ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் கொண்டு வரப்பட்டுள்ள அதிரடியான புதிய வசதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

இன்றைய சூழலில் பெரும்பாலானோரிடம் சொந்தமாக கார் இருக்கிறது. உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகிய அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் தற்போது காரும் சேர்ந்து விட்டது. எனவே குறைந்தபட்சம் செகண்ட் ஹேண்டிலாவது ஒரு காரை வாங்கி வீட்டில் நிறுத்தி கொள்கின்றனர். அதே சமயம் கார் இல்லாமலும் ஏராளமானோர் இருக்கவே செய்கின்றனர்.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

அவ்வாறு கார் இல்லாதவர்கள் டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பிக்கும்போது தர்மசங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது. நீங்கள் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தால், டிரைவிங் சோதனைகளுக்கு சொந்தமாக கார் எடுத்து செல்ல வேண்டும். உங்களிடம் கார் இருந்து விட்டால் பிரச்னை இல்லை. வேலை எளிதாக முடிந்து விடும்.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

அல்லது உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரிடமாவது கார் இருந்தால் கூட, அவர்களிடம் பெற்று கொள்ளலாம். ஆனால் இந்த இரு வழிகளிலும் ஒரு சிலரால் காரை ஏற்பாடு செய்ய முடிவதில்லை. இதனால் அவர்கள் தர்ம சங்கடங்களுக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில், அதிரடியான புதிய நடைமுறை ஒன்று தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்து விட்டு, டிரைவிங் சோதனைகளுக்கு நீங்கள் செல்லும்போது, ஆர்டிஓ அலுவலகத்திலேயே காரை வாடகைக்கு எடுத்து கொள்ள முடியும். அதுவும் குறைவான கட்டணத்தில் என்பது கூடுதல் சிறப்பு. டிரைவிங் சோதனைகளுக்கு செல்லும்போது கார் ஏற்பாடு செய்ய முடியாதவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

டெல்லி அரசின் போக்குவரத்து துறைதான் இந்த தனித்துவமான புத்தாண்டு பரிசினை டெல்லிவாசிகளுக்கு வழங்கியுள்ளது. புது டெல்லியின் சராய் காலே கான் ஆர்டிஓ அலுவலகத்தில், டிரைவிங் லைசென்ஸ் கோரி விண்ணப்பம் செய்பவர்கள், டிரைவிங் சோதனைகளுக்கு காரை ஏற்பாடு செய்வது குறித்து இனிமேல் கவலைப்பட வேண்டியதில்லை.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

வாடகைக்கு காரை வழங்கும் போக்குவரத்து துறையின் புதிய திட்டத்திற்குதான் இதற்காக அவர்கள் நன்றி சொல்ல வேண்டும். தற்போது சராய் காலே கான் ஆர்டிஓ அலுவலகத்தில் சோதனை முயற்சியாக இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன்படி அங்கு விண்ணப்பதாரர்கள் டிரைவிங் சோதனைகளின்போது காரை வாடகைக்கு எடுத்து கொள்ள முடியும்.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஒரு டெஸ்ட்டிற்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். சராய் காலே கான் ஆர்டிஓ அலுவலகத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், டெல்லியில் உள்ள மற்ற ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டிரைவிங் சோதனைகளில் பங்கேற்பதற்கு விண்ணப்பதாரர்கள் அவர்களாகவே காரை கொண்டு வர வேண்டும். ஆனால் கார் இல்லாதவர்களுக்கு இது சிரமத்தை கொடுக்கிறது. அவர்களுடைய குடும்பத்தில் வேறு யாரிடமும் சொந்தமாக கார் இல்லையென்றாலும் சிரமம்தான்.

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு உதவி செய்வதற்காக வாடகைக்கு கார் வழங்கும் திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளோம். தற்போது 2 மாருதி வேகன் ஆர் கார்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. நியாயமான கட்டணம்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட்டிற்கு 200 ரூபாய். லாபமும் வேண்டாம், நஷ்டமும் வேண்டாம் என்ற அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

ஓசி கார் கேட்டு அலைய வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் புதிய அதிரடி! இந்தியாவில் முதல் முறை

டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பதாரர்களின் பலனை மனதில் வைத்து மட்டுமே இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்'' என்றனர். இந்தியாவில் இப்படி ஒரு வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

டிரைவிங் டெஸ்ட்களுக்கு ஆர்டிஓ அலுவலகத்திலேயே வாடகை கார் கிடைப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே சமயம் டிரைவிங் லைசென்ஸ் பெற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஆம், ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால், டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் தற்போது புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இந்தியாவை பொறுத்தவரை டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது என்பது அவ்வளவு கடினமான காரியம் ஒன்றும் கிடையாது. வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினால் கூட, மிக எளிதாகவே டிரைவிங் லைசென்ஸை வாங்கி விட முடியும்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஆனால் லைசென்ஸ் பெற வேண்டுமானால், அதற்கென நடத்தப்படும் டிரைவிங் சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டிரைவிங் சோதனைகளும் மிக எளிதானதுதான். அத்துடன் ஒருவரின் டிரைவிங் திறன்கள் பெரிய அளவில் சோதித்தும் பார்க்கப்படாது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

எனவே டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால், பெரிதாக அலட்டி கொள்ள வேண்டியதில்லை. ஆனால் புதிதாக டிரைவிங் லைசென்ஸ் வாங்க விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது புதிய பிரச்னை ஒன்று ஏற்பட்டுள்ளது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்ட தெரியாதவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க புனே ஆர்டிஓ மறுத்து வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ்செய்தி வெளியிட்டுள்ளது. இன்றைய சூழலில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்கள் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதனால் பலருக்கும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்ட தெரிவதில்லை. எனவே புனேவிற்கு அருகே போசரியில் உள்ள டிரைவிங் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்படும் டிரைவிங் சோதனைகளில் கடந்த சில மாதங்களாக பலர் தோல்வியடைந்து வருகின்றனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

அத்துடன் தோல்வியடையும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டும் வருகிறது. புனே ஆர்டிஓ அலுவலகம் சார்பில், ஒரு நாளைக்கு சுமார் 220 டிரைவிங் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில், 10-20 விண்ணப்பதாரர்கள் தோல்வியடைந்து விடுகின்றனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இவ்வாறு தோல்வியடையும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இதுகுறித்து டிரைவிங் பயிற்சி பள்ளி உரிமையாளரும், புனே ஆர்டிஓ அலுவலகத்தின் அங்கீகாரம் பெற்ற ஏஜெண்ட்டுமான ரவி அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதுகுறித்து அவர் கூறுகையில், சொந்தமாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார் வைத்திருப்பவர்கள் பலரும் எங்கள் டிரைவிங் பயிற்சி பள்ளிக்கு வருகின்றனர். அந்த காரில்தான் அவர்கள் டிரைவிங் பழகுகின்றனர். ஆனால் டிரைவிங் சோதனைகளின்போது இது அவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தி விடுகிறது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஏனெனில் டிரைவிங் சோதனைகளின்போது, ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களுக்கு பதிலாக மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டும்படி அவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்களில் பலருக்கும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்ட தெரியாது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதனால் சோதனையில் தோல்வியடைந்து விடுகின்றனர். தற்போதைய நிலையில் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை வாங்குவதை காட்டிலும், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களை வாங்குவதற்குதான் மக்கள் தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

எனவே ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களை டிரைவிங் சோதனைகளின்போது பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஆர்டிஓ செய்ய வேண்டும். டிரைவிங் சோதனைகளில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் தோல்வியடைகின்றனர்'' என்றார்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஆனால் இதற்கு முன்பாகவும் கூட ஒரு சில ஆர்டிஓ அலுவலகங்களில் இதே பிரச்னை நடைபெற்றுள்ளது. குறிப்பாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் காருடன் சென்ற தன்னை டிரைவிங் சோதனைகளுக்கு அனுமதிக்கவில்லை என பெண் ஒருவர் டிவிட்டரில் புகார் தெரிவித்தார்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதன் பின்பு இந்த விவகாரம் கவனம் ஈர்த்தது. ஆனால் அதன்பின்பு டிரைவிங் லைசென்ஸ் சோதனைகளுக்கு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களையும் அனுமதிக்க வேண்டும் என அனைத்து ஆர்டிஓக்களுக்கும் போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதுகுறித்து டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் ஆட்டோமெட்டிக் கார்களை டிரைவிங் லைசென்ஸ் சோதனைகளுக்கு அனுமதிப்பது தொடர்பாக தெளிவான நெறிமுறைகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதன் காரணமாகதான் இந்த விவகாரத்தை ஒவ்வொரு ஆர்டிஓக்களும் ஒவ்வொரு வழிகளில் கையாண்டு வருகின்றனர். உண்மையில் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை எப்படி இயக்க வேண்டும்? என்பதை அனைவரும் தெரிந்து வைத்து கொள்வது நல்லதுதான்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஆனால் தற்போது உள்ள சூழலை பார்த்தால், எதிர்காலத்தில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்கள் பெரும் வளர்ச்சியை சந்திக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இதனையும் நம்மால் திட்டவட்டமாக மறுத்து விட முடியாது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஏனெனில் வாகனப் பெருக்கத்தால் திக்கித் திணறும் நகரச் சாலைகளில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களால் கால் கடுத்தவர்கள் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். ஆட்டோமெட்டிக் கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இப்படிப்பட்ட சூழலில் புனே ஆர்டிஓ அலுவலகத்தில் எழுந்துள்ள பிரச்னை புதிதாக டிரைவிங் லைசென்ஸ் பெற முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
English summary
Applicants Can Now Rent A Car For Driving Licence Test. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X