Just In
- 10 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Movies
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டீசலுக்கு குட்பை... திருப்பதியில் விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம்... பக்தர்கள் மகிழ்ச்சி...
திருப்பதி திருமலையில் விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கி வருகின்றன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதன் பலனாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்து வாகனங்களை எலெக்ட்ரிக் மயமாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்படி ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம், திருப்பதி திருமலையில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்கவுள்ளது.

வெங்கடாஜலபதியை தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. திருமலை புனித தலம் என்பதால், அதனை கார்பன் உமிழ்வு அறவே இல்லாத பகுதியாக வைத்திருக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரும்புகிறது. எனவே டீசல் பேருந்துகளுக்கு பதிலாக எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாரிய தலைவர் சுப்பா ரெட்டி இந்த தகவலை கூறியுள்ளார். புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அவர் நேர்மறையாக பதில் அளித்துள்ளார்.

எனவே ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில், முதலில் 100 முதல் 150 எலெக்ட்ரிக் பேருந்துகள் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டீசல் பேருந்துகளால் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்கப்பட்டு, காற்றின் தரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இங்கு மட்டுமல்லாது, நாடு முழுக்க புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்யும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், 26 புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளை பெஸ்ட் நிறுவனம் சமீபத்தில் பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது மும்பையில் பேருந்து சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் ஆகும்.

இதேபோல் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டெல்லி போக்குவரத்து கழகமும், சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய 1,250 தாழ் தள ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்துகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.
Note: Images used are for representational purpose only.