமான மதிப்பில் உள்ளது. இதற்கு அவர் கூடுதலாக சேர்த்திருக்கும் சொகுசு அம்சங்களே முக்கிய காரணமாக உள்ளது.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

இந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட முதல் எஸ்யூவி மாடல் என்ற பெறுமையைக் கொண்டுள்ளது.

இந்த காரின் சஸ்பென்ஷன் அமைப்புகள் நாம் காரில் பயணிக்கின்றோம் என்ற அனுபவத்தை வழங்காது. மாறாக ஏதேவொரு லக்சூரியான வீட்டில் அமர்ந்துக் கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வையே நமக்கு வழங்கும். அந்தளவிற்கு அதீத சொகுசு வசதிகளை இந்த கார் தனக்குள் உள்ளடக்கியிருக்கின்றது.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

மேலும், இதன் வீல் பேஸ் சற்று உயர்வானதாக இருப்பதால் இதனை ஆஃப்-ரோடு வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த காரில் எம்மாதிரியான நிலப் பரப்பையும் சமாளிக்கின்ற வகையில் 6.8 லிட்டர் வி12 டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 560 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸால் இந்த எஞ்ஜின், காரின் அனைத்து (4) வீல்களுக்கும் இழுவை திறனை வழங்கும் தன்மைக் கொண்டுள்ளது.

அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

ரோல்ஸ் ரோய்ஸ் பேந்தம் ட்ராப் ஹெட் கூப் (டிஎச்சி)

அம்பானி குடும்பத்தினர் முதன் முதல் வாங்கிய ரோல்ஸ் ராயஸ் கார் இதுவே ஆகும். தற்போது வரை இந்த மிகவும் அரிதினும் அரிதாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கார் இந்தியாவில் ரூ. 9 கோடிக்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்களைப் போலவே அம்பானியின் இந்த காரும் சில மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்கள் காரணமாக இதைவிட சற்று உயர்ந்த விலையைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த காருடை உடலின் தோற்றம் வேறு மாதிரியாகவும், ரூஃபின் தோற்றம் வேறு மாதிரியானதாகவும் இருக்கும். இந்த ரூஃப் மடித்துக் கொள்ளும் தன்மைக் கொண்டது என்ற காரணத்தினாலயே இந்த நிற மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன்காரணமாகவே, பேந்தம் ட்ராப் ஹெட் கூப் என்ற பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த காரிலும் 6.8 லிட்டர் வி12 டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினே காணப்படுகின்றது. இது அதிகபட்சமாக 460 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ambanis Owned 3 Rolls Royce Cars. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X