பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகன்! தாராள மனசுடன் புத்தம் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் நாட்டை வலம் வந்த தாய்-மகனுக்கு ஆனந்த் மஹிந்திரா புத்தம் புதிய காரை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

பஜாஜ் நிறுவனத்தின் பழைய மாடல் சேத்தக் ஸ்கூட்டரில் இந்தியாவை வலம் வந்த காரணத்திற்காக தாய், மகன் இருவரை நெட்டிசன்கள் முதல் நாட்டு மக்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியா மட்டுமில்லாது நேபாளம், பூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளையும் இவ்விருவர் குழுவினர் சுற்றி வந்திருக்கின்றனர். ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளும் விதாகவே இருவரும் நான்கு நாடுகளை வலம் வந்திருக்கின்றனர்.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கிய இவர்களின் பயணம் மிக சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. இரண்டு வருடங்கள் மற்றும் 8 மாதங்கள் செய்யப்பட்ட இந்த ஆன்மீக பயணத்தில் சுமார் 57,000 கிலோ மீட்டரை பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் உதவியைக் கொண்டே இருவரும் கடந்திருக்கின்றனர்.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

இந்த சம்பவம் நாடு முழுவதும் வைரலானதை அடுத்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இவ்விருவரையும் பாராட்டும் விதமாக மஹிந்திரா கேயூவி100 காரை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இருவருக்கும் காரை வழங்குவது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

முன்னதாக, தாய்-மகன் இருவரும் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்த ஆனந்த் மஹிந்திரா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இவர்களுக்கு மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவி கார் பரிசாக தற்போது வழங்கப்பட்டுள்ளது.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

கர்நாடகா மாநிலம் மைசூரை அடுத்துள்ள போகடி எனும் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருக்கு வயது 41. இவரின் தாயார் சுதா ரத்னம்மா (வயது 71). இவ்விருவரும்தான் 32 மாதங்கள் ஆன்மீக பயணத்தை பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் மூலம் வெற்றிகரமாக முடித்து தற்போது சொந்த ஊர் திரும்பியவர்கள்.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

கிருஷ்ணகுமார் திருமணமாகதவர் என கூறப்படுகின்றது. எனவேதான் தனது தந்தையின் இறப்பிற்கு பின்னர், தாயின் சோகத்தைத் தீர்க்கும் விதமாக பல ஊர்களுக்கு அழைத்து சென்று புகழ்பெற்ற கோயில்களை தரிசித்திருக்கின்றனர். முதலில் கர்நாடகாவில் ஆரம்பித்த இவர்களின் பயணம், அப்படியே தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா என நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கின்றது.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

இந்த ஒட்டுமொத்த பயணத்திற்குமே பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை மட்டுமே இவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த ஸ்கூட்டர் கிருஷ்ணகுமாரின் தந்தை தட்சிணாமூர்த்தியுடையது ஆகும். இதன் மீதிருக்கும் சென்டிமென்ட்டின் காரணமாகவே பழைய வாகனமாக இருந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்து அதிலேயே பல ஆயிரம் கிலோ மீட்டர்களை இருவரும் கடந்திருக்கின்றனர்.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

கிருஷ்ணகுமார், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே தனது தாய் சுதா ரத்னம்மாவின் நேர்த்தி கடன்களைப் பூர்த்தி செய்ய, தனது வேலையை ராஜினாமா அவர் செய்தார். இதைத்தொடர்ந்தே நீண்ட நெடிய பயணம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த பயணத்தின் முடிவையும் அவர்கள் எட்டியிருக்கின்றனர்.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

பயணத்தின் நினைவலைகள் ஓய்வதற்கு முன்னதாகவே தாய்-மகன் இருவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, சொந்த ஊரை வந்து சேர்ந்தவர்களுக்கு புத்தம் புதிய காரை மஹிந்திர நிர்வாகம் பரிசாக வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை டிஎன்ஐஇ மற்றும் சிட்டி டுடோ எனும் செய்தி தளங்கள் உறுதிச் செய்திருக்கின்றன.

 சூப்பர்! பழைய ஸ்கூட்டரில் வலம் வந்த தாய்-மகனுக்கு அடித்த ஜாக்பாட்! தாராள மனசுடன் புதிய காரை வாரி வழங்கிய ஆனந்த் மஹிந்திரா...

இந்த தகவலின்படி, புத்தம் புதிய மஹிந்திரா கேயூவி100 காரை மைசூர் மஹிந்திரா கார் விற்பனையாளர் கடந்த 18ம் தேதியே வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இக்கார், இந்தியாவில் ரூ. 5.50 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிஎஸ்6 எஞ்ஜின் வசதியுடன் நான்கு விதமான தேர்வுகளில் இக்கார் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திர கேயூவி100 காரில் பிஎஸ்6 தரத்திலான 1.2 லிட்டர் எம்-ஃபேல்கன் ஜி80 நேட்சுரல்லி அஸ்பயர்ட் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 115 என்எம் டார்க்கை 3,600 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இதே திறனைதான் பிஎஸ்4 கேயூவி100 மாடலும் வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand Mahindra Gifts KUV100 Micro SUV To Who Takes All India Road Trip On Scooter. Read In Tamil.
Story first published: Saturday, September 26, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X