Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Lifestyle
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன்! ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க!
மீண்டுமொரு முறை ஒட்டுமொத்த இந்தியாவையே பொறாமை அடையச் செய்கின்ற வகையில் ஆந்திர அரசு நடந்துக் கொண்டுள்ளது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் அம்மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் மற்ற மாநில மக்கள் மத்தியில், நமக்கு இதுபோன்ற ஓர் முதலமைச்சர் கிடைக்கவில்லையே என்று பொறாமைக் கொள்ளும் அளவிற்கு அவரின் ஆட்சி அங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

இதை உறுதிச் செய்கின்ற வகையில், தற்போதைய கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் செய்துள்ளார். உதாரணமாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவியளிக்கும் விதமாக அறிவித்த நிதியுதவி திட்டம் நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருந்தது.

இத்திட்டத்தின்படி, சலவைத் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்கள் என பல கூலித் தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன்மூலம் 2.47 லட்சம் பேர் பயனடைந்தனர். இதற்காக 247 கோடி ரூபாயை அவர் நேரடியாக ஒதுக்கி வைத்தார்.

இதுமட்டுமின்றி, கொரோனாவால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி டிரைவர்களுக்கும் உதவியளிக்கும் விதமாக ரூ.10 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கினார். இவ்வாறு, பல பிரம்மாண்ட திட்டங்களை அவர் மாநில மக்களின் நலனுக்காக மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், மீண்டும் மற்ற மாநில மக்களையும், மாநில அரசுகளையும் வாயை பிளக்க வைக்கின்ற வகையில் புதிதாக 1,068 ஆம்புலன்ஸ்களை ஆந்திர அரசு களமிறக்கியிருக்கின்றது. இவைனைத்தும், மஹராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

இந்த நிறுவனத்திடம் இருந்தே உயிர்காக்கும் உண்ணத பணியை மேற்கொள்வதற்காக 1,068 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், 130 ஆம்புலன்ஸ்கள் அட்வான்ஸ்ட் உயிர் காக்கும் கருவிகளைக் கொண்ட மாடலாகும். மீதமுள்ள 938 ஆம்புலன்ஸ்களில் 282 ஆம்புலன்ஸ்கள் அடிப்படை பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ்கள் ஆகும்.

கடைசியாக எஞ்சியிருக்கும் 656 யூனிட்டுகளுமே கிராமப்புறப் பகுதி மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் கேம்ப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் நிறம், கூடுதல் அம்சம் மற்றும் டயல் (104 மற்றும் 108) எண்களின்மூலம் அடையாளம் காண முடிகின்றது.

நாடே கொடிய வைரஸ் கொரோனாவிடம் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், மக்களைக் காக்கும் பணியில் எந்தவொரு தடங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக இத்தகைய அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் இந்தளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்களை களமிறக்கியதில்லை என கூறப்படுகின்றது. ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் ஆந்திராவின் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, ஆந்திர அரசின் வரலாற்றில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அரசின் வரலாற்றிலுமே மிக முக்கியமான இடத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிடித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, மண்டலத்திற்கு ஒரு 104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைக் கொண்டு வரப்படும் என அறவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொரோனாவின் இக்கட்டான காலத்தில் 104 மற்றும் 108 ஆகிய டயல் எண் அடையாளங்களைக் கொண்ட உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது, "அவசர காலங்களில் பொதுமக்கள் அழைப்பு விடுத்தால், நகர்ப்புறங்களில் 15 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் 20 நிமிடங்களிலும், மலைவாழ் கிராமங்களில் 30 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ்கள் சென்று சேரும் வகையில் இந்த ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன" என்றார்.

ஒட்டுமொத்த ஆம்புலன்ஸ்களையுமே இன்று (ஜூலை 1) விஜயவாடாவில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றில் கொடியசைத்து முதலமைச்சர் ஜெகன் மோடி ரெட்டி அனுப்பி வைத்தார். இவை மக்களின் நலனைக் காக்கம் விதமாக கொரோனா மற்றும் பிறி வியாதிகளுக்கு எதிராக போராட இருக்கின்றன.