பெட்ரோல் பங்க்கில் எந்த பக்கத்தில் காரை நிறுத்துவது என்று குழம்புகிறீர்களா? கண்டறிய எளிய வழி இதோ...

நண்பர்கள் போன்ற மற்றவர்களது கார்களை ஓட்டும்போது நமக்கு ஏற்படும் குழப்பங்களில் ஒன்று, எரிபொருளை எந்த பக்கத்தில் நிரப்புவது என்பதும் ஆகும். இதன் காரணமாக எரிபொருள் நிலையங்களில் வாகனத்தை எந்த புறத்தில் நிறுத்துவது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுவது உண்டு.

பெட்ரோல் பங்க்கில் எந்த பக்கத்தில் காரை நிறுத்துவது என்று குழம்புகிறீர்களா? கண்டறிய எளிய வழி இதோ...

இது சில சமயங்களில் நமது சொந்த கார்களில் கூட ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க பலர் பக்கவாட்டு கண்ணாடிகள் மூலமாக எரிவாயு செலுத்தும் குழாயினை கண்டறிய முயற்சிக்கின்றனர். இருப்பினும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தோற்றுதான் போகிறார்கள்.

பெட்ரோல் பங்க்கில் எந்த பக்கத்தில் காரை நிறுத்துவது என்று குழம்புகிறீர்களா? கண்டறிய எளிய வழி இதோ...

இத்தகைய மன குழப்பங்கள் சில நேரங்களில் சிறிய விபத்துகளில் முடிந்துள்ள நிகழ்வுகளையும் நாம் பார்த்துள்ளோம். சில எரிபொருள் நிலையங்களில் பிரச்சனை இருக்காது, பம்ப் நன்கு நீளமாக நாம் தவறாக காரை நிறுத்தியிருந்தாலும், எரிபொருள் செலுத்தும் குழாய் வரையில் வரும். ஆனால் சில நிலையங்களில் அவ்வாறு இருக்காது.

பெட்ரோல் பங்க்கில் எந்த பக்கத்தில் காரை நிறுத்துவது என்று குழம்புகிறீர்களா? கண்டறிய எளிய வழி இதோ...

இந்த குழப்பத்திற்கு மிக எளிதான தீர்வு எங்களிடம் உள்ளது. இது பலருக்கு தெரிந்திருக்கலாம். சிலருக்கு தற்போதுதான் தெரிந்து ஆச்சியரிப்படுத்தலாம். அது ஒன்று இல்லங்க, காரின் உள்ளே வேகமானி உள்ளிட்டவை அடங்கிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரிலேயே எரிபொருள் நிலையத்தில் எந்த பக்கம் காரை நிறுத்த வேண்டும் என்பது சிறிய லோகோ மற்றும் அம்புகுறியுடன் காட்டப்படுகிறது. சரியாக கீழே உள்ள படத்தில் உள்ளதை போன்றுதான்.

பெட்ரோல் பங்க்கில் எந்த பக்கத்தில் காரை நிறுத்துவது என்று குழம்புகிறீர்களா? கண்டறிய எளிய வழி இதோ...

இந்த வசதி கடந்த இரண்டு தசாப்தங்களாக கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. காருக்கு கார் இது தொடர்பான லோகோ வழங்கப்படும் இடம் மாறுப்படுகிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் கடன் வாங்கிய அல்லது வாடகைக்கு எடுத்த காரை இயக்கும்போது எரிவாயு நிலையத்தை அடையும் முன்பு, டாஷ்போர்டு எரிபொருள் அளவைப் பாருங்கள்.

பெட்ரோல் பங்க்கில் எந்த பக்கத்தில் காரை நிறுத்துவது என்று குழம்புகிறீர்களா? கண்டறிய எளிய வழி இதோ...

அம்புடன் கூடிய எரிவாயு விசையியக்க குழாயின் லோகோ படத்தைப் பார்ப்பீர்கள். அம்பு எந்த வழியில் சுட்டிக்காட்டுகிறதோ அந்த பாகத்தில் எரிபொருள் குழாயினை கார் கொண்டுள்ளது என்று அர்த்தம். ஒரு சில கார்களில் எரிபொருள் குழாய் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை காட்டும் அம்புக்குறி வழங்கப்படுவதில்லை.

பெட்ரோல் பங்க்கில் எந்த பக்கத்தில் காரை நிறுத்துவது என்று குழம்புகிறீர்களா? கண்டறிய எளிய வழி இதோ...

இத்தகைய கார்களில் வெளியே வந்து குழாயின் இருப்பிடத்தை கண்டறிவதே ஒரு வழி. ஏனெனில் லோகோவில் குழாய் வழங்கப்பட்டுள்ள திசையை வைத்து கண்டறியலாம் என்று பார்த்தால் சில கார்களில் இது தவறாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
What Side of Your Car Is the Gas Tank on This Easy Trick Will Tell You Every Time
Story first published: Tuesday, November 3, 2020, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X